{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமை; குறள் எண்: 0113}
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்
அன்றே யொழிய விடல்
விழியப்பன் விளக்கம்: நன்மையையே தந்திடினும், நடுநிலைமையைத் தவறுவதால் கிடைக்கும் செல்வத்தை, அன்றே அழித்திடல் வேண்டும்.
(அது போல்...)
மகிழ்ச்சியையே அளித்திடினும், அறத்தை இழப்பதால் கிடைக்கும் உறவை; அக்கணமே அறுத்தெறிதல் வேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக