பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமை
0111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்
விழியப்பன் விளக்கம்: வேண்டியவர்/வேண்டாதவர் என்ற பேதமின்றி இருக்க முடிந்தால்;
அந்த நடுநிலைமை எனும் ஒப்பற்ற தகுதி, நன்மைப் பயக்கும்.
பாற்பட்டு ஒழுகப் பெறின்
விழியப்பன் விளக்கம்: வேண்டியவர்/வேண்டாதவர் என்ற பேதமின்றி இருக்க முடிந்தால்;
அந்த நடுநிலைமை எனும் ஒப்பற்ற தகுதி, நன்மைப் பயக்கும்.
(அது போல்...)
தன்கட்சி/எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி மக்களாட்சி அளித்தால்; அந்த சார்பின்மை
அறிந்த இணையற்ற அரசாட்சி, மக்களைக் காக்கும்.
அறிந்த இணையற்ற அரசாட்சி, மக்களைக் காக்கும்.
0112. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து
விழியப்பன் விளக்கம்: நடுநிலைமை கொண்டவரின் சுவடுச்-செல்வம் அழிவில்லாதது;
அவரைப் பின்தொடர்வோர்க்கும், வலிமையளிக்கும் தன்மையுடையது.
அவரைப் பின்தொடர்வோர்க்கும், வலிமையளிக்கும் தன்மையுடையது.
(அது போல்...)
பொதுவுடைமை காப்பவரின் ஆட்சிக்காலம் முடிவில்லாதது; அவரின் தொண்டர்களுக்கும்,
ஆளுமை அளிக்கக்கூடியது.
ஆளுமை அளிக்கக்கூடியது.
0113. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்
விழியப்பன் விளக்கம்: நன்மையையே தந்திடினும், நடுநிலைமையைத் தவறுவதால்
கிடைக்கும் செல்வத்தை, அன்றே அழித்திடல் வேண்டும்.
அன்றே யொழிய விடல்
விழியப்பன் விளக்கம்: நன்மையையே தந்திடினும், நடுநிலைமையைத் தவறுவதால்
கிடைக்கும் செல்வத்தை, அன்றே அழித்திடல் வேண்டும்.
(அது போல்...)
மகிழ்ச்சியையே அளித்திடினும், அறத்தை இழப்பதால் கிடைக்கும் உறவை; அக்கணமே
அறுத்தெறிதல் வேண்டும்.
0114. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்
விழியப்பன் விளக்கம்: ஒருவர் நடுநிலைமை உடையவரா? இல்லாதவரா?? என்பது, அவர்
விட்டுச்செல்லும் தாக்கத்தால் அறியப்படும்.
எச்சத்தாற் காணப்ப படும்
விழியப்பன் விளக்கம்: ஒருவர் நடுநிலைமை உடையவரா? இல்லாதவரா?? என்பது, அவர்
விட்டுச்செல்லும் தாக்கத்தால் அறியப்படும்.
(அது போல்...)
ஓராட்சி மக்கள்-நலனைப் பேணியதா? இல்லையா?? என்பது, அவ்வாட்சியைத்
தொடர்ந்து நடத்துவோரால் அறியப்படும்.
தொடர்ந்து நடத்துவோரால் அறியப்படும்.
0115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி
கோடாமை சான்றோர்க் கணி
விழியப்பன் விளக்கம்: அழிவும்/ஆக்கமும் இல்லாத, வாழ்க்கை ஏதுமில்லை என்பதால்;
உள்ளத்தால் நடுநிலைமையை தவறாதிருத்தலே, சான்றோர்க்கு அணிகலனாகும்.
சாடுதலைத் தவிர்த்தலே, வாதிடுவோர்க்கு சிறப்பாகும்.
உள்ளத்தால் நடுநிலைமையை தவறாதிருத்தலே, சான்றோர்க்கு அணிகலனாகும்.
(அது போல்...)
தோல்வியும்/வெற்றியும் இல்லாத, விவாதம் எதுவுமில்லை என்பதால்; விவாதத்தில்சாடுதலைத் தவிர்த்தலே, வாதிடுவோர்க்கு சிறப்பாகும்.
0116. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்
விழியப்பன் விளக்கம்: தன்னுள்ளம் நடுநிலைமையைத் தவிர்த்து, தகாதவற்றைச் செய்தால்;
"அழியப்போகிறோம்" என்று நாம் உணரவேண்டும்.
நடுவொரீஇ அல்ல செயின்
விழியப்பன் விளக்கம்: தன்னுள்ளம் நடுநிலைமையைத் தவிர்த்து, தகாதவற்றைச் செய்தால்;
"அழியப்போகிறோம்" என்று நாம் உணரவேண்டும்.
(அது போல்...)
தம்மாட்சி மக்கள்-நலனை மறந்து, ஊழல்களைப் பெருக்கினால்; "வீழப்போகிறோம்"
என்று அக்கட்சியினர் உணரவேண்டும்.
0117. கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
விழியப்பன் விளக்கம்: நடுநிலைமையோடு வாழ்ந்தும், வறுமையில் வாடுபவரை; ஒருபோதும்
- இவ்வுலகம் கெடுதலாய் எண்ணி, தூற்றாது.
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
விழியப்பன் விளக்கம்: நடுநிலைமையோடு வாழ்ந்தும், வறுமையில் வாடுபவரை; ஒருபோதும்
- இவ்வுலகம் கெடுதலாய் எண்ணி, தூற்றாது.
(அது போல்...)
அறநெறியோடு அரசாண்டும், சிக்கலில் இருப்போரை; எந்நிலையிலும் - மக்கள் தீயவராய்
எண்ணி, பேசமாட்டார்கள்.
0118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி
விழியப்பன் விளக்கம்: இரண்டுபுறமும் சமம்செய்து, அளவை நிர்ணயிக்கும் துலாக்கோல்
போல்; ஒருபக்கம் சாராமல் இருத்தல், சான்றோர்க்கு அழகு.
கோடாமை சான்றோர்க் கணி
விழியப்பன் விளக்கம்: இரண்டுபுறமும் சமம்செய்து, அளவை நிர்ணயிக்கும் துலாக்கோல்
போல்; ஒருபக்கம் சாராமல் இருத்தல், சான்றோர்க்கு அழகு.
(அது போல்...)
ஆண்/பெண் பாகுபாடின்றி, குழந்தைகளை நடத்தும் தாயைப் போல்; பாலின
வேறுபாடின்றி இருத்தல், சமுதாயத்துக்கு சிறப்பு.
0119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்
விழியப்பன் விளக்கம்: ஒருபுறம் சாராமல், உள்ளத்தில் அறத்தை மீறாமல்
இருக்கமுடிந்தால் - சொல்லிலும் அறமீறல் இருக்காது; அதுவே, நடுநிலைமையாம்.
இருக்கமுடிந்தால் - சொல்லிலும் அறமீறல் இருக்காது; அதுவே, நடுநிலைமையாம்.
(அது போல்...)
ஒருபாலினம் சாராமல், மகன்/மகள் பிரிவினை இல்லாமல் இருக்கப்பெற்றால் -
வளர்ப்பிலும் பிரிவினை இருக்காது; அவர்களே சிறந்த-பெற்றோராவர்.
வளர்ப்பிலும் பிரிவினை இருக்காது; அவர்களே சிறந்த-பெற்றோராவர்.
0120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
விழியப்பன் விளக்கம்: நடுநிலையோடு - பிறர் பொருளையும், தம் பொருளாய் கருதுவதே;
வியாபாரம் செய்வோருக்கு, சிறந்த வியாபார யுக்தியாகும்.
வியாபாரம் செய்வோருக்கு, சிறந்த வியாபார யுக்தியாகும்.
(அது போல்...)
பேரன்போடு - பிற குழந்தைகளையும், நம் குழந்தைகளாய் பேணுவதே; குழந்தை
வளர்ப்போர்க்கு, தேவையான வளர்ப்பு நெறியாகும்.
வளர்ப்போர்க்கு, தேவையான வளர்ப்பு நெறியாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை