{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமை; குறள் எண்: 0135}
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு
ஒழுக்க மிலான்கண் உயர்வு
விழியப்பன் விளக்கம்: பொறாமை உள்ளவர்கள், மேன்மையடைதல் சாத்தியமில்லாதது போல்; ஒழுக்கம் இல்லாதோர், உயர்வதும் சாத்தியமில்லை.
(அது போல்...)
மனச்சிதறல் உள்ளவர்கள், ஒருமுகப்படுதல் சாத்தியமில்லாதது போல்; நற்சிந்தனை இல்லாதோர், உறங்குவதும் சாத்தியமில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக