{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமை; குறள் எண்: 0116}
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்
நடுவொரீஇ அல்ல செயின்
விழியப்பன் விளக்கம்: தன்னுள்ளம் நடுநிலைமையைத் தவிர்த்து, தகாதவற்றைச் செய்தால்; "அழியப்போகிறோம்" என்று நாம் உணரவேண்டும்.
(அது போல்...)
தம்மாட்சி மக்கள்-நலனை மறந்து, ஊழல்களைப் பெருக்கினால்; "வீழப்போகிறோம்" என்று அக்கட்சியினர் உணரவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
"நான் அழியப்போகிறேன்"
பதிலளிநீக்குஆம், இப்படி நினைப்பது நல்லது என்பதே நம் பெருந்தகை சொல்வது. அருமை. :)
நீக்கு