{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 014 - ஒழுக்கமுடைமை; குறள் எண்: 0132}
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
தேரினும் அஃதே துணை
விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றையும் பகுத்தறிந்து ஆராய்ந்திடினும், ஒழுக்கமே வலிமையானது என்பதால்; சிரமப்பட்டேனும், ஒழுக்கத்தைக் காக்கவேண்டும்.
(அது போல்...)
எல்லோரையும் வீரத்துடன் வென்றிடினும், மனிதமே மானுட-தத்துவம் என்பதால்; அடிபணிந்தேனும், மனிதத்தைப் பழகவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக