சனி, செப்டம்பர் 09, 2017

குறள் எண்: 0769 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 077 - படைமாட்சி; குறள் எண்: 0769}

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை

விழியப்பன் விளக்கம்: வீரர்களின் எண்ணிக்கையில் குறைவு/அரசாள்பவரிடம் மாறாத வெறுப்பு/வாழ்வை அழிக்கும் வறுமை - இவையாயும் இல்லையாயின், அப்படை நிச்சயமாய் வெற்றியடையும்!
(அது போல்...)
உறவுகளின் அன்பில் குறை/முதியவர்களைப் பேணாமல் இருத்தல்/ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை - இவையாவும் இல்லையாயின், அக்குடும்பம் உறுதியாய் கூடியிருக்கும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக