சனி, ஆகஸ்ட் 13, 2016

குறள் எண்: 0377 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 04 - ஊழியல்; அதிகாரம்: 038 - ஊழ்; குறள் எண்: 0377}

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

விழியப்பன் விளக்கம்: உலகையே வகுத்தவன், வகுத்ததற்கு மாறாய்; கோடிக் கணக்கில் சொத்துக்கள் சேர்த்தோர்க்கும், அவற்றை அனுபவித்தல் இயலாது.
(அது போல்...)
செயலாக்கும் வைராக்கியம், வலிமை பெறாமல்; எண்ணற்ற வகையில் திட்டங்கள் இருப்போர்க்கும், அவற்றை செயல்படுத்துதல் சாத்தியமில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக