{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமை; குறள் எண்: 0133}
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
இழிந்த பிறப்பாய் விடும்
விழியப்பன் விளக்கம்: ஒழுக்கமுடன் வாழ்வதே, உயர்ந்த குடிமக்களின் அடையாளம்; ஒழுக்கம் இல்லாதோர், தாழ்ந்த குடிமக்களாய் ஆகிவிடுவர்.
(அது போல்...)
நேர்மையுடன் கற்பிப்பதே, உயர்தர ஆசிரியர்களின் தொழில்-தர்மம்; நேர்மை அற்றோர், தகுதியற்ற ஆசிரியர்கள் ஆகிவிடுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக