பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமை
0141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்
விழியப்பன் விளக்கம்: அறம் மற்றும் பொருள் சார்ந்த உலகப்-பொதுமறையை
ஆராய்ந்தவரிடம்; வேறொருவருடன் உறவிலுள்ள பெண்ணைக் காதலிக்கும் அறியாமை
இருப்பதில்லை.
மற்றவர்களிடம் இருக்கும் தனித்துவத்தைத் தூற்றும் எண்ணம் இருப்பதில்லை.
அறம்பொருள் கண்டார்கண் இல்
விழியப்பன் விளக்கம்: அறம் மற்றும் பொருள் சார்ந்த உலகப்-பொதுமறையை
ஆராய்ந்தவரிடம்; வேறொருவருடன் உறவிலுள்ள பெண்ணைக் காதலிக்கும் அறியாமை
இருப்பதில்லை.
(அது போல்...)
பொறாமை மற்றும் பேராசை சார்ந்த பொது-நியதிகளை உணர்ந்தவர்களிடம்;மற்றவர்களிடம் இருக்கும் தனித்துவத்தைத் தூற்றும் எண்ணம் இருப்பதில்லை.
0142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்
விழியப்பன் விளக்கம்: எவ்விதமான அறநெறிகளை மறந்து பயணிப்பவர்களிலும்; பிறர்
மனைவியை விரும்புகிறவரை விட, அறிவிலார் எவருமில்லை.
நின்றாரின் பேதையார் இல்
விழியப்பன் விளக்கம்: எவ்விதமான அறநெறிகளை மறந்து பயணிப்பவர்களிலும்; பிறர்
மனைவியை விரும்புகிறவரை விட, அறிவிலார் எவருமில்லை.
(அது போல்...)
எவ்விதமான தீய-எண்ணங்களை கொண்டு இருப்பவர்களிலும்; வேண்டாதவர் துன்பத்தை
விரும்புகிறவரை விட, தீயவர் எவருமில்லை.
0143. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்
விழியப்பன் விளக்கம்: சந்தேகமின்றி நம்பிய ஒருவரின் இல்லத்தவளிடம்; தவறான உறவில்
இணைந்திருப்பவர், இறந்தவரைக் காட்டிலும் வேறல்லர்.
தீமை புரிந்தொழுகு வார்
விழியப்பன் விளக்கம்: சந்தேகமின்றி நம்பிய ஒருவரின் இல்லத்தவளிடம்; தவறான உறவில்
இணைந்திருப்பவர், இறந்தவரைக் காட்டிலும் வேறல்லர்.
(அது போல்...)
குறையின்றி விருந்தோம்பிய அன்பரின் குடும்பத்திடம்; பகையான உணர்வோடு
பழகுவோர், விலங்கிலிருந்து மாறுபட்டவர் அல்லர்.
0144. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்
விழியப்பன் விளக்கம்: தினையளவும் ஆராயாமல், பிறர் இல்லத்தாளிடம் விழைந்தால்;
மலையளவு புகழுக்குரியர் ஆயினும், என்ன சிறப்பு?
ஆயினும், என்ன பயன்?
தேரான் பிறனில் புகல்
விழியப்பன் விளக்கம்: தினையளவும் ஆராயாமல், பிறர் இல்லத்தாளிடம் விழைந்தால்;
மலையளவு புகழுக்குரியர் ஆயினும், என்ன சிறப்பு?
(அது போல்...)
எள்ளளவும் மனிதமில்லாமல், பிறர் மனதைப் புன்படுத்தினால்; கடலளவு கல்விக்குரியவர்ஆயினும், என்ன பயன்?
0145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
விழியப்பன் விளக்கம்: வருந்தாமல் கிடைப்பது என்றெண்ணி, பிறர் இல்லத்தாளிடம்
நெறிதவறி நடப்பவன்; எக்காலத்திலும் அழியாத குலப்பழியை அடைவான்.
எந்நேரத்திலும் மறையாத மனவுளைச்சலை அடைவான்.
விளியாது நிற்கும் பழி
விழியப்பன் விளக்கம்: வருந்தாமல் கிடைப்பது என்றெண்ணி, பிறர் இல்லத்தாளிடம்
நெறிதவறி நடப்பவன்; எக்காலத்திலும் அழியாத குலப்பழியை அடைவான்.
(அது போல்...)
சிரமமின்றி சம்பாதிப்பது என்றெண்ணி, தொழில் பங்குதாரரிடம் தர்மமின்றி திருடுபவன்;எந்நேரத்திலும் மறையாத மனவுளைச்சலை அடைவான்.
0146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்
விழியப்பன் விளக்கம்: பிறர் இல்லத்தாளிடம், நெறிதவறி நடந்து கொள்பனிடம்; பகை/
பாவம்/பயம்/பழி - எனும் நான்கும் நீங்காமல் இருக்கும்.
- எனும் நான்கும் எப்போதும் இருக்கும்.
இகவாவாம் இல்லிறப்பான் கண்
விழியப்பன் விளக்கம்: பிறர் இல்லத்தாளிடம், நெறிதவறி நடந்து கொள்பனிடம்; பகை/
பாவம்/பயம்/பழி - எனும் நான்கும் நீங்காமல் இருக்கும்.
(அது போல்...)
பிறர் உரிமைகளை, ஊழல் செய்து பறிப்பவர்களிடம்; பேராசை/பொறாமை/வன்மம்/சூழ்ச்சி- எனும் நான்கும் எப்போதும் இருக்கும்.
0147. அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்
விழியப்பன் விளக்கம்: அறத்தன்மையுடன் இல்லற வாழ்க்கையை வாழ்பவன்; பிறர்
இல்லத்தவளின் பெண்-தன்மையை விரும்பமாட்டான்.
பெண்மை நயவா தவன்
விழியப்பன் விளக்கம்: அறத்தன்மையுடன் இல்லற வாழ்க்கையை வாழ்பவன்; பிறர்
இல்லத்தவளின் பெண்-தன்மையை விரும்பமாட்டான்.
(அது போல்...)
பொதுத்தன்மையுடன் ஜனநாயக ஆட்சியைப் புரிவோர், தம் குடிமக்களின் சுய-தன்மையை
அழிக்கமாட்டார்கள்.
0148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு
விழியப்பன் விளக்கம்: பிறர் மனைவியை - தவறான எண்ணத்துடன், பார்க்காத
மதிப்பிற்குரிய ஆண்மை; சன்றோர்க்கு - அறம் மட்டுமல்ல, முழுமையான ஒழுக்கமும்
ஆகும்.
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு
விழியப்பன் விளக்கம்: பிறர் மனைவியை - தவறான எண்ணத்துடன், பார்க்காத
மதிப்பிற்குரிய ஆண்மை; சன்றோர்க்கு - அறம் மட்டுமல்ல, முழுமையான ஒழுக்கமும்
ஆகும்.
(அது போல்...)
பிறர் உரிமையை - காழ்ப்பு உணர்வுடன், மறுக்காத சிறப்புக்குரிய மனிதம்; மனிதர்க்கு -
அடிப்படை மட்டுமல்ல, புனிதமான பிறவிப்பயனும் ஆகும்.
0149. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்
விழியப்பன் விளக்கம்: பிறர் இல்லத்தாளின் தோளைத் தீண்டாதவரே; அச்சுறுத்தும்
கடலுக்கு நடுவே இருக்கும் இவ்வுலகில், நன்மைக்கு காரணமானர் ஆவர்.
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்
விழியப்பன் விளக்கம்: பிறர் இல்லத்தாளின் தோளைத் தீண்டாதவரே; அச்சுறுத்தும்
கடலுக்கு நடுவே இருக்கும் இவ்வுலகில், நன்மைக்கு காரணமானர் ஆவர்.
(அது போல்...)
பிறர் சொத்துகளை அபகரிக்க முயலாதவரே; பயமுறுத்தும் கொள்ளையர்களுக்கு நடுவே
வாழ்வோர் மனதில், நம்பிக்கையை விதைப்பவர் ஆவர்.
0150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று
விழியப்பன் விளக்கம்: அறத்தை மனம்-கொள்ளாமல், அறமற்ற செயல்களே செய்பவர்
ஆயினும்; பிறரை மணம்-கொண்டவளின், பெண்மையை விரும்பாத தன்மை நன்றாம்.
பெண்மை நயவாமை நன்று
விழியப்பன் விளக்கம்: அறத்தை மனம்-கொள்ளாமல், அறமற்ற செயல்களே செய்பவர்
ஆயினும்; பிறரை மணம்-கொண்டவளின், பெண்மையை விரும்பாத தன்மை நன்றாம்.
(அது போல்...)
பொதுநலத்தை எண்ணாமல், சுயநலமான காரியங்களே செய்பவர் ஆயினும்; பிறரின்
சொத்துக்களை, அபகரிக்காத குணம் சிறப்பாம்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக