{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமை; குறள் எண்: 0138}
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
என்றும் இடும்பை தரும்
விழியப்பன் விளக்கம்: நல்ல ஒழுக்கம் நன்மைக்கு விதையாக இருக்கும்; தீய ஒழுக்கம், எந்த நிலையிலும் துன்பத்தையே தரும்.
(அது போல்...)
நல்ல நிலங்கள் நல்-விவசாயத்திற்கு காரணியாக அமையும்; கடின நிலங்கள், எந்த நிலையிலும் பயனற்றதையே விளைவிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக