வெள்ளி, டிசம்பர் 15, 2017

குறள் எண்: 0866 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 087 - பகைமாட்சி; குறள் எண்: 0866}

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்

விழியப்பன் விளக்கம்: ஆராய்ந்து அறியாத சினமும்/எப்போதும் குறையாத பேராசை - இவற்றைக் கொண்டவனின் பகைமை, பகைவரால் விரும்பிப் பேணப்படும்!
(அது போல்...)
ஆழ்ந்து உணராத கூட்டணி/எவற்றிலும் நீங்காத ஊழல் - இவற்றை செய்வோரின் எதிர்ப்பு, எதிர்க்கட்சியால் போற்றி ஏற்கப்படும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக