பால்: 1 - அறம்; இயல்: 04 - ஊழியல்; அதிகாரம்: 038 - ஊழ்
0371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி
விழியப்பன் விளக்கம்: செல்வம் பெருகுவதற்கான ஊழ் இருப்பின், முயற்சி வெளிப்படும்;
செல்வம் அழிவதற்கு மூலமான ஊழ் இருப்பின், அயர்ச்சி வெளிப்படும்.
போகூழால் தோன்றும் மடி
விழியப்பன் விளக்கம்: செல்வம் பெருகுவதற்கான ஊழ் இருப்பின், முயற்சி வெளிப்படும்;
செல்வம் அழிவதற்கு மூலமான ஊழ் இருப்பின், அயர்ச்சி வெளிப்படும்.
(அது போல்...)
ஒழுக்கம் மேம்படுவதற்கான சிந்தனை இருப்பின், அறச் செயல்கள் பெருகிடும்; ஒழுக்கம்
தரமிறக்குவதற்கான சிந்தனை இருப்பின், பாவச் செயல்கள்கள் பெருகிடும்.
0372. பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை
விழியப்பன் விளக்கம்: அழிவதற்கு ஆதாரமான ஊழ் இருப்பின், அறியாமை சூழ்ந்திடும்;
ஆக்கத்திற்கு ஆதாரமான ஊழ் இருப்பின், பகுத்தறிவு மேம்படும்.
ஆகலூழ் உற்றக் கடை
விழியப்பன் விளக்கம்: அழிவதற்கு ஆதாரமான ஊழ் இருப்பின், அறியாமை சூழ்ந்திடும்;
ஆக்கத்திற்கு ஆதாரமான ஊழ் இருப்பின், பகுத்தறிவு மேம்படும்.
(அது போல்...)
தீமைக்கு வித்திடும் செயல்கள் செய்திடின், அகந்தை பிறந்திடும்; நன்மைக்கு வித்திடும்
செயல்கள் செய்திடின், மனிதம் விளைந்திடும்.
0373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை யறிவே மிகும்
விழியப்பன் விளக்கம்: சிந்தனையை விதைக்கும், பல நூல்களைக் கற்றாலும்;
உண்மையான அறிவாகிய ஊழைப் பொறுத்தே, ஒருவரின் அறிவு மேலோங்கும்.
உண்மை யறிவே மிகும்
விழியப்பன் விளக்கம்: சிந்தனையை விதைக்கும், பல நூல்களைக் கற்றாலும்;
உண்மையான அறிவாகிய ஊழைப் பொறுத்தே, ஒருவரின் அறிவு மேலோங்கும்.
(அது போல்...)
சமுதாயத்தை மேன்மிக்கும், பல வழிமுறைகளை அறிந்தாலும்; சரியான காரணியாகிய
சுற்றத்தைப் பொறுத்தே, ஒருவரின் பொதுப்பணி சிறக்கும்.
0374. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு
விழியப்பன் விளக்கம்: ஊழ் வித்திடும் வாழ்வியல் இருவகையாகும். செல்வந்தர்
ஆவதற்கான ஊழும்; பகுத்தறிவர் ஆவதற்கான ஊழும் வெவ்வேறானவை.
தெள்ளிய ராதலும் வேறு
விழியப்பன் விளக்கம்: ஊழ் வித்திடும் வாழ்வியல் இருவகையாகும். செல்வந்தர்
ஆவதற்கான ஊழும்; பகுத்தறிவர் ஆவதற்கான ஊழும் வெவ்வேறானவை.
(அது போல்...)
சிந்தனை உருமாற்றும் மனிதர்கள் இருவகையாவர். சர்வாதிகாரி ஆவதற்கான
சிந்தனையும்; அன்புடையவர் ஆவதற்கான சிந்தனையும் தொடர்பற்றவை.
சிந்தனையும்; அன்புடையவர் ஆவதற்கான சிந்தனையும் தொடர்பற்றவை.
0375. நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
விழியப்பன் விளக்கம்: செல்வத்தை உயர்த்தும் முனைப்பில் - நல்லவை எல்லாம்
தீயவையாவதும்; தீயவை எல்லாம் நல்லதாவதும் - ஊழை ஒட்டியே அமையும்.
நல்லவாம் செல்வம் செயற்கு
விழியப்பன் விளக்கம்: செல்வத்தை உயர்த்தும் முனைப்பில் - நல்லவை எல்லாம்
தீயவையாவதும்; தீயவை எல்லாம் நல்லதாவதும் - ஊழை ஒட்டியே அமையும்.
(அது போல்...)
சுயத்தை மேம்படுத்தும் முயற்சியில் - எளியவை யாவும் சிரமமாவதும்; சிரமங்கள் யாவும்
எளியதாவதும் - வைராக்கியத்தைப் பொறுத்தே நிர்ணயமாகும்.
எளியதாவதும் - வைராக்கியத்தைப் பொறுத்தே நிர்ணயமாகும்.
0376. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம
விழியப்பன் விளக்கம்: அதீதமாய் பாதுகாப்பினும் - நமக்கு விதிக்கப்படாதது, நம்மை விட்டு
விலகிடும்; எங்கே கைவிட்டாலும் - நமக்கு விதிக்கப்பட்டது, நம்மை விட்டு விலகாது.
சொரியினும் போகா தம
விழியப்பன் விளக்கம்: அதீதமாய் பாதுகாப்பினும் - நமக்கு விதிக்கப்படாதது, நம்மை விட்டு
விலகிடும்; எங்கே கைவிட்டாலும் - நமக்கு விதிக்கப்பட்டது, நம்மை விட்டு விலகாது.
(அது போல்...)
எவ்வளவு முயன்றாலும் - வைராக்கியம் இல்லையேல், செயல்கள் முழுமை பெறாது;
குறைவாய் முயன்றாலும் - வைராக்கியம் இருப்பின், செயல்கள் முழுமை அடையும்.
0377. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது
விழியப்பன் விளக்கம்: உலகையே வகுத்தவன், வகுத்ததற்கு மாறாய்; கோடிக் கணக்கில்
சொத்துக்கள் சேர்த்தோர்க்கும், அவற்றை அனுபவித்தல் இயலாது.
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது
விழியப்பன் விளக்கம்: உலகையே வகுத்தவன், வகுத்ததற்கு மாறாய்; கோடிக் கணக்கில்
சொத்துக்கள் சேர்த்தோர்க்கும், அவற்றை அனுபவித்தல் இயலாது.
(அது போல்...)
செயலாக்கும் வைராக்கியம், வலிமை பெறாமல்; எண்ணற்ற வகையில் திட்டங்கள்
இருப்போர்க்கும், அவற்றை செயல்படுத்துதல் சாத்தியமில்லை.
0378. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
விழியப்பன் விளக்கம்: நிச்சயமான ஊழ்வினைத் துன்பங்கள், வருத்தாமல் தவறுமாயின்;
பொருளற்ற வறியவர்கள், துறவறம் மேற்கொள்வர்.
ஊட்டா கழியு மெனின்
விழியப்பன் விளக்கம்: நிச்சயமான ஊழ்வினைத் துன்பங்கள், வருத்தாமல் தவறுமாயின்;
பொருளற்ற வறியவர்கள், துறவறம் மேற்கொள்வர்.
(அது போல்...)
தீர்க்கமான சட்டத்தின் தண்டனைகள், வழங்கப்படாமல் இருக்குமாயின், அறமற்ற
மனிதர்கள், தீவிரவாதம் செய்திடுவர்.
0379. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
விழியப்பன் விளக்கம்: நல்வினைகள் நிகழும்போது, "தம்மால் என" அகம் மகிழ்வோர்;
தீவினைகள் நிகழும்போது, சோர்வடைந்து ஊழைப் பழிக்கூறுவது ஏனோ?
அல்லற் படுவ தெவன்
விழியப்பன் விளக்கம்: நல்வினைகள் நிகழும்போது, "தம்மால் என" அகம் மகிழ்வோர்;
தீவினைகள் நிகழும்போது, சோர்வடைந்து ஊழைப் பழிக்கூறுவது ஏனோ?
(அது போல்...)
புகழ் சேர்க்கும்போது, "தாமே காரணமென" மார்தட்டும் பெற்றோர்; அவமானம்
சேர்க்கும்போது, விமர்சித்துப் பிள்ளைகளைத் தண்டிப்பது ஏனோ?
0380. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
சூழினுந் தான்முந் துறும்
விழியப்பன் விளக்கம்: ஊழைவிட பேர்வலிமை கொண்டவை எவையுள்ளன?
எதுவொன்றை மாற்றாய் நினைத்திடினும்; ஊழே எல்லாவற்றையும் கடந்த முதன்மையாய்
இருக்கும்.
எதுவொன்றை மாற்றாய் நினைத்திடினும்; ஊழே எல்லாவற்றையும் கடந்த முதன்மையாய்
இருக்கும்.
(அது போல்...)
அஹிம்சையைவிட பேராற்றல் கொண்ட ஆயுதமெது? எதுவொன்றை ஆயுதமாய்
கையாண்டிடினும்; அஹிம்சையை அனைத்தையும் விட வலிமையாய் எஞ்சும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக