செவ்வாய், டிசம்பர் 01, 2015

குறள் எண்: 0121 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 013 - அடக்கமுடைமைகுறள் எண்: 0121}

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 
ஆரிருள் உய்த்து விடும்

விழியப்பன் விளக்கம்: அடக்கமுடன் இருத்தல், தேவர்கள் உலகத்தில் சேர்க்கும்; அடக்கமற்று இருத்தல், அரிய இருள் உலகத்தில் கொண்டு சேர்க்கும்.
(அது போல்...)
அன்புடன் வாழ்தல், மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்; அன்பற்று வாழ்தல், அதீத இன்னல்கள் நிறைந்த சூழலைக் கொடுக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக