ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016

குறள் எண்: 0371 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 04 - ஊழியல்; அதிகாரம்: 038 - ஊழ்; குறள் எண்: 0371}

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி

விழியப்பன் விளக்கம்: செல்வம் பெருகுவதற்கான ஊழ் இருப்பின், முயற்சி வெளிப்படும்; செல்வம் அழிவதற்கு மூலமான ஊழ் இருப்பின், அயர்ச்சி வெளிப்படும்.
(அது போல்...)
ஒழுக்கம் மேம்படுவதற்கான சிந்தனை இருப்பின், அறச் செயல்கள் பெருகிடும்; ஒழுக்கம் தரமிறக்குவதற்கான சிந்தனை இருப்பின், பாவச் செயல்கள்கள் பெருகிடும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக