{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமை; குறள் எண்: 0136}
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து
ஏதம் படுபாக் கறிந்து
விழியப்பன் விளக்கம்: ஒழுக்கம் தவறுதல், குற்றம் விளைவிக்கும் என்பதை உணர்ந்து; மனதுரம் கொண்டோர், ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டர்.
(அது போல்...)
வருங்காலம் மறத்தல், சிரமத்தைக் கொடுக்கும் என்பதை உணர்ந்து; சுறுசுறுப்பான எறும்புகள், முற்காப்பிலிருந்து தவறுவதில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக