வியாழன், டிசம்பர் 31, 2015

குறள் எண்: 0151 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 016 - பொறையுடைமைகுறள் எண்: 0151}

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

விழியப்பன் விளக்கம்: தன்னைத் தோண்டும் மக்களை, சுமக்கும் நிலத்திற்கு ஒப்ப; தீயசொற்களால் நம் மனதைக் காயப்படுத்துவோரை, பொறுத்தருளுதல் தனிச்சிறப்பாகும்.
(அது போல்...)
தம்மைக் கைவிட்ட பிள்ளைகளை, ஆசிர்வதிக்கும் பெற்றோர் போல்; புரளியால் நம் மதிப்பை சிதைப்போரை, அரவணைத்தல் தனித்துவமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், டிசம்பர் 30, 2015

அதிகாரம் 015: பிறனில் விழையாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 015 - பிறனில் விழையாமை

0141.  பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
           அறம்பொருள் கண்டார்கண் இல்

           விழியப்பன் விளக்கம்: அறம் மற்றும் பொருள் சார்ந்த உலகப்-பொதுமறையை
           ஆராய்ந்தவரிடம்; வேறொருவருடன் உறவிலுள்ள பெண்ணைக் காதலிக்கும் அறியாமை
           இருப்பதில்லை.
(அது போல்...)
           பொறாமை மற்றும் பேராசை சார்ந்த பொது-நியதிகளை உணர்ந்தவர்களிடம்;
           மற்றவர்களிடம் இருக்கும் தனித்துவத்தைத் தூற்றும் எண்ணம் இருப்பதில்லை.

0142.  அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
           நின்றாரின் பேதையார் இல்

           விழியப்பன் விளக்கம்: எவ்விதமான அறநெறிகளை மறந்து பயணிப்பவர்களிலும்; பிறர் 
           மனைவியை விரும்புகிறவரை விட, அறிவிலார் எவருமில்லை.
(அது போல்...)
           எவ்விதமான தீய-எண்ணங்களை கொண்டு இருப்பவர்களிலும்; வேண்டாதவர் துன்பத்தை 
           விரும்புகிறவரை விட, தீயவர் எவருமில்லை.

0143.  விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
           தீமை புரிந்தொழுகு வார்

           விழியப்பன் விளக்கம்: சந்தேகமின்றி நம்பிய ஒருவரின் இல்லத்தவளிடம்; தவறான உறவில் 
           இணைந்திருப்பவர், இறந்தவரைக் காட்டிலும் வேறல்லர்.
(அது போல்...)
           குறையின்றி விருந்தோம்பிய அன்பரின் குடும்பத்திடம்; பகையான உணர்வோடு 
           பழகுவோர், விலங்கிலிருந்து மாறுபட்டவர் அல்லர்.

0144.  எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
           தேரான் பிறனில் புகல்

           விழியப்பன் விளக்கம்: தினையளவும் ஆராயாமல், பிறர் இல்லத்தாளிடம் விழைந்தால்; 
           மலையளவு புகழுக்குரியர் ஆயினும், என்ன சிறப்பு?
(அது போல்...)
           எள்ளளவும் மனிதமில்லாமல், பிறர் மனதைப் புன்படுத்தினால்; கடலளவு கல்விக்குரியவர்
           ஆயினும், என்ன பயன்?
          
0145.  எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
           விளியாது நிற்கும் பழி

           விழியப்பன் விளக்கம்: வருந்தாமல் கிடைப்பது என்றெண்ணி, பிறர் இல்லத்தாளிடம்
           நெறிதவறி நடப்பவன்; எக்காலத்திலும் அழியாத குலப்பழியை அடைவான்.
(அது போல்...)
           சிரமமின்றி சம்பாதிப்பது என்றெண்ணி, தொழில் பங்குதாரரிடம் தர்மமின்றி திருடுபவன்;
           எந்நேரத்திலும் மறையாத மனவுளைச்சலை அடைவான்.

0146.  பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
           இகவாவாம் இல்லிறப்பான் கண்

           விழியப்பன் விளக்கம்: பிறர் இல்லத்தாளிடம், நெறிதவறி நடந்து கொள்பனிடம்; பகை/
           பாவம்/பயம்/பழி - எனும் நான்கும் நீங்காமல் இருக்கும்.
(அது போல்...)
           பிறர் உரிமைகளை, ஊழல் செய்து பறிப்பவர்களிடம்; பேராசை/பொறாமை/வன்மம்/சூழ்ச்சி
           - எனும் நான்கும் எப்போதும் இருக்கும்.

0147.  அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
           பெண்மை நயவா தவன்

           விழியப்பன் விளக்கம்: அறத்தன்மையுடன் இல்லற வாழ்க்கையை வாழ்பவன்; பிறர் 
           இல்லத்தவளின் பெண்-தன்மையை விரும்பமாட்டான்.
(அது போல்...)
           பொதுத்தன்மையுடன் ஜனநாயக ஆட்சியைப் புரிவோர், தம் குடிமக்களின் சுய-தன்மையை 
           அழிக்கமாட்டார்கள்.

0148.  பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
           அறனொன்றோ ஆன்ற வொழுக்கு

           விழியப்பன் விளக்கம்: பிறர் மனைவியை - தவறான எண்ணத்துடன், பார்க்காத 
           மதிப்பிற்குரிய ஆண்மை; சன்றோர்க்கு - அறம் மட்டுமல்ல, முழுமையான ஒழுக்கமும் 
           ஆகும்.
(அது போல்...)
           பிறர் உரிமையை - காழ்ப்பு உணர்வுடன், மறுக்காத சிறப்புக்குரிய மனிதம்; மனிதர்க்கு - 
           அடிப்படை மட்டுமல்ல, புனிதமான பிறவிப்பயனும் ஆகும்.

0149.  நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
           பிறர்க்குரியாள் தோள்தோயா தார்

           விழியப்பன் விளக்கம்: பிறர் இல்லத்தாளின் தோளைத் தீண்டாதவரே; அச்சுறுத்தும் 
           கடலுக்கு நடுவே இருக்கும் இவ்வுலகில், நன்மைக்கு காரணமானர் ஆவர்.
(அது போல்...)
           பிறர் சொத்துகளை அபகரிக்க முயலாதவரே; பயமுறுத்தும் கொள்ளையர்களுக்கு  நடுவே  
           வாழ்வோர் மனதில், நம்பிக்கையை விதைப்பவர் ஆவர்.

0150.  அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
           பெண்மை நயவாமை நன்று

           விழியப்பன் விளக்கம்: அறத்தை மனம்-கொள்ளாமல், அறமற்ற செயல்களே செய்பவர் 
           ஆயினும்; பிறரை மணம்-கொண்டவளின், பெண்மையை விரும்பாத தன்மை நன்றாம்.
(அது போல்...)
           பொதுநலத்தை எண்ணாமல், சுயநலமான காரியங்களே செய்பவர் ஆயினும்; பிறரின் 
           சொத்துக்களை, அபகரிக்காத குணம் சிறப்பாம்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குறள் எண்: 0150 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0150}

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று

விழியப்பன் விளக்கம்: அறத்தை மனம்-கொள்ளாமல், அறமற்ற செயல்களே செய்பவர் ஆயினும்; பிறரை மணம்-கொண்டவளின், பெண்மையை விரும்பாத தன்மை நன்றாம்.
(அது போல்...)
பொதுநலத்தை எண்ணாமல், சுயநலமான காரியங்களே செய்பவர் ஆயினும்; பிறரின் சொத்துக்களை, அபகரிக்காத குணம் சிறப்பாம்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், டிசம்பர் 29, 2015

குறள் எண்: 0149 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0149}

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்

விழியப்பன் விளக்கம்: பிறர் இல்லத்தாளின் தோளைத் தீண்டாதவரே; அச்சுறுத்தும் கடலுக்கு நடுவே இருக்கும் இவ்வுலகில், நன்மைக்கு காரணமானர் ஆவர்.
(அது போல்...)
பிறர் சொத்துகளை அபகரிக்க முயலாதவரே; பயமுறுத்தும் கொள்ளையர்களுக்கு நடுவே வாழ்வோர் மனதில், நம்பிக்கையை விதைப்பவர் ஆவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், டிசம்பர் 28, 2015

குறள் எண்: 0148 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0148}

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு

விழியப்பன் விளக்கம்: பிறர் மனைவியை - தவறான எண்ணத்துடன், பார்க்காத மதிப்பிற்குரிய ஆண்மை; சன்றோர்க்கு - அறம் மட்டுமல்ல, முழுமையான ஒழுக்கமும் ஆகும்.
(அது போல்...)
பிறர் உரிமையை - காழ்ப்பு உணர்வுடன், மறுக்காத சிறப்புக்குரிய மனிதம்; மனிதர்க்கு - அடிப்படை மட்டுமல்ல, புனிதமான பிறவிப்பயனும் ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

குறள் எண்: 0147 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0147}

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் 
பெண்மை நயவா தவன்

விழியப்பன் விளக்கம்: அறத்தன்மையுடன் இல்லற வாழ்க்கையை வாழ்பவன்; பிறர் இல்லத்தவளின் பெண்-தன்மையை விரும்பமாட்டான்.
(அது போல்...)
பொதுத்தன்மையுடன் ஜனநாயக ஆட்சியைப் புரிவோர், தம் குடிமக்களின் சுய-தன்மையை அழிக்கமாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, டிசம்பர் 26, 2015

குறள் எண்: 0146 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0146}

பகைபாவம் அச்சம் பழியென நான்கும் 
இகவாவாம் இல்லிறப்பான் கண்

விழியப்பன் விளக்கம்: பிறர் இல்லத்தாளிடம், நெறிதவறி நடந்து கொள்பனிடம்; பகை/பாவம்/பயம்/பழி - எனும் நான்கும் நீங்காமல் இருக்கும்.
(அது போல்...)
பிறர் உரிமைகளை, ஊழல் செய்து பறிப்பவர்களிடம்; பேராசை/பொறாமை/வன்மம்/சூழ்ச்சி - எனும் நான்கும் எப்போதும் இருக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, டிசம்பர் 25, 2015

குறள் எண்: 0145 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0145}

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் 
விளியாது நிற்கும் பழி

விழியப்பன் விளக்கம்: வருந்தாமல் கிடைப்பது என்றெண்ணி, பிறர் இல்லத்தாளிடம் நெறிதவறி நடப்பவன்; எக்காலத்திலும் அழியாத குலப்பழியை அடைவான்.
(அது போல்...)
சிரமமின்றி சம்பாதிப்பது என்றெண்ணி, தொழில் பங்குதாரரிடம் தர்மமின்றி திருடுபவன்; எந்நேரத்திலும் மறையாத மனவுளைச்சலை அடைவான்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், டிசம்பர் 24, 2015

குறள் எண்: 0144 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0144}

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் 
தேரான் பிறனில் புகல்

விழியப்பன் விளக்கம்: திணையளவும் ஆராயாமல், பிறர் இல்லத்தாளிடம் விழைந்தால்; மலையளவு புகழுக்குரியர் ஆயினும், என்ன சிறப்பு?
(அது போல்...)
எள்ளளவும் மனிதமில்லாமல், பிறர் மனதைப் புன்படுத்தினால்; கடலளவு கல்விக்குரியவர் ஆயினும், என்ன பயன்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், டிசம்பர் 23, 2015

குறள் எண்: 0143 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0143}

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்

விழியப்பன் விளக்கம்: சந்தேகமின்றி நம்பிய ஒருவரின் இல்லத்தவளிடம்; தவறான உறவில் இணைந்திருப்பவர், இறந்தவரைக் காட்டிலும் வேறல்லர்.
(அது போல்...)
குறையின்றி விருந்தோம்பிய அன்பரின் குடும்பத்திடம்; பகையான உணர்வோடு பழகுவோர், விலங்கிலிருந்து மாறுபட்டவர் அல்லர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், டிசம்பர் 22, 2015

குறள் எண்: 0142 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0142}

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை 
நின்றாரின் பேதையார் இல்

விழியப்பன் விளக்கம்: எவ்விதமான அறநெறிகளை மறந்து பயணிப்பவர்களிலும்; பிறர் மனைவியை விரும்புகிறவரை விட, அறிவிலார் எவருமில்லை.
(அது போல்...)
எவ்விதமான தீய-எண்ணங்களை கொண்டு இருப்பவர்களிலும்; வேண்டாதவர் துன்பத்தை விரும்புகிறவரை விட, தீயவர் எவருமில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், டிசம்பர் 21, 2015

குறள் எண்: 0141 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0141}

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்

விழியப்பன் விளக்கம்: அறம் மற்றும் பொருள் சார்ந்த உலகப்-பொதுமறையை ஆராய்ந்தவரிடம்; வேறொருவருடன் உறவிலுள்ள பெண்ணைக் காதலிக்கும் அறியாமை இருப்பதில்லை.
(அது போல்...)
பொறாமை மற்றும் பேராசை சார்ந்த பொது-நியதிகளை உணர்ந்தவர்களிடம்; மற்றவர்களிடம் இருக்கும் தனித்துவத்தைத் தூற்றும் எண்ணம் இருப்பதில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, டிசம்பர் 20, 2015

அதிகாரம் 014: ஒழுக்கமுடைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமை

0131.  ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
           உயிரினும் ஓம்பப் படும்

           விழியப்பன் விளக்கம்: ஒழுக்கம், ஒருவருக்கு ஒப்பற்ற மேன்மையைக் கொடுப்பதால்; 
           ஒழுக்கம், உயிரைவிட உயர்ந்ததாய் காக்கப்பட வேண்டும்.
(அது போல்...)
           பெற்றோர், பிள்ளைகளுக்கு ஒப்பற்ற தியாகத்தை அளிப்பதால்; பெற்றோரை, 
           இயற்கையைவிட சிறந்ததாய் போற்ற வேண்டும்.

0132.  பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
           தேரினும் அஃதே துணை

           விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றையும் பகுத்தறிந்து ஆராய்ந்திடினும், ஒழுக்கமே 
           வலிமையானது என்பதால்; சிரமப்பட்டேனும், ஒழுக்கத்தைக் காக்கவேண்டும்.
(அது போல்...)
           எல்லோரையும் வீரத்துடன் வென்றிடினும், மனிதமே மானுட-தத்துவம் என்பதால்; 
           அடிபணிந்தேனும், மனிதத்தைப் பழகவேண்டும்.

0133.  ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
           இழிந்த பிறப்பாய் விடும்

           விழியப்பன் விளக்கம்: ஒழுக்கமுடன் வாழ்வதே, உயர்ந்த குடிமக்களின் அடையாளம்;
           ஒழுக்கம் இல்லாதோர், தாழ்ந்த குடிமக்களாய் ஆகிவிடுவர்.
(அது போல்...)
           நேர்மையுடன் கற்பிப்பதே, உயர்தர ஆசிரியர்களின் தொழில்-தர்மம்; நேர்மை அற்றோர்,
           தகுதியற்ற ஆசிரியர்கள் ஆகிவிடுவர். 

0134.  மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
           பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: வேதம் ஓதுவோர் - கற்றதை மறப்பின், மீண்டும் கற்றுக்கொள்ளலாம்; 
           ஒழுக்கம் தவறினால், உயர்ந்த பிறப்பிலிருந்து தாழ்வர்.
(அது போல்...)
           மனிதனாய் பிறந்தோர் - செய்கையில் குறையிருப்பின், திருத்திக் கொள்ளலாம்; மனதில் 
           கறையிருந்தால், ஆறறிவு விலங்கிலிருந்து குறைவர்.
          
0135.  அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
           ஒழுக்க மிலான்கண் உயர்வு

           விழியப்பன் விளக்கம்: பொறாமை உள்ளவர்கள், மேன்மையடைதல் சாத்தியமில்லாதது 
           போல்; ஒழுக்கம் இல்லாதோர், உயர்வதும் சாத்தியமில்லை.

(அது போல்...)
           மனச்சிதறல் உள்ளவர்கள், ஒருமுகப்படுதல் சாத்தியமில்லாதது போல்; நற்சிந்தனை 
           இல்லாதோர், உறங்குவதும் சாத்தியமில்லை.

0136.  ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
           ஏதம் படுபாக் கறிந்து

           விழியப்பன் விளக்கம்: ஒழுக்கம் தவறுதல், குற்றம் விளைவிக்கும் என்பதை உணர்ந்து;
           மனதுரம் கொண்டோர், ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டர்.
(அது போல்...)
           வருங்காலம் மறத்தல், சிரமத்தைக் கொடுக்கும் என்பதை உணர்ந்து; சுறுசுறுப்பான
           எறும்புகள், முற்காப்பிலிருந்து தவறுவதில்லை.

0137.  ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
           எய்துவர் எய்தாப் பழி

           விழியப்பன் விளக்கம்: ஒழுக்கத்தால் ஒருவர் மேன்மையடைவார்; ஆனால், 
           ஒழுக்கமின்மையால் அடையக்கூடாத பழியை அடைவார்.
(அது போல்...)
           விடாமுயற்சியால் வாழ்க்கை வெற்றியடையும்; ஆனால், முயற்சியின்மையால் எதிர்பாராத 
           தடுமாற்றத்துக்கு உள்ளாகும்.

0138.  நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
           என்றும் இடும்பை தரும்

            விழியப்பன் விளக்கம்: நல்ல ஒழுக்கம் நன்மைக்கு விதையாக இருக்கும்; தீய ஒழுக்கம்,
            எந்த நிலையிலும் துன்பத்தையே தரும்.
(அது போல்...)
           நல்ல நிலங்கள் நல்-விவசாயத்திற்கு காரணியாக அமையும்; கடின நிலங்கள், எந்த
           நிலையிலும் பயனற்றதையே விளைவிக்கும்.

0139.  ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
           வழுக்கியும் வாயாற் சொலல்

           விழியப்பன் விளக்கம்: நன்னடத்தை உள்ள ஒழுக்கமானோர்க்கு; வாய்-தவறி கூட, தீய  
           சொற்களை சொல்லுதல் சாத்தியமேயில்லை.
(அது போல்...)
           நல்-நம்பிக்கைகள் உள்ள உறவுகளுக்கு; கனவிலும் கூட, உறவிலிருப்பவரைக்
           காயப்படுத்த நினைத்தல் சாத்தியமேயில்லை.

0140.  உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
           கல்லார் அறிவிலா தார்

           விழியப்பன் விளக்கம்: நிகழ்காலத்திற்கு ஏற்ப உலகத்தோடு ஒன்றி பயணிக்க 
           முடியாதவர்கள்; எவ்வளவு கற்றிருந்தும், அறிவில்லாதவர்களே.
(அது போல்...)
           நிகழ்கால பிரச்சனையை மட்டும் விவாதித்து பயணிக்காத உறவுகள்; எவ்வளவு
           ஆண்டுகளாயினும், பலவீனமானவையே.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குறள் எண்: 0140 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமைகுறள் எண்: 0140}

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

விழியப்பன் விளக்கம்: நிகழ்காலத்திற்கு ஏற்ப உலகத்தோடு ஒன்றி பயணிக்க முடியாதவர்கள்; எவ்வளவு கற்றிருந்தும், அறிவில்லாதவர்களே.
(அது போல்...)
நிகழ்கால பிரச்சனையை மட்டும் விவாதித்து பயணிக்காத உறவுகள்; எவ்வளவு ஆண்டுகளாயினும், பலவீனமானவையே.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, டிசம்பர் 19, 2015

குறள் எண்: 0139 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமைகுறள் எண்: 0139}

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்

விழியப்பன் விளக்கம்: நன்னடத்தை உள்ள ஒழுக்கமானோர்க்கு; வாய்-தவறி கூட, தீய சொற்களை சொல்லுதல் சாத்தியமேயில்லை.
(அது போல்...)
நல்-நம்பிக்கைகள் உள்ள உறவுகளுக்கு; கனவிலும் கூட, உறவிலிருப்பவரைக் காயப்படுத்த நினைத்தல் சாத்தியமேயில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, டிசம்பர் 18, 2015

குறள் எண்: 0138 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமைகுறள் எண்: 0138}

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் 
என்றும் இடும்பை தரும்

விழியப்பன் விளக்கம்: நல்ல ஒழுக்கம் நன்மைக்கு விதையாக இருக்கும்; தீய ஒழுக்கம், எந்த நிலையிலும் துன்பத்தையே தரும்.
(அது போல்...)
நல்ல நிலங்கள் நல்-விவசாயத்திற்கு காரணியாக அமையும்; கடின நிலங்கள், எந்த நிலையிலும் பயனற்றதையே விளைவிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

மதமும் மனிதமும்...


மதம் ம"னி"தமாவதும்
ம"னி"தம் "மதமாவதும்

"நீ"
எனும் சுயத்தை;
சேர்ப்பதிலும்/இழப்பதிலும்
இருக்கிறது!

வியாழன், டிசம்பர் 17, 2015

குறள் எண்: 0137 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமைகுறள் எண்: 0137}

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் 
எய்துவர் எய்தாப் பழி

விழியப்பன் விளக்கம்: ஒழுக்கத்தால் ஒருவர் மேன்மையடைவார்; ஆனால், ஒழுக்கமின்மையால் அடையக்கூடாத பழியை அடைவார்.
(அது போல்...)
விடாமுயற்சியால் வாழ்க்கை வெற்றியடையும்; ஆனால், முயற்சியின்மையால் எதிர்பாராத தடுமாற்றத்துக்கு உள்ளாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், டிசம்பர் 16, 2015

குறள் எண்: 0136 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமைகுறள் எண்: 0136}

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் 
ஏதம் படுபாக் கறிந்து

விழியப்பன் விளக்கம்: ஒழுக்கம் தவறுதல், குற்றம் விளைவிக்கும் என்பதை உணர்ந்து; மனதுரம் கொண்டோர், ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டர்.
(அது போல்...)
வருங்காலம் மறத்தல், சிரமத்தைக் கொடுக்கும் என்பதை உணர்ந்து; சுறுசுறுப்பான எறும்புகள், முற்காப்பிலிருந்து தவறுவதில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், டிசம்பர் 15, 2015

குறள் எண்: 0135 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமைகுறள் எண்: 0135}

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை 
ஒழுக்க மிலான்கண் உயர்வு

விழியப்பன் விளக்கம்: பொறாமை உள்ளவர்கள், மேன்மையடைதல் சாத்தியமில்லாதது போல்; ஒழுக்கம் இல்லாதோர், உயர்வதும் சாத்தியமில்லை.
(அது போல்...)
மனச்சிதறல் உள்ளவர்கள், ஒருமுகப்படுதல் சாத்தியமில்லாதது போல்; நற்சிந்தனை இல்லாதோர், உறங்குவதும் சாத்தியமில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், டிசம்பர் 14, 2015

குறள் எண்: 0134 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமைகுறள் எண்: 0134}

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

விழியப்பன் விளக்கம்: வேதம் ஓதுவோர் - கற்றதை மறப்பின், மீண்டும் கற்றுக்கொள்ளலாம்; ஒழுக்கம் தவறினால், உயர்ந்த பிறப்பிலிருந்து தாழ்வர்.
(அது போல்...)
மனிதனாய் பிறந்தோர் - செய்கையில் குறையிருப்பின், திருத்திக் கொள்ளலாம்; மனதில் கறையிருந்தால், ஆறறிவு விலங்கிலிருந்து குறைவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, டிசம்பர் 13, 2015

குறள் எண்: 0133 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமைகுறள் எண்: 0133}

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் 
இழிந்த பிறப்பாய் விடும்

விழியப்பன் விளக்கம்: ஒழுக்கமுடன் வாழ்வதே, உயர்ந்த குடிமக்களின் அடையாளம்; ஒழுக்கம் இல்லாதோர், தாழ்ந்த குடிமக்களாய் ஆகிவிடுவர்.
                                                                    (அது போல்...)
நேர்மையுடன் கற்பிப்பதே, உயர்தர ஆசிரியர்களின் தொழில்-தர்மம்; நேர்மை அற்றோர், தகுதியற்ற ஆசிரியர்கள் ஆகிவிடுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, டிசம்பர் 12, 2015

குறள் எண்: 0132 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமைகுறள் எண்: 0132}

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை

விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றையும் பகுத்தறிந்து ஆராய்ந்திடினும், ஒழுக்கமே வலிமையானது என்பதால்; சிரமப்பட்டேனும், ஒழுக்கத்தைக் காக்கவேண்டும்.
(அது போல்...)
எல்லோரையும் வீரத்துடன் வென்றிடினும், மனிதமே மானுட-தத்துவம் என்பதால்; அடிபணிந்தேனும், மனிதத்தைப் பழகவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, டிசம்பர் 11, 2015

குறள் எண்: 0131 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமைகுறள் எண்: 0131}

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

விழியப்பன் விளக்கம்: ஒழுக்கம், ஒருவருக்கு ஒப்பற்ற மேன்மையைக் கொடுப்பதால்; ஒழுக்கம், உயிரைவிட உயர்ந்ததாய் காக்கப்பட வேண்டும்.
(அது போல்...)
பெற்றோர், பிள்ளைகளுக்கு ஒப்பற்ற தியாகத்தை அளிப்பதால்; பெற்றோரை, இயற்கையைவிட சிறந்ததாய் போற்ற வேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், டிசம்பர் 10, 2015

அதிகாரம் 013: அடக்கமுடைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 013 - அடக்கமுடைமை

0121.  அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 
          ஆரிருள் உய்த்து விடும்

           விழியப்பன் விளக்கம்: அடக்கமுடன் இருத்தல், தேவர்கள் உலகத்தில் சேர்க்கும்;  
           அடக்கமற்று இருத்தல், அரிய இருள் உலகத்தில் கொண்டு சேர்க்கும்.
(அது போல்...)
           அன்புடன் வாழ்தல், மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்; அன்பற்று வாழ்தல், அதீத இன்னல்கள்
           நிறைந்த சூழலைக் கொடுக்கும்.

0122.  காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் 
          அதனினூஉங் கில்லை உயிர்க்கு

           விழியப்பன் விளக்கம்: அடக்கத்தை, செல்வமாக நினைத்து காக்கவேண்டும்; 
           அதைக்காட்டிலும் பெருஞ்செல்வம் ஏதும் மனிதர்க்கு இல்லை.
(அது போல்...)
           கடனில்லாததை, நிம்மதியாய் எண்ணி அடையவேண்டும்; அதைவிட, அதீத-நிம்மதி 
           எதுவும் இவ்வுலகில் இல்லை.

0123.  செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து 
          ஆற்றின் அடங்கப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: தேவையானவற்றை பகுத்தறிந்து, அடக்கமுடன் இருக்கப் 
           பழகினால்; அவ்வடக்கம் உணரப்பட்டு மேன்மையளிக்கும்.
(அது போல்...)
           முக்கிய-உறவுகளை ஆழ்ந்துணர்ந்து, பிணைப்புடன் வாழ்ந்திட முயன்றால், அவ்வுறவு 
           பலப்பட்டு சிறப்பையளிக்கும்.

0124.  நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
          மலையினும் மாணப் பெரிது

           விழியப்பன் விளக்கம்: நிலைப்பாட்டில் மாறுபடாது, அடங்கியவரின் உருவம்; 
           பெருமலையைக் காட்டிலும் மிகப் பெரியது.
(அது போல்...)
           விதிகளில் முரண்படாது, அரசாண்டவரின் விளைவு; பெருங்கடலைக் காட்டிலும் மிக 
           ஆழமானது.
          
0125.  எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
          செல்வர்க்கே செல்வம் தகைத்து

           விழியப்பன் விளக்கம்: பணிவுடன் இருத்தல், எல்லோர்க்கும் நன்மையாம்; முன்பே          
           செல்வந்தர்களாய் இருப்போருக்கும், மேலும் ஒரு செல்வமாகும்.
(அது போல்...)
           சுயநலமற்று இருத்தல், பொதுநலத்திற்கு நல்லதாகும்; இயல்பாய் பண்பாளர்களாய் 
           இருப்போருக்கும், மேலும் ஒரு பண்பாகும்.

0126.  ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் 
          எழுமையும் ஏமாப் புடைத்து

           விழியப்பன் விளக்கம்: ஆமையைப்போல் - ஐம்புலன்களையும், ஒரு பிறவியில் அடக்கி 
           வாழ்ந்தால்; அது, ஏழு பிறப்புக்கும் பாதுகாப்பு அரணாகும்.
(அது போல்...)
           கைகவிரல்ளைப்போல் - ஐம்பூதங்களையும், ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்க முடிந்தால்; 
           அது, எல்லாக் காலத்துக்கும் இயற்கையைப் பாதுகாக்கும்.

0127.  யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
           சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

           விழியப்பன் விளக்கம்: வேறெதை அடக்காவிட்டாலும், நாவடக்குதல் வேண்டும்; அப்படி
           அடக்காவிட்டால், சொற்பிழைகள் நிகழ்ந்து - துன்பத்தில் உழற்றும்.
(அது போல்...)
           வேறெதைப் பழகாவிட்டாலும், நேர்மையைப் பழகிடல் வேண்டும்; இல்லையேல், தவறான
           வழிசென்று - வாழ்க்கை தடம்புரளும்.

0128.  ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் 
           நன்றாகா தாகி விடும்

           விழியப்பன் விளக்கம்: பேசுகின்ற சொற்களில், ஒரேயொரு கடுஞ்சொல் தீவினையை 
           விதைத்தால்; மற்றெல்லாச் சொற்களும் நன்றாகாதது ஆகிவிடும்.
(அது போல்...)
           முழுமையான வெள்ளைத்தாளில், ஒரேயொரு கரும்புள்ளி பார்வையைச் சிதைத்தால்; 
           மற்றெல்லா வெள்ளைப்பகுதியும் புலப்படாதது ஆகிவிடும்.

0129.  தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
           நாவினாற் சுட்ட வடு

           விழியப்பன் விளக்கம்: தீயால் வெந்த புண்ணால், உடலில் உருவான தழும்பு மாறிவிடும்; 
           ஆனால் - தீச்சொற்களால் பாதித்த மனிதர்களுள், மனதில் உருவான வலி மாறிடாது.
(அது போல்...)
           அடிதடியால் பிரிந்த உறவுகள், எலும்பில் எழுந்த முறிவை மறந்திடும்; ஆனால், 
           வார்த்தைகளால் பிரிந்த உறவுகள்,  மனதில் எழுந்த முறிவை மறந்திடாது.

0130.  கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி 
           அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

           விழியப்பன் விளக்கம்: சினத்தை அடக்கி, கல்வியைக் கற்று - அடக்கமுடன்
           இருப்போரைச் சேர்ந்திட; தகுந்த நேரத்திற்காக, அறம் காத்திருக்கும்.

(அது போல்...)
           அன்பை உணர்ந்து, மனிதத்தை வளர்த்து -  வாழ்வியலைத் தொடர்வோரின் வருகைக்கு; 
           அவரின் தன்னிறைவுக்காக, மரணம் காத்திருக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குறள் எண்: 0130 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 013 - அடக்கமுடைமைகுறள் எண்: 0130}

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி 
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

விழியப்பன் விளக்கம்: சினத்தை அடக்கி, கல்வியைக் கற்று - அடக்கமுடன் இருப்போரைச் சேர்ந்திட; தகுந்த நேரத்திற்காக, அறம் காத்திருக்கும்.
(அது போல்...)
அன்பை உணர்ந்து, மனிதத்தை வளர்த்து -  வாழ்வியலைத் தொடர்வோரின் வருகைக்கு; அவரின் தன்னிறைவுக்காக, மரணம் காத்திருக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், டிசம்பர் 09, 2015

குறள் எண்: 0129 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 013 - அடக்கமுடைமைகுறள் எண்: 0129}

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

விழியப்பன் விளக்கம்: தீயால் வெந்த புண்ணால், உடலில் உருவான தழும்பு மாறிவிடும்; ஆனால் - தீச்சொற்களால் பாதித்த மனிதர்களுள், மனதில் உருவான வலி மாறிடாது.
(அது போல்...)
அடிதடியால் பிரிந்த உறவுகள், எலும்பில் எழுந்த முறிவை மறந்திடும்; ஆனால், வார்த்தைகளால் பிரிந்த உறவுகள்,  மனதில் எழுந்த முறிவை மறந்திடாது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை


செவ்வாய், டிசம்பர் 08, 2015

குறள் எண்: 0128 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 013 - அடக்கமுடைமைகுறள் எண்: 0128}

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்

விழியப்பன் விளக்கம்: பேசுகின்ற சொற்களில், ஒரேயொரு கடுஞ்சொல் தீவினையை விதைத்தால்; மற்றெல்லாச் சொற்களும் நன்றாகாதது ஆகிவிடும்.
(அது போல்...)
முழுமையான வெள்ளைத்தாளில், ஒரேயொரு கரும்புள்ளி பார்வையைச் சிதைத்தால்; மற்றெல்லா வெள்ளைப்பகுதியும் புலப்படாதது ஆகிவிடும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், டிசம்பர் 07, 2015

குறள் எண்: 0127 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 013 - அடக்கமுடைமைகுறள் எண்: 0127}

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

விழியப்பன் விளக்கம்: வேறெதை அடக்காவிட்டாலும், நாவடக்குதல் வேண்டும்; அப்படி அடக்காவிட்டால், சொற்பிழைகள் நிகழ்ந்து - துன்பத்தில் உழற்றும்.
(அதுபோல்)
வேறெதைப் பழகாவிட்டாலும், நேர்மையைப் பழகிடல் வேண்டும்; இல்லையேல், தவறான வழிசென்று - வாழ்க்கை தடம்புரளும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, டிசம்பர் 06, 2015

குறள் எண்: 0126 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 013 - அடக்கமுடைமைகுறள் எண்: 0126}

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் 
எழுமையும் ஏமாப் புடைத்து

விழியப்பன் விளக்கம்: ஆமையைப்போல் - ஐம்புலன்களையும், ஒரு பிறவியில் அடக்கி வாழ்ந்தால்; அது, ஏழு பிறப்புக்கும் பாதுகாப்பு அரணாகும்.
(அது போல்...)
கைகவிரல்ளைப்போல் - ஐம்பூதங்களையும், ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்க முடிந்தால்; அது, எல்லாக் காலத்துக்கும் இயற்கையைப் பாதுகாக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, டிசம்பர் 05, 2015

குறள் எண்: 0125 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 013 - அடக்கமுடைமைகுறள் எண்: 0125}

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து

விழியப்பன் விளக்கம்: பணிவுடன் இருத்தல், எல்லோர்க்கும் நன்மையாம்; முன்பே செல்வந்தர்களாய் இருப்போருக்கும், மேலும் ஒரு செல்வமாகும்.
(அது போல்...)
சுயநலமற்று இருத்தல், பொதுநலத்திற்கு நல்லதாகும்; இயல்பாய் பண்பாளர்களாய் இருப்போருக்கும், மேலும் ஒரு பண்பாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை