{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 025 - அருளுடைமை; குறள் எண்: 0248}
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது
அற்றார்மற் றாதல் அரிது
விழியப்பன் விளக்கம்: பொருள் இல்லாதவர், பிற்காலத்தில் பொருள் சம்பாதித்து மகிழக்கூடும்! அருள் இல்லாதவர், இல்லாதவரே; அருள் உடையவராதல் அரிது!
(அது போல்...)
கல்வி கற்காதோர், இரவுப்பள்ளியில் படித்து கல்வி கற்கக்கூடும்! சிந்திக்க இயலாதோர், இயலாதோரே; சிந்திக்க வல்லவராதல் அரிது!
(அது போல்...)
கல்வி கற்காதோர், இரவுப்பள்ளியில் படித்து கல்வி கற்கக்கூடும்! சிந்திக்க இயலாதோர், இயலாதோரே; சிந்திக்க வல்லவராதல் அரிது!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக