ஆம்...
காமத்தில் ஏதுமில்லை!
"சதைகளின் சங்கமமென"
காமத்தை உணர்ந்திடின்;
காமத்தில் ஏதுமில்லை!
சதைகளின் உரசல்களில்
"உயிர்களின் உணர்வுகளை"
மட்டுமல்ல! உயிரைத்
தாங்கும், நிலையற்ற
"சதைகளின் உணர்ச்சிகளை"
உணர்தல்கூட சாத்தியமில்லை!
எனவே...
காமத்தில் ஏதுமில்லை!
ஆம்... ஏதுமேயில்லை!
"இச்சையால் சதைகளைத்
தொடுவதா?" காமத்தின்
பிறப்பிடம்? இல்லையே!
சதைகளைத் தாண்டி,
சதையை வாழ்விக்கும்
ஆன்மாவைத் தொடுவதும்;
"ஆன்மாக்கள் சங்கமத்தின்"
உபரியான நிகழ்வே,
"காமமென" உணர்வதும்
சாத்தியமாகும் வரையில்;
ஆம்...
காமத்தில் ஏதுமில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக