{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமை; குறள் எண்: 0139}
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்
வழுக்கியும் வாயாற் சொலல்
விழியப்பன் விளக்கம்: நன்னடத்தை உள்ள ஒழுக்கமானோர்க்கு; வாய்-தவறி கூட, தீய சொற்களை சொல்லுதல் சாத்தியமேயில்லை.
(அது போல்...)
நல்-நம்பிக்கைகள் உள்ள உறவுகளுக்கு; கனவிலும் கூட, உறவிலிருப்பவரைக் காயப்படுத்த நினைத்தல் சாத்தியமேயில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக