{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 006 - வாழ்க்கைத் துணைநலம்; குறள் எண்: 0057}
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
நிறைகாக்கும் காப்பே தலை
விழியப்பன் விளக்கம்: சிறைவாசம் போன்ற காவல் என்ன விளைவிக்கும்? எண்ண-விடுதலையே, பெண்களை முழுமைப்படுத்துவதன் முதன்மையாகும்.
(அது போல்...)
கடுமையான சட்டங்கள் மட்டும் எவற்றை மாற்றும்? சுய-ஒழுக்கமே, மனிதத்தை விதைப்பதன் முதற்படியாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக