செவ்வாய், டிசம்பர் 12, 2017

குறள் எண்: 0863 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0863}

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு

விழியப்பன் விளக்கம்: அனைத்திலும் அச்சமும்/எதிலும் அறியாமையும்/எல்லோரிடமும் முரணும்/எதையும் ஈயாமலும் - இருக்கும் ஒருவன்; பகைவர்கள் வெல்வதற்கு, எளியவனாய் இருப்பான்!
(அது போல்...)
அனைவரையும் ஜாதியால்/எதையும் இலவசத்தால்/எவற்றையும் ஊழலால்/யாதையும் வன்முறையால் - சிதைக்கும் தலைவன்; மக்களாட்சி தோற்பதற்கு, காரணமாய் அமைவான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக