பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமை
0131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
விழியப்பன் விளக்கம்: ஒழுக்கம், ஒருவருக்கு ஒப்பற்ற மேன்மையைக் கொடுப்பதால்;
ஒழுக்கம், உயிரைவிட உயர்ந்ததாய் காக்கப்பட வேண்டும்.
உயிரினும் ஓம்பப் படும்
விழியப்பன் விளக்கம்: ஒழுக்கம், ஒருவருக்கு ஒப்பற்ற மேன்மையைக் கொடுப்பதால்;
ஒழுக்கம், உயிரைவிட உயர்ந்ததாய் காக்கப்பட வேண்டும்.
(அது போல்...)
பெற்றோர், பிள்ளைகளுக்கு ஒப்பற்ற தியாகத்தை அளிப்பதால்; பெற்றோரை,
இயற்கையைவிட சிறந்ததாய் போற்ற வேண்டும்.
இயற்கையைவிட சிறந்ததாய் போற்ற வேண்டும்.
0132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றையும் பகுத்தறிந்து ஆராய்ந்திடினும், ஒழுக்கமே
வலிமையானது என்பதால்; சிரமப்பட்டேனும், ஒழுக்கத்தைக் காக்கவேண்டும்.
வலிமையானது என்பதால்; சிரமப்பட்டேனும், ஒழுக்கத்தைக் காக்கவேண்டும்.
(அது போல்...)
எல்லோரையும் வீரத்துடன் வென்றிடினும், மனிதமே மானுட-தத்துவம் என்பதால்;
அடிபணிந்தேனும், மனிதத்தைப் பழகவேண்டும்.
0133. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
விழியப்பன் விளக்கம்: ஒழுக்கமுடன் வாழ்வதே, உயர்ந்த குடிமக்களின் அடையாளம்;
ஒழுக்கம் இல்லாதோர், தாழ்ந்த குடிமக்களாய் ஆகிவிடுவர்.
தகுதியற்ற ஆசிரியர்கள் ஆகிவிடுவர்.
இழிந்த பிறப்பாய் விடும்
விழியப்பன் விளக்கம்: ஒழுக்கமுடன் வாழ்வதே, உயர்ந்த குடிமக்களின் அடையாளம்;
ஒழுக்கம் இல்லாதோர், தாழ்ந்த குடிமக்களாய் ஆகிவிடுவர்.
(அது போல்...)
நேர்மையுடன் கற்பிப்பதே, உயர்தர ஆசிரியர்களின் தொழில்-தர்மம்; நேர்மை அற்றோர்,தகுதியற்ற ஆசிரியர்கள் ஆகிவிடுவர்.
0134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
விழியப்பன் விளக்கம்: வேதம் ஓதுவோர் - கற்றதை மறப்பின், மீண்டும் கற்றுக்கொள்ளலாம்;
ஒழுக்கம் தவறினால், உயர்ந்த பிறப்பிலிருந்து தாழ்வர்.
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
விழியப்பன் விளக்கம்: வேதம் ஓதுவோர் - கற்றதை மறப்பின், மீண்டும் கற்றுக்கொள்ளலாம்;
ஒழுக்கம் தவறினால், உயர்ந்த பிறப்பிலிருந்து தாழ்வர்.
(அது போல்...)
மனிதனாய் பிறந்தோர் - செய்கையில் குறையிருப்பின், திருத்திக் கொள்ளலாம்; மனதில்
கறையிருந்தால், ஆறறிவு விலங்கிலிருந்து குறைவர்.
0135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு
ஒழுக்க மிலான்கண் உயர்வு
விழியப்பன் விளக்கம்: பொறாமை உள்ளவர்கள், மேன்மையடைதல் சாத்தியமில்லாதது
போல்; ஒழுக்கம் இல்லாதோர், உயர்வதும் சாத்தியமில்லை.
(அது போல்...)
மனச்சிதறல் உள்ளவர்கள், ஒருமுகப்படுதல் சாத்தியமில்லாதது போல்; நற்சிந்தனை
இல்லாதோர், உறங்குவதும் சாத்தியமில்லை.
0136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து
விழியப்பன் விளக்கம்: ஒழுக்கம் தவறுதல், குற்றம் விளைவிக்கும் என்பதை உணர்ந்து;
மனதுரம் கொண்டோர், ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டர்.
எறும்புகள், முற்காப்பிலிருந்து தவறுவதில்லை.
ஏதம் படுபாக் கறிந்து
விழியப்பன் விளக்கம்: ஒழுக்கம் தவறுதல், குற்றம் விளைவிக்கும் என்பதை உணர்ந்து;
மனதுரம் கொண்டோர், ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டர்.
(அது போல்...)
வருங்காலம் மறத்தல், சிரமத்தைக் கொடுக்கும் என்பதை உணர்ந்து; சுறுசுறுப்பானஎறும்புகள், முற்காப்பிலிருந்து தவறுவதில்லை.
0137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி
விழியப்பன் விளக்கம்: ஒழுக்கத்தால் ஒருவர் மேன்மையடைவார்; ஆனால்,
ஒழுக்கமின்மையால் அடையக்கூடாத பழியை அடைவார்.
எய்துவர் எய்தாப் பழி
விழியப்பன் விளக்கம்: ஒழுக்கத்தால் ஒருவர் மேன்மையடைவார்; ஆனால்,
ஒழுக்கமின்மையால் அடையக்கூடாத பழியை அடைவார்.
(அது போல்...)
விடாமுயற்சியால் வாழ்க்கை வெற்றியடையும்; ஆனால், முயற்சியின்மையால் எதிர்பாராத
தடுமாற்றத்துக்கு உள்ளாகும்.
0138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
விழியப்பன் விளக்கம்: நல்ல ஒழுக்கம் நன்மைக்கு விதையாக இருக்கும்; தீய ஒழுக்கம்,
எந்த நிலையிலும் துன்பத்தையே தரும்.
நிலையிலும் பயனற்றதையே விளைவிக்கும்.
என்றும் இடும்பை தரும்
விழியப்பன் விளக்கம்: நல்ல ஒழுக்கம் நன்மைக்கு விதையாக இருக்கும்; தீய ஒழுக்கம்,
எந்த நிலையிலும் துன்பத்தையே தரும்.
(அது போல்...)
நல்ல நிலங்கள் நல்-விவசாயத்திற்கு காரணியாக அமையும்; கடின நிலங்கள், எந்தநிலையிலும் பயனற்றதையே விளைவிக்கும்.
0139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்
விழியப்பன் விளக்கம்: நன்னடத்தை உள்ள ஒழுக்கமானோர்க்கு; வாய்-தவறி கூட, தீய
சொற்களை சொல்லுதல் சாத்தியமேயில்லை.
காயப்படுத்த நினைத்தல் சாத்தியமேயில்லை.
வழுக்கியும் வாயாற் சொலல்
விழியப்பன் விளக்கம்: நன்னடத்தை உள்ள ஒழுக்கமானோர்க்கு; வாய்-தவறி கூட, தீய
சொற்களை சொல்லுதல் சாத்தியமேயில்லை.
(அது போல்...)
நல்-நம்பிக்கைகள் உள்ள உறவுகளுக்கு; கனவிலும் கூட, உறவிலிருப்பவரைக்காயப்படுத்த நினைத்தல் சாத்தியமேயில்லை.
0140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
விழியப்பன் விளக்கம்: நிகழ்காலத்திற்கு ஏற்ப உலகத்தோடு ஒன்றி பயணிக்க
முடியாதவர்கள்; எவ்வளவு கற்றிருந்தும், அறிவில்லாதவர்களே.
ஆண்டுகளாயினும், பலவீனமானவையே.
கல்லார் அறிவிலா தார்
விழியப்பன் விளக்கம்: நிகழ்காலத்திற்கு ஏற்ப உலகத்தோடு ஒன்றி பயணிக்க
முடியாதவர்கள்; எவ்வளவு கற்றிருந்தும், அறிவில்லாதவர்களே.
(அது போல்...)
நிகழ்கால பிரச்சனையை மட்டும் விவாதித்து பயணிக்காத உறவுகள்; எவ்வளவுஆண்டுகளாயினும், பலவீனமானவையே.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக