ஞாயிறு, செப்டம்பர் 30, 2018

குறள் எண்: 1155 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 116 - பிரிவு ஆற்றாமை; குறள் எண்: 1155}

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு

விழியப்பன் விளக்கம்: காப்பதாயின், வாழ்க்கைத் துணையாக அமைந்தவரின் பிரிவு நிகழாமல் காக்கவேண்டும்! மாறாய், அவர் பிரிந்து விலகினால்; சேர்வது அரிதாகும்!
(அது போல்...)
தடுப்பதாயின், கொடுங்கோல் ஆட்சியை அளிப்போரின் காலம் நீளாமல் தடுக்கவேண்டும்! மாறாய், அவர் வென்று திரும்பினால், மீள்வது அரிதாகும்!

சனி, செப்டம்பர் 29, 2018

குறள் எண்: 1154 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 116 - பிரிவு ஆற்றாமை; குறள் எண்: 1154}

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு

விழியப்பன் விளக்கம்: "அச்சம் வேண்டாம்! உனைப் பிரியேன்!" என உறுதி அளித்தவர் பிரிந்தால்; அவரின் ஐயமற்ற வாக்கை நம்பியோர்க்கு, குற்றம் ஏதும் உண்டோ?
(அது போல்...)
"தயக்கம் வேண்டாம்! உமைக் காப்போம்!" என பிரச்சாரம் செய்தோர் கைவிட்டால்; அவர்களின் பகட்டான பேச்சை நம்பியோர்க்கு, பாவம் ஏதும் உண்டோ?

வெள்ளி, செப்டம்பர் 28, 2018

குறள் எண்: 1153 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 116 - பிரிவு ஆற்றாமை; குறள் எண்: 1153}

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்

விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவுடைய காதலரே ஆயினும், என்றோ ஓர் காலத்தில்; காதல் பிரிவு நிகழும் வாய்ப்பிறப்பதால், தெளிவான மனநிலையில் இருப்பது அரிதானது!
(அது போல்...)
சகலகலா வல்லவரே ஆயினும், எங்கோ ஓர் தொகுதியில்; ஊழல் விதை வளரும் வாய்ப்புள்ளதால், முழுமையான மாற்றத்தை நம்புவது அரிதாகிறது!

வியாழன், செப்டம்பர் 27, 2018

குறள் எண்: 1152 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 116 - பிரிவு ஆற்றாமை; குறள் எண்: 1152}

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு

விழியப்பன் விளக்கம்: என்னவரின் பார்வையும், இன்பம் அளிக்கும் இயல்புடையது! ஆனால் பிரிவை எண்ணி அஞ்சும் இந்நிலையில், அவரின் புணர்வு கூட துன்பத்தையே அளிக்கிறது!
(அது போல்...)
என்னம்மையின் உருவமும், அன்பை அருளும் தன்மையுடைது! ஆனால் முதுமை நோயில் வாடும் இந்நிலையில், அவரின் இருப்பு கூட வெறுப்பையே அளிக்கிறது!

புதன், செப்டம்பர் 26, 2018

குறள் எண்: 1151 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 116 - பிரிவு ஆற்றாமை; குறள் எண்: 1151}

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை

விழியப்பன் விளக்கம்: பிரிந்து செல்லாத நிலையிருப்பின், எனக்கு உரை! மாறாய், உன் "விரைவில் வருவேன்" போன்ற செய்தியை; வரும் வரை வாழும் இயல்பு உடையோருக்கு உரை!
(அது போல்...)
ஊழல் செய்யாத உறுதியிருப்பின், எமக்கு சொல்வீர்! மாறாய் உம் "இலவசம் அளிப்போம்" போன்ற வாக்குறுதியை; அளிக்கும் வரை ஏமாறும் இயல்பு உடையோருக்கு சொல்வீர்!

செவ்வாய், செப்டம்பர் 25, 2018

அதிகாரம் 115: அலர் அறிவுறுத்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 3 - காமம்இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்

1141.  அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
           பலரறியார் பாக்கியத் தால்

           விழியப்பன் விளக்கம்: எம் காதலைப் பொய்யாய் புனைந்து பேசுவதால், காதலின் ஆருயிர் 
           நீடித்து நிலைப்பதை; அப்படிப் பேசுவோர் அறியாதது, நான் செய்த நற்பேற்றால் தான்!
(அது போல்...)
           எம் தலைவரை எதிரியாய் நினைத்து விமர்சிப்பதால், இயக்கத்தின் மய்யம் மேலும் 
           திடமாவதை; அப்படி விமர்சிப்போர் உணராதது, அரசியல் மாற்றம் நிகழ்வதற்கு தான்!
      
1142.  மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
           அலரெமக்கு ஈந்ததிவ் வூர்

           விழியப்பன் விளக்கம்: அழகிய தாமரை மலரொத்த கண்களை உடைய, என்னவளின் 
           சிறப்பை அறியாமல்; இவ்வூரார் பொய்யாய் புனைந்து பேசி, எமக்குள் காதல் மலர்ந்திட 
           உதவினர்!
(அது போல்...)
           உயர்ந்த இமய மலையொத்த பொதுமை அறிந்த, எந்தலைவனின் திறத்தை உணராது; 
           ஊழலர்கள் பொய்யான விமர்சனங்கள் செய்து, பொதுமக்களிடம் அவரை சேர்க்க 
           உதவினர்!
           
1143.  உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
           பெறாஅது பெற்றன்ன நீர்த்து

           விழியப்பன் விளக்கம்: ஊரார் அறிந்த பொய்யாய் புனைந்து பேசுதல், எம் காதலுக்கு 
           நேராதோ? பெறமுடியாத ஒன்றைப் பெற்றதற்கு இணையான மகிழ்வை, அளிக்கக் 
           கூடியதாயிற்றே அது?!
(அது போல்...)
           ஊழலர்கள் செய்யும் போட்டி அரசியல் விமர்சனம், எம் கட்சிக்கு வாராதோ? பல்வேறு 
           மேடைகள் மூலம் அடையமுடியாத ஆதரவை, அளிக்க வல்லதாயிற்றே அது?!  

1144.  கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
           தவ்வென்னும் தன்மை இழந்து

           விழியப்பன் விளக்கம்: ஊரார் பொய்யாய் புனைந்து பேசுவதால், காமம் சார்ந்த காதல் 
           வளர்கிறது! அப்படி பேசுதல் இல்லையென்றால், அடிப்படையை இழந்து காதல் 
           சிதைந்திருக்கும்! 
(அது போல்...)
           உறவினர் உரிமையாய் ஊடல் கொள்வதால், உறவு சார்ந்த குடும்பம் வளர்கிறது! அத்தகைய 
           ஊடல் இல்லையெனில், அன்பை இழந்து குடும்பம் அழிந்திருக்கும்!

1145.  களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
           வெளிப்படுந் தோறும் இனிது

           விழியப்பன் விளக்கம்: கள்ளுண்ணும் போதெல்லாம், கள்ளுண்பது சுவையளிப்பது போல்; 
           பொய்யாய் புனைந்து பேசும் போதெல்லாம், காமம் சேர் காதலும் இனிமையளிக்கும்!
(அது போல்...)
           அன்புறும் போதெல்லாம், அன்படைவது தெளிவளிப்பது போல்; மிகையாய் புகழ்ந்து பேசும் 
           போதெல்லாம்; உறவு சேர் குடும்பமும் மகிழ்வளிக்கும்!

1146.  கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
           திங்களைப் பாம்புகொண் டற்று

           விழியப்பன் விளக்கம்: நான் என் காதலரைக் கண்டது என்னவோ ஒருநாளே! ஆயினும், 
           பொய்யாய் புனைந்து பேசுவது என்னவோ; நிலவைப் பாம்பு விழுங்கியதற்கு இணையாக 
           இருக்கிறதே?!
(அது போல்...)
           தான் தன் தலைவனைக் கண்டது என்னவோ தொலைவிருந்தே! ஆயினும், மிகையாய் 
           அதிகாரம் செய்வது என்னவோ; யானையை எலி கொன்றதற்கு இணையாக இருக்கிறதே?!

1147.  ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
           நீராக நீளும்இந் நோய்

           விழியப்பன் விளக்கம்: ஊரார் பொய்யாய் புனையும் பேச்சு உரமாகவும், தாயின் அன்பில் 
           விளையும் கடுஞ்சொல் நீராகவும் அமைந்து; காதலுடன் சேர்ந்த காம நோய், செழித்து 
           வளரும்!
(அது போல்...)
           மக்கள் கோபமாய் இடித்து உரைப்பது உடலாகவும், தலைவனின் அறத்தில் விளையும் 
           வழிகாட்டல் உயிராகவும் அமைந்து; நேர்மையுடன் சேர்ந்த மக்கள் ஆட்சி, உயிர்த்து 
           பிறக்கும்!

1148.  நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
           காமம் நுதுப்பேம் எனல்

           விழியப்பன் விளக்கம்: காமம் சேர் காதலை, பொய்யாய் புனைந்து பேசி அழிப்போம் என 
           இவ்வூரார் சொல்வது; எரியும் நெருப்பை, நெய்யை ஊற்றி அழிப்போம் என்பது 
           போலிருக்கிறது!
(அது போல்...)
           மக்கள் சார் ஆட்சியை, ஒற்றை வரியை விதித்துக் காப்போம் என இவ்வரசுகள் சொல்வது; 
           அதீத தாகத்தை, நஞ்சைக் கொண்டு தணிப்போம் என்பது போலிருக்கிறது!

1149.  அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
           பலர்நாண நீத்தக் கடை

           விழியப்பன் விளக்கம்: "பொய்யாய் புனைந்து பேசுவதற்கு, வெட்கி விலகுவதா? அஞ்சாமை 
           பழகு!" என பழக்கிய காதாலர்; எனைப் பிரிந்த நிலையில், பலருக்கும் வெட்கப்பட 
           வைத்துவிட்டார்!
(அது போல்...)
           “வஞ்சகமாய் வீழ்த்த நினைப்போர்க்கு, அஞ்சி தோற்பதா? வைராக்கியம் பழகு” என 
           போதித்த குருவானவர்; உடலைப் பிரிந்த நிலையில், பலவற்றுக்கும் அச்சப்பட 
           வைத்துவிட்டார்!

1150.  தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
           கெளவை எடுக்கும்இவ் வூர்

           விழியப்பன் விளக்கம்: தாம் எதை வேண்டினாலும், அவர்தம் காதலர் அளிப்பர்! அதுபோல், 
           நாம் வேண்டும் பொய்யான புனைவுப் பேச்சை; இவ்வூர் மக்கள் அலராய் பேசுவர்!
(அது போல்...)
           பிள்ளைகள் எதை விரும்பினாலும், அவர்தம் பெற்றோர் அளிப்பர்! அதுபோல், நாம் விரும்பும் 
           மாயையான மக்கள் ஆட்சியை; இந்நாட்டு அரசியலார் வாக்குறுதியாய் அளிப்பர்!

குறள் எண்: 1150 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1150}

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்

விழியப்பன் விளக்கம்: தாம் எதை வேண்டினாலும், அவர்தம் காதலர் அளிப்பர்! அதுபோல், நாம் வேண்டும் பொய்யான புனைவுப் பேச்சை; இவ்வூர் மக்கள் அலராய் பேசுவர்!
(அது போல்...)
பிள்ளைகள் எதை விரும்பினாலும், அவர்தம் பெற்றோர் அளிப்பர்! அதுபோல், நாம் விரும்பும் மாயையான மக்கள் ஆட்சியை; இந்நாட்டு அரசியலார் வாக்குறுதியாய் அளிப்பர்!

திங்கள், செப்டம்பர் 24, 2018

குறள் எண்: 1149 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1149}

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை

விழியப்பன் விளக்கம்: "பொய்யாய் புனைந்து பேசுவதற்கு, வெட்கி விலகுவதா? அஞ்சாமை பழகு!" என பழக்கிய காதாலர்; எனைப் பிரிந்த நிலையில், பலருக்கும் வெட்கப்பட வைத்துவிட்டார்!
(அது போல்...)
“வஞ்சகமாய் வீழ்த்த நினைப்போர்க்கு, அஞ்சி தோற்பதா? வைராக்கியம் பழகு” என போதித்த குருவானவர்; உடலைப் பிரிந்த நிலையில், பலவற்றுக்கும் அச்சப்பட வைத்துவிட்டார்!

ஞாயிறு, செப்டம்பர் 23, 2018

குறள் எண்: 1148 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1148}

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்

விழியப்பன் விளக்கம்: காமம் சேர் காதலை, பொய்யாய் புனைந்து பேசி அழிப்போம் என இவ்வூரார் சொல்வது; எரியும் நெருப்பை, நெய்யை ஊற்றி அழிப்போம் என்பது போலிருக்கிறது!
(அது போல்...)
மக்கள் சார் ஆட்சியை, ஒற்றை வரியை விதித்துக் காப்போம் என இவ்வரசுகள் சொல்வது; அதீத தாகத்தை, நஞ்சைக் கொண்டு தணிப்போம் என்பது போலிருக்கிறது!

சனி, செப்டம்பர் 22, 2018

குறள் எண்: 1147 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1147}

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்

விழியப்பன் விளக்கம்: ஊரார் பொய்யாய் புனையும் பேச்சு உரமாகவும், தாயின் அன்பில் விளையும் கடுஞ்சொல் நீராகவும் அமைந்து; காதலுடன் சேர்ந்த காம நோய், செழித்து வளரும்!
(அது போல்...)
மக்கள் கோபமாய் இடித்து உரைப்பது உடலாகவும், தலைவனின் அறத்தில் விளையும் வழிகாட்டல் உயிராகவும் அமைந்து; நேர்மையுடன் சேர்ந்த மக்கள் ஆட்சி, உயிர்த்து பிறக்கும்!

வெள்ளி, செப்டம்பர் 21, 2018

குறள் எண்: 1146 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1146}

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று

விழியப்பன் விளக்கம்: நான் என் காதலரைக் கண்டது என்னவோ ஒருநாளே! ஆயினும், பொய்யாய் புனைந்து பேசுவது என்னவோ; நிலவைப் பாம்பு விழுங்கியதற்கு இணையாக இருக்கிறதே?!
(அது போல்...)
தான் தன் தலைவனைக் கண்டது என்னவோ தொலைவிருந்தே! ஆயினும், மிகையாய் அதிகாரம் செய்வது என்னவோ; யானையை எலி கொன்றதற்கு இணையாக இருக்கிறதே?!

வியாழன், செப்டம்பர் 20, 2018

குறள் எண்: 1145 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1145}

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது

விழியப்பன் விளக்கம்: கள்ளுண்ணும் போதெல்லாம், கள்ளுண்பது சுவையளிப்பது போல்; பொய்யாய் புனைந்து பேசும் போதெல்லாம், காமம் சேர் காதலும் இனிமையளிக்கும்!
(அது போல்...)
அன்புறும் போதெல்லாம், அன்படைவது தெளிவளிப்பது போல்; மிகையாய் புகழ்ந்து பேசும் போதெல்லாம்; உறவு சேர் குடும்பமும் மகிழ்வளிக்கும்!

புதன், செப்டம்பர் 19, 2018

குறள் எண்: 1144 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1144}

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து

விழியப்பன் விளக்கம்: ஊரார் பொய்யாய் புனைந்து பேசுவதால், காமம் சார்ந்த காதல் வளர்கிறது! அப்படி பேசுதல் இல்லையென்றால், அடிப்படையை இழந்து காதல் சிதைந்திருக்கும்! 
(அது போல்...)
உறவினர் உரிமையாய் ஊடல் கொள்வதால், உறவு சார்ந்த குடும்பம் வளர்கிறது! அத்தகைய ஊடல் இல்லையெனில், அன்பை இழந்து குடும்பம் அழிந்திருக்கும்!

செவ்வாய், செப்டம்பர் 18, 2018

குறள் எண்: 1143 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1143}

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து

விழியப்பன் விளக்கம்: ஊரார் அறிந்த பொய்யாய் புனைந்து பேசுதல், எம் காதலுக்கு நேராதோ? பெறமுடியாத ஒன்றைப் பெற்றதற்கு இணையான மகிழ்வை, அளிக்கக் கூடியதாயிற்றே அது?!
(அது போல்...)
ஊழலர்கள் செய்யும் போட்டி அரசியல் விமர்சனம், எம் கட்சிக்கு வாராதோ? பல்வேறு மேடைகள் மூலம் அடையமுடியாத ஆதரவை, அளிக்க வல்லதாயிற்றே அது?!

திங்கள், செப்டம்பர் 17, 2018

குறள் எண்: 1142 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1142}

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்

விழியப்பன் விளக்கம்: அழகிய தாமரை மலரொத்த கண்களை உடைய, என்னவளின் சிறப்பை அறியாமல்; இவ்வூரார் பொய்யாய் புனைந்து பேசி, எமக்குள் காதல் மலர்ந்திட உதவினர்!
(அது போல்...)
உயர்ந்த இமய மலையொத்த பொதுமை அறிந்த, எந்தலைவனின் திறத்தை உணராது; ஊழலர்கள் பொய்யான விமர்சனங்கள் செய்து, பொதுமக்களிடம் அவரை சேர்க்க உதவினர்!

ஞாயிறு, செப்டம்பர் 16, 2018

குறள் எண்: 1141 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1141}

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்

விழியப்பன் விளக்கம்: எம் காதலைப் பொய்யாய் புனைந்து பேசுவதால், காதலின் ஆருயிர் நீடித்து நிலைப்பதை; அப்படிப் பேசுவோர் அறியாதது, நான் செய்த நற்பேற்றால் தான்!
(அது போல்...)
எம் தலைவரை எதிரியாய் நினைத்து விமர்சிப்பதால், இயக்கத்தின் மய்யம் மேலும் திடமாவதை; அப்படி விமர்சிப்போர் உணராதது, அரசியல் மாற்றம் நிகழ்வதற்கு தான்!

சனி, செப்டம்பர் 15, 2018

அதிகாரம் 114: நாணுத்துறவு உரைத்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 3 - காமம்இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்

1131.  காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
           மடலல்லது இல்லை வலி

           விழியப்பன் விளக்கம்: காதல் பெருகியதால், காமம் மிகுந்து வருந்துவோர்க்கு; பனை 
           மட்டையில் செய்த குதிரையில் ஏறுவதை (மடல் ஏறுதல்) தவிர, அதிக பாதுகாப்பான 
           வலிமை வேறில்லை!
(அது போல்...)
           ஊழல் பெருகியதால், வாழ்வு இழந்து தவிப்போர்க்கு; மக்கள் ஆட்சியில் நிகழும் அரசியல் 
           மாற்றம் தவிர, சிறந்த வாழ்வியல் காரணி வேறில்லை!
      
1132.  நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
           நாணினை நீக்கி நிறுத்து

           விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவால் விளையும் காம வலியை, தாங்கமுடியாத உடம்பும் 
           உயிரும்; நாணத்தை விலக்கி வைத்துவிட்டு, காமமுற்றார் போல பனைமட்டைக் 
           குதிரையில் ஏறும்!
(அது போல்...)
           பொருள்தேடலில் நிகழும் வெளிநாட்டு வாழ்வை, தொடரமுடியாத எண்ணமும் செயலும்; 
           இயல்பை ஒதுக்கி வைத்துவிட்டு, பித்துப்பிடித்தார் போல கற்பனை உலகில் உலவும்!
           
1133.  நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
           காமுற்றார் ஏறும் மடல்

           விழியப்பன் விளக்கம்: முன்பு, நாணமுடன் சிறந்த ஆண்மையும் உடையேன்! இன்று, 
           காதலரைப் பிரிந்த காமமுற்றார் ஏறும்; பனைமட்டைக் குதிரையைக் கொண்டிருக்கிறேன்!
(அது போல்...)
           அன்று, அரசியலுடன் சிறந்த மக்களாட்சியும் அளித்தனர்! இன்று, மனிதம் மறந்த 
           தீவிரவாதிகள் போல்; காவல்படைத் துப்பாக்கியால் சுடுகின்றனர்!  

1134.  காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
           நல்லாண்மை என்னும் புணை

           விழியப்பன் விளக்கம்: காமம் எனும் கடுமையான காட்டாறு; நாணம் மற்றும் சிறந்த 
           ஆண்மை எனும் இரண்டு படகுகளையும், அதன் போக்கில் செலுத்தும் வல்லமை உடையது!
(அது போல்...)
           கள்ளக்காதல் எனும் தீவிரமான புயல்காற்று; குடும்பம் மற்றும் ஈன்ற பிள்ளைகள் எனும் 
           இரண்டு ஆலமரங்களையும், அதன் திசையில் பிடுங்கியெறியும் தன்மை கொண்டது!

1135.  தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
           மாலை உழக்கும் துயர்

           விழியப்பன் விளக்கம்: என்னில் பாதியாய் தொடர்ந்த, குறுவளையல்கள் அணிந்த 
           என்னவளே; பனைமட்டைக் குதிரை ஏறும் நிலையுடன், மாலையில் அனுபவிக்கும் 
           துயரையும் அளித்தாள்!
(அது போல்...)
           எம்மின் பிரதிநிதிகளாக வந்த, சிறுபதவிகள் வகித்த அரசியலாரே; பணவீக்க விகிதம் 
           உயரும் நிலையுடன், கொடுங்கோலில் வாழும் சூழலையும் அளித்தனர்!

1136.  மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
           படல்ஒல்லா பேதைக்கென் கண்

           விழியப்பன் விளக்கம்: என்னவளைப் பிரிந்திருக்கும், என் கண்கள் உறக்கம் இன்றி 
           தவிப்பதால்; பனைமட்டைக் குதிரை ஏறுவதை, உறுதியாய் நள்ளிரவிலும் நினைக்கிறேன்!
(அது போல்...)
           குடும்பத்தைப் பிரிந்திருக்கும், என் சிந்தனைகள் இயல்பை மீறி இருப்பதால்; விமானத்தில் 
           அமர்ந்து பயணிப்பதை, உண்மையெனக் கனவிலும் தொடர்கிறேன்!

1137.  கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
           பெண்ணின் பெருந்தக்க தில்

           விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவில் விளையும் காமம், கடலளவு துன்பமளிப்பினும்; 
           பனைமட்டைக் குதிரை ஏறிடாத, பெண்ணின் பேருறுதிக்கு நிகரானது ஏதுமில்லை!
(அது போல்...)
           வெளிநாட்டில் வாழும் தனிமை, மலையளவு ஆட்டுவிப்பினும்; அறமற்றப் பாதையில் 
           செல்லாத, ஆணின் மனக்கற்புக்கு இணையானது ஒன்றுமில்லை!

1138.  நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
           மறையிறந்து மன்று படும்

           விழியப்பன் விளக்கம்: "மன நிறைவு இல்லாதவர்/மிகவும் இரக்கத்துக்கு உரியவர்" 
           என்றெல்லாம் உணராமல்; மறைந்து இருப்பதைத் தவறி, எல்லோர் முன்பும் காமம் 
           வெளிப்படும்!
(அது போல்...)
           "வாழ்கை முழுமை இல்லாதவர்/சமுதாய ஒடுக்கத்திற்கு உள்ளானவர்" என்றெல்லாம் 
           ஆராயாமல்; அவர்களை ஆதரிப்பதை விடுத்து, எல்லோர் வாழ்விலும் ஊழல் துன்புறுத்தும்!

1139.  அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
           மறுகின் மறுகும் மருண்டு

           விழியப்பன் விளக்கம்: பொதுவெளியில் பேசப்படாததால், தன்னை எவரும் அறிவதில்லை     
           என எண்ணிதான்; எல்லோரும் அறியும்படி, காமம் - தெருவில் மயக்கத்துடன் சுற்றுகிறதோ?
(அது போல்...)
           மக்களிடம் ஆதரவில்லாததால், தன்னை எவரும் மதிப்பதில்லை என எண்ணிதான்; 
           எல்லோரும் வருந்தும்படி, ஊழல் - உலகில் அதிகாரத்துடன் வாழ்கிறதோ?

1140.  யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
           யாம்பட்ட தாம்படா ஆறு

           விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவில் விளையும் காமத்தை, உணரும் அறிவற்றோர்;       
           நானடைந்த துன்பத்தை தாமடைய வழியில்லை என்பது போல், இகழ்ந்து சிரிப்பர்!
(அது போல்...)
           துணையிறப்பில் விளையும் தனிமையை, புரியும் இயல்பற்றோர்; அவரின் நிலையை 
           தாமடைய வாய்ப்பில்லை என்பது போல், ஆதாயம் தேடுவர்!

குறள் எண்: 1140 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1140}

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு

விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவில் விளையும் காமத்தை, உணரும் அறிவற்றோர்; நானடைந்த துன்பத்தை தாமடைய வழியில்லை என்பது போல், இகழ்ந்து சிரிப்பர்!
(அது போல்...)
துணையிறப்பில் விளையும் தனிமையை, புரியும் இயல்பற்றோர்; அவரின் நிலையை தாமடைய வாய்ப்பில்லை என்பது போல், ஆதாயம் தேடுவர்!

வெள்ளி, செப்டம்பர் 14, 2018

குறள் எண்: 1139 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1139}

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு

விழியப்பன் விளக்கம்: பொதுவெளியில் பேசப்படாததால், தன்னை எவரும் அறிவதில்லை என எண்ணிதான்; எல்லோரும் அறியும்படி, காமம் - தெருவில் மயக்கத்துடன் சுற்றுகிறதோ?
(அது போல்...)
மக்களிடம் ஆதரவில்லாததால், தன்னை எவரும் மதிப்பதில்லை என எண்ணிதான்; எல்லோரும் வருந்தும்படி, ஊழல் - உலகில் அதிகாரத்துடன் வாழ்கிறதோ?

வியாழன், செப்டம்பர் 13, 2018

குறள் எண்: 1138 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1138}

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்

விழியப்பன் விளக்கம்: "மன நிறைவு இல்லாதவர்/மிகவும் இரக்கத்துக்கு உரியவர்" என்றெல்லாம் உணராமல்; மறைந்து இருப்பதைத் தவறி, எல்லோர் முன்பும் காமம் வெளிப்படும்!
(அது போல்...)
"வாழ்கை முழுமை இல்லாதவர்/சமுதாய ஒடுக்கத்திற்கு உள்ளானவர்" என்றெல்லாம் ஆராயாமல்; அவர்களை ஆதரிப்பதை விடுத்து, எல்லோர் வாழ்விலும் ஊழல் துன்புறுத்தும்!

புதன், செப்டம்பர் 12, 2018

குறள் எண்: 1137 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1137}

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்

விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவில் விளையும் காமம், கடலளவு துன்பமளிப்பினும்; பனைமட்டைக் குதிரை ஏறிடாத, பெண்ணின் பேருறுதிக்கு நிகரானது ஏதுமில்லை!
(அது போல்...)
வெளிநாட்டில் வாழும் தனிமை, மலையளவு ஆட்டுவிப்பினும்; அறமற்றப் பாதையில் செல்லாத, ஆணின் மனக்கற்புக்கு இணையானது ஒன்றுமில்லை!

செவ்வாய், செப்டம்பர் 11, 2018

குறள் எண்: 1136 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1136}

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்

விழியப்பன் விளக்கம்: என்னவளைப் பிரிந்திருக்கும், என் கண்கள் உறக்கம் இன்றி தவிப்பதால்; பனைமட்டைக் குதிரை ஏறுவதை, உறுதியாய் நள்ளிரவிலும் நினைக்கிறேன்!
(அது போல்...)
குடும்பத்தைப் பிரிந்திருக்கும், என் சிந்தனைகள் இயல்பை மீறி இருப்பதால்; விமானத்தில் அமர்ந்து பயணிப்பதை, உண்மையெனக் கனவிலும் தொடர்கிறேன்!

திங்கள், செப்டம்பர் 10, 2018

குறள் எண்: 1135 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1135}

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்

விழியப்பன் விளக்கம்: என்னில் பாதியாய் தொடர்ந்த, குறுவளையல்கள் அணிந்த என்னவளே; பனைமட்டைக் குதிரை ஏறும் நிலையுடன், மாலையில் அனுபவிக்கும் துயரையும் அளித்தாள்!
(அது போல்...)
எம்மின் பிரதிநிதிகளாக வந்த, சிறுபதவிகள் வகித்த அரசியலாரே; பணவீக்க விகிதம் உயரும் நிலையுடன், கொடுங்கோலில் வாழும் சூழலையும் அளித்தனர்!

ஞாயிறு, செப்டம்பர் 09, 2018

குறள் எண்: 1134 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1134}

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை

விழியப்பன் விளக்கம்: காமம் எனும் கடுமையான காட்டாறு; நாணம் மற்றும் சிறந்த ஆண்மை எனும் இரண்டு படகுகளையும், அதன் போக்கில் செலுத்தும் வல்லமை உடையது!
(அது போல்...)
கள்ளக்காதல் எனும் தீவிரமான புயல்காற்று; குடும்பம் மற்றும் ஈன்ற பிள்ளைகள் எனும் இரண்டு ஆலமரங்களையும், அதன் திசையில் பிடுங்கியெறியும் தன்மை கொண்டது!

சனி, செப்டம்பர் 08, 2018

குறள் எண்: 1133 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1133}

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்

விழியப்பன் விளக்கம்: முன்பு, நாணமுடன் சிறந்த ஆண்மையும் உடையேன்! இன்று, காதலரைப் பிரிந்த காமமுற்றார் ஏறும்; பனைமட்டைக் குதிரையைக் கொண்டிருக்கிறேன்!
(அது போல்...)
அன்று, அரசியலுடன் சிறந்த மக்களாட்சியும் அளித்தனர்! இன்று, மனிதம் மறந்த தீவிரவாதிகள் போல்; காவல்படைத் துப்பாக்கியால் சுடுகின்றனர்!

வெள்ளி, செப்டம்பர் 07, 2018

குறள் எண்: 1132 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1132}

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து

விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவால் விளையும் காம வலியை, தாங்கமுடியாத உடம்பும் உயிரும்; நாணத்தை விலக்கி வைத்துவிட்டு, காமமுற்றார் போல பனைமட்டைக் குதிரையில் ஏறும்!
(அது போல்...)
பொருள்தேடலில் நிகழும் வெளிநாட்டு வாழ்வை, தொடரமுடியாத எண்ணமும் செயலும்; இயல்பை ஒதுக்கி வைத்துவிட்டு, பித்துப்பிடித்தார் போல கற்பனை உலகில் உலவும்!

வியாழன், செப்டம்பர் 06, 2018

குறள் எண்: 1131 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1131}

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி

விழியப்பன் விளக்கம்: காதல் பெருகியதால், காமம் மிகுந்து வருந்துவோர்க்கு; பனை மட்டையில் செய்த குதிரையில் ஏறுவதை (மடல் ஏறுதல்) தவிர, அதிக பாதுகாப்பான வலிமை வேறில்லை!
(அது போல்...)
ஊழல் பெருகியதால், வாழ்வு இழந்து தவிப்போர்க்கு; மக்கள் ஆட்சியில் நிகழும் அரசியல் மாற்றம் தவிர, சிறந்த வாழ்வியல் காரணி வேறில்லை!