{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 077 - படைமாட்சி; குறள் எண்: 0764}
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை
வன்க ணதுவே படை
விழியப்பன் விளக்கம்: எப்போரிலும் அழிவைச் சந்திக்காமல், பகைவர்களின் சதிக்கு பலியாகாமல்; பல போர்களை வென்று, திண்ணமான வீரத்தைப் பெறுவதே படையாகும்!
(அது போல்...)
எவ்வுறவிலும் பிரிவைத் தூண்டாமல், தீயவர்களின் புரளிக்கு இரையாகாமல்; பல உறவினர்களைப் பேணி, உன்னதமான அன்பைப் பரிமாறுவதே குடும்பமாகும்!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக