0251. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
விழியப்பன் விளக்கம்: தன்னுடைய தேகத்தை வலிமையாக வைத்துக்கொள்ள, பிறவுயிரின்
தேகத்தை உண்பவர்; எப்படி அருளைப் பழகமுடியும்?
எங்ஙனம் ஆளும் அருள்
விழியப்பன் விளக்கம்: தன்னுடைய தேகத்தை வலிமையாக வைத்துக்கொள்ள, பிறவுயிரின்
தேகத்தை உண்பவர்; எப்படி அருளைப் பழகமுடியும்?
(அது போல்...)
தம்மக்களின் சொத்தை அளவுகடந்து பெருக்கிட, பொதுமக்களின் சொத்தை
அபகரிப்பவர்; எப்படி மக்களாட்சியை உணரமுடியும்?
0252. பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு
விழியப்பன் விளக்கம்: பொருட்களைப் பேணாதவர்க்கு, அவற்றை அனுபவித்தல் இயலாது!
அதுபோல், இறைச்சியை உண்பவர்க்கு; அருளை அனுபவித்தல் இயலாது!
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு
விழியப்பன் விளக்கம்: பொருட்களைப் பேணாதவர்க்கு, அவற்றை அனுபவித்தல் இயலாது!
அதுபோல், இறைச்சியை உண்பவர்க்கு; அருளை அனுபவித்தல் இயலாது!
(அது போல்...)
சுயத்தைத் தேடாதோர்க்கு, தன்னை உணர்தல் சாத்தியமில்லை! அதுபோல், வாய்மையை
மறந்தோர்க்கு; அறத்தை உணர்தல் சாத்தியமில்லை!
0253. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்
விழியப்பன் விளக்கம்: அழிவுகளை விளைவிக்கும், ஆயுதங்களைக் கொண்டவரின் உள்ளம்
போல்; பிறவுயிரின் உடலை சுவைத்து உண்பவர் மனமும், நல்லறத்தை நினைக்காது.
உடல்சுவை உண்டார் மனம்
விழியப்பன் விளக்கம்: அழிவுகளை விளைவிக்கும், ஆயுதங்களைக் கொண்டவரின் உள்ளம்
போல்; பிறவுயிரின் உடலை சுவைத்து உண்பவர் மனமும், நல்லறத்தை நினைக்காது.
(அது போல்...)
சீரழிவை உருவாக்கும், தீப்பழக்கத்தை உடையவரின் உறவு போல்; பிறரின் செல்வத்தை
அபகரித்து மகிழ்பவர் சிநேகமும், மனிதத்தை விதைக்காது.
0254. அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்
விழியப்பன் விளக்கம்: அருளற்றது என்னவெனில், கொல்லாமை எனும் தத்துவத்தைக்
கைவிடுவது! அதுபோல், பொருளற்றது என்னவனில்; அப்படிக் கொல்லப்பட்ட
இறைச்சியை உண்பது!
பொருளல்ல தவ்வூன் தினல்
விழியப்பன் விளக்கம்: அருளற்றது என்னவெனில், கொல்லாமை எனும் தத்துவத்தைக்
கைவிடுவது! அதுபோல், பொருளற்றது என்னவனில்; அப்படிக் கொல்லப்பட்ட
இறைச்சியை உண்பது!
(அது போல்...)
முறையற்றது என்னவெனில், களவாமை எனும் ஒழுக்கத்தை மறப்பது! அதுபோல்,
மனிதமற்றது என்னவெனில்; அப்படிக் களவாடிய, பொருளை அனுபவிப்பது!
0255. உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு
விழியப்பன் விளக்கம்: மாமிசத்தை உண்ணாத அறத்தில் உள்ளது, உயிரினங்களின்
நிலைத்தன்மை; புலால் உண்டால், நரகம் வாசல்திறந்து வெளியனுப்பாது.
அண்ணாத்தல் செய்யாது அளறு
விழியப்பன் விளக்கம்: மாமிசத்தை உண்ணாத அறத்தில் உள்ளது, உயிரினங்களின்
நிலைத்தன்மை; புலால் உண்டால், நரகம் வாசல்திறந்து வெளியனுப்பாது.
(அது போல்...)
நலிந்தோரை ஒடுக்காத நேர்மையில் உள்ளது, பொதுவுடைமயின் நிலைத்தன்மை;
நலிந்தோரை ஒடுக்கினால், சமுதாயம் மனமுவந்து ஆதரிக்காது.
0256. தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்
விழியப்பன் விளக்கம்: உண்பதற்காக, உலகத்தார் உயிர்களைக் கொல்லமாட்டார்கள்
எனில்; பொருளாதார வளர்ச்சிக்காக, இறைச்சியை விற்பவரும் இருக்கமாட்டார்கள்.
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்
விழியப்பன் விளக்கம்: உண்பதற்காக, உலகத்தார் உயிர்களைக் கொல்லமாட்டார்கள்
எனில்; பொருளாதார வளர்ச்சிக்காக, இறைச்சியை விற்பவரும் இருக்கமாட்டார்கள்.
(அது போல்...)
பேராசைக்காக, பொதுமக்கள் விதிகளை மீறமாட்டார்கள் எனில்; கையூட்டைப்
பெறுவதற்கு, விதிமீறும் அதிகாரிகளும் இருக்கமாட்டார்கள்.
0257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்
விழியப்பன் விளக்கம்: றைச்சி என்பது, வேறோர் உயிரின் புண்ணிலிருந்து உருவான சதை;
என்ற உணர்வைப் பெற்றவராயின், இறைச்சியை உண்ணாமல் இருக்கவேண்டும்.
புண்ணது உணர்வார்ப் பெறின்
விழியப்பன் விளக்கம்: றைச்சி என்பது, வேறோர் உயிரின் புண்ணிலிருந்து உருவான சதை;
என்ற உணர்வைப் பெற்றவராயின், இறைச்சியை உண்ணாமல் இருக்கவேண்டும்.
(அது போல்...)
கையூட்டு என்பது, சகமனிதர் ஒருவரின் வியர்வையிலிருந்து விளைந்த பணம்; என்ற
உணர்வைக் கொண்டவராயின், கையூட்டைப் பெறாமல் இருக்கவேண்டும்.
0258. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்
விழியப்பன் விளக்கம்: குற்றசெயல்களின் ஆதியை உணர்ந்து, அவற்றைப் பிரிந்த
அறிவுடையோர்; தலையைப் பிரிந்த ஓருயிரின், உடலை உண்ணமாட்டார்கள்.
உறவிலிருந்து முறிக்கப்பட்ட ஒருவரின், அந்தரங்கத்தை ஆராயமாட்டார்கள்.
அறிவுடையோர்; தலையைப் பிரிந்த ஓருயிரின், உடலை உண்ணமாட்டார்கள்.
(அது போல்...)
அவநம்பிக்கையின் மூலத்தை ஆராய்ந்து, அதனை முறித்த பண்புடையோர்;உறவிலிருந்து முறிக்கப்பட்ட ஒருவரின், அந்தரங்கத்தை ஆராயமாட்டார்கள்.
0259. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று
விழியப்பன் விளக்கம்: பல்வேறு எரிபொருட்களைப் பெய்து, ஆயிரம் வேள்விகளைச்
செய்வதைவிட; ஓருயிரைக் கொன்று, அதன் உடலை உண்ணாதது சிறந்தது.
உயிர்செகுத் துண்ணாமை நன்று
விழியப்பன் விளக்கம்: பல்வேறு எரிபொருட்களைப் பெய்து, ஆயிரம் வேள்விகளைச்
செய்வதைவிட; ஓருயிரைக் கொன்று, அதன் உடலை உண்ணாதது சிறந்தது.
(அது போல்...)
பல்வகை அறமல்லவற்றைச் செய்து, கோடிப் பணத்தைச் சேமிப்பதைவிட; ஒருவரை
ஏமாற்றி, அவர் பொருளை அபகரிக்காதது செல்வமானது.
0260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்
விழியப்பன் விளக்கம்: ஓருயிரைக் கொல்லாதோர் மற்றும் கொல்லப்பட்ட உயிரின்
இறைச்சியை உண்ண மறுப்போர் - இவர்களை, எல்லா உயிர்களும் கைகுவித்து
வணங்கும்.
எல்லா உயிருந் தொழும்
விழியப்பன் விளக்கம்: ஓருயிரைக் கொல்லாதோர் மற்றும் கொல்லப்பட்ட உயிரின்
இறைச்சியை உண்ண மறுப்போர் - இவர்களை, எல்லா உயிர்களும் கைகுவித்து
வணங்கும்.
(அது போல்...)
மக்களை ஏமாற்றாதோர் மற்றும் ஏமாற்றியவரின் ஆட்சியை ஆதரிக்க மறுப்போர் -
இவர்களை, எல்லா பொதமக்களும் மனமுவந்து வாழ்த்துவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக