செவ்வாய், செப்டம்பர் 12, 2017

குறள் எண்: 0772 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0772}

கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

விழியப்பன் விளக்கம்: கண்டதும் அஞ்சும் காட்டு முயலை, கொன்ற அம்பை விட; பாயும் படையை எதிர்க்கும் யானையைக் கொல்லத் தவறிய, வேலைக் கையிலேந்தி இருப்பது சிறப்பாகும்.
(அது போல்...)
பார்த்ததும் அஞ்சும் அப்பாவி மனிதரை, வீழ்த்திய காவலரை விட; போக்கிரிக் கும்பலை வளர்க்கும் வீரனை வெல்லத் தவறிய, காவலரை உடன் வைத்திருப்பது உயர்ந்ததாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக