திங்கள், பிப்ரவரி 29, 2016

குறள் எண்: 0211 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  022 - ஒப்புரவறிதல்குறள் எண்: 0211}

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு

விழியப்பன் விளக்கம்: ஒப்புரவு எனும் கடமைக்கு, பிரதிபலனை எதிர்பார்க்க வேண்டாம். இவ்வுலகம், மழைக்கு என்ன கைம்மாறு செய்யமுடியும்?
(அது போல்...)
விருந்தோம்பல் எனும் மேன்மைக்கு, சன்மானம் பெறுதல் வேண்டாம். பிள்ளைகள், தாய்மைக்கு என்ன பரிகாரம் செய்யமுடியும்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

அதிகாரம் 021: தீவினையச்சம் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 021 - தீவினையச்சம்

0201.  தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் 
           தீவினை என்னும் செருக்கு

           விழியப்பன் விளக்கம்: சிற்றின்பம் அளிக்கும் தீவினைகளைச் செய்ய - தீவினைகளைப் 
           பழகியோர் அஞ்ச மாட்டார்கள்; ஆனால், உயர் பண்புகளைக் கொண்டோர் அஞ்சுவர்.
(அது போல்...)
           பேராசை தரும் ஊழல்களைப் புரிந்திட - ஊழல்களில் மூழ்கியோர் வெட்கப்பட
           மாட்டார்கள்; ஆனால், பொது நலத்தை நேசிப்போர் வெட்கப்படுவர்.

0202.  தீயவை தீய பயத்தலால் தீயவை 
           தீயினும் அஞ்சப் படும்

           விழியப்பன் விளக்கம்: தீய வினைகள், கெடுதல்களை விளைவிப்பதால்; தீய வினைகளை, 
           தீயை விட கொடியதாய் எண்ணி அஞ்சவேண்டும்.
(அது போல்...)
           தவறான உறவுகள், ஒழுங்கீனங்களை அதிகரிப்பதால்; தவறான உறவுகளை, விஷத்தை 
           விட ஆபத்தாய் எண்ணி தவிர்க்கவேண்டும்.

0203.  அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய 
           செறுவார்க்கும் செய்யா விடல்

           விழியப்பன் விளக்கம்: அனைத்து விதமான அறிவுகளிலும் முதன்மையானது,; நமக்கு தீமை 
           செய்தோர்க்கும், தீவினை செய்யாத பகுத்தறிவாகும்.
(அது போல்...)
           எல்லா வகையான பண்புகளிலும் சிறப்பானது; நமக்கு அவமரியாதை இழைத்தோர்க்கும், 
           அவமரியாதை இழைக்காத மனிதநேயமாகும்.

0204.  மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் 
           அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு

           விழியப்பன் விளக்கம்: மறதியாகவும், பிறருக்கு தீவினை விளைவிக்க எண்ணக்கூடாது; 
           அப்படி எண்ணுவோர்க்கு, அறத்தன்மையே தீவினை விளைவிக்க எண்ணும்.
(அது போல்...)
           பிழையாகவும், நம்பியவர்க்கு துரோகம் செய்ய முயலக்கூடாது; அப்படி முயல்வோர்க்கு, 
           விதியே துரோகம் செய்ய முயலும்.
          
0205.  இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் 
           இலனாகும் மற்றும் பெயர்த்து

           விழியப்பன் விளக்கம்: இல்லை என்பதற்காய், தீயவினைகளைச் செய்யக்கூடாது; அப்படி 
           செய்தால், இருக்கும் நிலையிலிருந்தும் - இல்லாமை மேலும் பெருகும்.
(அது போல்...)
           இன்பமில்லை என்றென, உறவுகளை முறிக்கக்கூடாது; அப்படி முறித்தால், மற்ற 
           உறவுகளிலும் - மகிழ்ச்சி குறையத் துவங்கும்.

0206.  தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால 
           தன்னை அடல்வேண்டா தான்

           விழியப்பன் விளக்கம்: துன்பம் விளைவிக்கும் தீவினைகள், தம்மை நெருங்க விரும்பாதோர்;        
           மற்றவருக்கு தீயவை செய்யாத, உறுதியுடன் இருக்கவேண்டும்.
(அது போல்...)
           சந்தேகம் விதைக்கும் நிகழ்வுகள், தமக்கு நேர்வதை ஏற்காதோர்; பிறர்மேல் சந்தேகம் 
           கொள்ளாத, வைராக்கியமுடன் இருக்கவேண்டும்.

0207.  எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை 
           வீயாது பின்சென்று அடும்

           விழியப்பன் விளக்கம்: எவ்விதமான பகையைக் கொண்டோரும், அதிலிருந்து மீள்வர்; 
           ஆனால், தீவினைகளால் உருவான பகை, மறையாது பின்தொடர்ந்து அழிக்கும்.
(அது போல்...)
           எவ்வகை தீப்பழக்கம் கொண்டோரும், அதை விட்டொழிப்பர்; ஆனால், போதையால் 
           தொடர்ந்த தீப்பழக்கம், பின்விளைவாய் உருவாகி உயிரழிக்கும்.

0208.  தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை 
           வீயாது அடிஉறைந் தற்று

           விழியப்பன் விளக்கம்: தீவினைகளைச் செய்தோர் அழிவது, அவர்களின் நிழல்; எப்போதும் 
           விலகாமல், காலடியில் இணைந்திருப்பது போன்று நிலையானதாகும்.
(அது போல்...)
           தீவிரவாதத்தை ஆதரிப்போர் வீழ்வது, அவர்களின் மனசாட்சி; எந்நிலையிலும் தவறாமல், 
           மனதை உறுத்துவது போன்று நிரந்தரமானதாகும்.

0209.  தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் 
           துன்னற்க தீவினைப் பால்

           விழியப்பன் விளக்கம்: ஒருவர், தன் சுயத்தைக் காதலிப்பவர் ஆயின்; எத்தனை சிறியதே 
           எனினும், தீயச் செயல்களை செய்யாமல் இருக்கவேண்டும்.
(அது போல்...)
           ஒருவர், தன் தொழிலை நேசிபவர் ஆயின்; எந்த அளவானதே எனினும், விதி மீறல்களை 
           செய்யாமல் இருக்கவேண்டும்.

0210.  அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் 
           தீவினை செய்யான் எனின்

           விழியப்பன் விளக்கம்: அறநெறி தவறிய பாதையில் பயணித்து, தீவினைகள்  
           செய்யாதவராயின்; அவர், கேடு இல்லாதவர் என்பதை அறியவேண்டும்.
(அது போல்...)
           சிந்தனை இழந்த நிலையில் வாழ்ந்து, போதைப்பொருட்கள் பழகாதவராயின்; அவர், 
           சோம்பல் அற்றவர் என்பதை உணரவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குறள் எண்: 0210 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0210}

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் 
தீவினை செய்யான் எனின்

விழியப்பன் விளக்கம்: அறநெறி தவறிய பாதையில் பயணித்து, தீவினைகள் செய்யாதவராயின்; அவர், கேடு இல்லாதவர் என்பதை அறியவேண்டும்.
(அது போல்...)
சிந்தனை இழந்த நிலையில் வாழ்ந்து, போதைப்பொருட்கள் பழகாதவராயின்; அவர், சோம்பல் அற்றவர் என்பதை உணரவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, பிப்ரவரி 27, 2016

குறள் எண்: 0209 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0209}

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்

விழியப்பன் விளக்கம்: ஒருவர், தன் சுயத்தைக் காதலிப்பவர் ஆயின்; எத்தனை சிறியதே எனினும், தீயச் செயல்களை செய்யாமல் இருக்கவேண்டும்.
(அது போல்...)
ஒருவர், தன் தொழிலை நேசிபவர் ஆயின்; எந்த அளவானதே எனினும், விதி மீறல்களை செய்யாமல் இருக்கவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குழந்தைப் பேறைத் தள்ளிவைப்பதன் சிறப்பு...


வெள்ளி, பிப்ரவரி 26, 2016

குறள் எண்: 0208 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0208}

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை 
வீயாது அடிஉறைந் தற்று

விழியப்பன் விளக்கம்: தீவினைகளைச் செய்தோர் அழிவது, அவர்களின் நிழல்; எப்போதும் விலகாமல், காலடியில் இணைந்திருப்பது போன்று நிலையானதாகும்.
(அது போல்...)
தீவிரவாதத்தை ஆதரிப்போர் வீழ்வது, அவர்களின் மனசாட்சி; எந்நிலையிலும் தவறாமல், மனதை உறுத்துவது போன்று நிரந்தரமானதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சாபக்கேடான அரசியல்கட்சிகள்...



வியாழன், பிப்ரவரி 25, 2016

குறள் எண்: 0207 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0207}

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை 
வீயாது பின்சென்று அடும்

விழியப்பன் விளக்கம்: எவ்விதமான பகையைக் கொண்டோரும், அதிலிருந்து மீள்வர்; ஆனால், தீவினைகளால் உருவான பகை, மறையாது பின்தொடர்ந்து அழிக்கும்.
(அது போல்...)
எவ்வகை தீப்பழக்கம் கொண்டோரும், அதை விட்டொழிப்பர்; ஆனால், போதையால் தொடர்ந்த தீப்பழக்கம், பின்விளைவாய் உருவாகி உயிரழிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திருமண வாழ்வின் உண்மையான முழுமை...


புதன், பிப்ரவரி 24, 2016

குறள் எண்: 0206 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0206}

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்

விழியப்பன் விளக்கம்: துன்பம் விளைவிக்கும் தீவினைகள், தம்மை நெருங்க விரும்பாதோர்; மற்றவருக்கு தீயவை செய்யாத, உறுதியுடன் இருக்கவேண்டும்.
(அது போல்...)
சந்தேகம் விதைக்கும் நிகழ்வுகள், தமக்கு நேர்வதை ஏற்காதோர்; பிறர்மேல் சந்தேகம் கொள்ளாத, வைராக்கியமுடன் இருக்கவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

பாராட்டுதலும் மனித-இனமும்...


செவ்வாய், பிப்ரவரி 23, 2016

குறள் எண்: 0205 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0205}

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து

விழியப்பன் விளக்கம்: இல்லை என்பதற்காய், தீயவினைகளைச் செய்யக்கூடாது; அப்படி செய்தால், இருக்கும் நிலையிலிருந்தும் - இல்லாமை மேலும் பெருகும்.
(அது போல்...)
இன்பமில்லை என்றென, உறவுகளை முறிக்கக்கூடாது; அப்படி முறித்தால், மற்ற உறவுகளிலும் - மகிழ்ச்சி குறையத் துவங்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

அரசியலும் சமுதாயக்-கடமையும்...

திங்கள், பிப்ரவரி 22, 2016

குறள் எண்: 0204 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0204}

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு

விழியப்பன் விளக்கம்: மறதியாகவும், பிறருக்கு தீவினை விளைவிக்க எண்ணக்கூடாது; அப்படி எண்ணுவோர்க்கு, அறத்தன்மையே தீவினை விளைவிக்க எண்ணும்.
(அது போல்...)
பிழையாகவும், நம்பியவர்க்கு துரோகம் செய்ய முயலக்கூடாது; அப்படி முயல்வோர்க்கு, விதியே துரோகம் செய்ய முயலும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, பிப்ரவரி 21, 2016

குறள் எண்: 0203 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0203}

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

விழியப்பன் விளக்கம்: அனைத்து விதமான அறிவுகளிலும் முதன்மையானது,; நமக்கு தீமை செய்தோர்க்கும், தீவினை செய்யாத பகுத்தறிவாகும்.
(அது போல்...)
எல்லா வகையான பண்புகளிலும் சிறப்பானது; நமக்கு அவமரியாதை இழைத்தோர்க்கும், அவமரியாதை இழைக்காத மனிதநேயமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, பிப்ரவரி 20, 2016

குறள் எண்: 0202 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0202}

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

விழியப்பன் விளக்கம்: தீய வினைகள், கெடுதல்களை விளைவிப்பதால்; தீய வினைகளை, தீயை விட கொடியதாய் எண்ணி அஞ்சவேண்டும்.
(அது போல்...)
தவறான உறவுகள், ஒழுங்கீனங்களை அதிகரிப்பதால்; தவறான உறவுகளை, விஷத்தை விட ஆபத்தாய் எண்ணி தவிர்க்கவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

எவர் அறியாமை இது???



         ஒரு வாரத்திற்கு முன்னர், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்; 1 கோடி மதிப்பிலான "வைர கிரீடத்தை" காணிக்கையாக... 

இல்லையில்லை!!!

"பரிசாக" அளித்தாராம்!
  • "பரிசு" தொகையே இவ்வளவு என்றபின்; இவ்வளவு இலாபத்தை "கொள்முதல் மூலம்" அளித்தவர்களின் அறியாமை என்பதா?
  • தன்னை நம்பி "தொழிலை" ஊக்குவித்த மக்களின் வயிற்றில் அடித்து - இப்படி "பயனற்ற" பரிசை "கடவுளுக்கு" அளித்த அறியாமையை! எண்ணி வருந்துவதா??
  • குறைந்த விலையில் விற்று நுகர்வோரின் "மேன்மையான ஆசிகளை" நேரடியாய்/உடனடியாய் பெற்று இருக்கலாமே? என்று ஆதங்கப்படுவதா???
இல்லை...
  • எல்லாவற்றையும் "பொறுப்பதோடு மட்டும் " நிற்காமல் "பொறுப்பில்லாமல்" இந்த பரிசையும் ஏற்ற "கடவுளின் அறியாமையை" குற்றம் சொல்வதா????
அடப் போங்கய்யா!!!

வெள்ளி, பிப்ரவரி 19, 2016

குறள் எண்: 0201 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0201}

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு

விழியப்பன் விளக்கம்: சிற்றின்பம் அளிக்கும் தீவினைகளைச் செய்ய - தீவினைகளைப் பழகியோர் அஞ்ச மாட்டார்கள்; ஆனால், உயர் பண்புகளைக் கொண்டோர் அஞ்சுவர்.
(அது போல்...)
பேராசை தரும் ஊழல்களைப் புரிந்திட - ஊழல்களில் மூழ்கியோர் வெட்கப்பட மாட்டார்கள்; ஆனால், பொது நலத்தை நேசிப்போர் வெட்கப்படுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சாலை (வீ/வி)திகள்... {பாகம் 2}



           சாலைகளில் வாகன-ஓட்டிகள் செய்யும் விதிமீறல்களை முன்பே "சாலை (வீ/வி)திகள்" என்ற தலையங்கத்தில் எழுதி இருக்கிறேன். அதில், முறையான விதத்ததில் ஓட்டுனர்-உரிமமே இல்லாமலும்; சாலைவிதிகள் என்றால் என்னவென்றே தெரியாமலும் - நாம் செய்யும் தவறுகளை - என் அனுபவத்தையும் "சேர்த்தே" பகிர்ந்திருந்தேன். உணர்ச்சிவயப்பட்டு செய்யப்படும் தவறுகளையும் அடிக்கோடிட்டிருந்தேன். இந்த உணர்ச்சி வயப்படுதலின் உச்சகட்டமான செயல் ஒன்று நம் நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எந்த வித வாகனத்துடனும், கனரக வாகனங்கள் மோதிவிட்டால் - ஓட்டுனரை அடிக்கும் செயல் மிகப்பரவலாய் நடக்கிறது. இப்படி ஓட்டுனரை அடிப்பது - உணர்ச்சி மிகுதியால் நடப்பது என்பது புரிகிறது. இருப்பினும், அப்படி ஓட்டுனரை அடிப்பது/காயப்படுத்துவது; சட்டப்படி குற்றம் என்பதை நாம் உணரவேண்டும். அதை மேலும் வலியுறுத்தவே "சாலை விதிமீறல்களை"ப் பற்றிய இந்த இரண்டாம் பாகம்.

           இதுசார்ந்து, சமீபத்தில் என் நட்பொன்றோடு விவாதித்து இருக்கிறேன். கனரக வாகனங்கள் மட்டுமல்ல! மகிழ்வுந்தில் செல்வோர், மிதிவண்டி/இருசக்கர-வண்டி மீது மோதினாலும் - "உணர்ச்சி மிகுந்த தன்மையால்" இதுபோன்ற தவறுகள்  பெருமளவில் நடக்கின்றன. மகிழ்வுந்து ஓட்டுனரின் மேல் தவறிருப்பினும் கூட; அப்படி ஓட்டுனரை அடித்துக் காயப்படுத்துதல் தவறு. அதிலும், அவர் மேல் தவறே இல்லாத சமயத்தில் - ஓட்டுனரை அடிப்பது - தவறு மட்டுமல்ல! அது குற்றமும் கூட!! இது சாலை விதிமுறைகளை மீறும், விதி-மீறல் ஒழுங்கீனம். எந்த விதமான வாகனங்கள் எனினும், சாலையில் விபத்துகள் நடப்பது தவிர்க்கமுடியாதது என்பதை, எவரும் மறுப்பதற்கில்லை. அப்படி தவறுகள் நேரும் போது; அபராதம் விதித்து அதை ஒழுங்கு படுத்தவே "சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை" மற்றும் அதன் கீழ் வரும் அலுவலகங்களும் இயங்குகின்றன. விபத்து நிகழ்ந்தால் அதை சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவிக்கவேண்டும்.

       அதுசார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதுதான், அந்த துறை சார்ந்த அதிகாரிகளின் முக்கிய அலுவல்; அதற்காகத்தான் "ஓட்டுனர்-உரிமம்/காப்பீடு/சாலைவரி/வாகன-பரிசோதனை" போன்ற  பல விசயங்களும் உள்ளன. இருசக்கரம்/மகிழ்வுந்து/சிற்றுந்து/பேருந்து/கனரகம் - இப்படி எவ்விதமான வாகனங்களுக்கு இடையே விபத்து நடந்தாலும்; சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் கொடுக்கவேண்டும் என்பதே விதி. அதை விடுத்து, விதிகளை மீறி ஓட்டுனர்களை அடிப்பதில் எந்த நியாயமும் இல்லை! அது குற்றம். ஓட்டுனர் மீது தவறே இருப்பினும், அதை சட்டத்தால் தண்டிக்கவே - மேற்குறிப்பிட்ட அத்தனை காரணிகளும் உள்ளன. அப்படி இருக்கும் போது, ஓட்டுனர் மீது தவறே இல்லாதபோது, இப்படிப்பட்ட குற்றங்கள் நிகழ்வதை என்னவென்று சொல்வது? ஒரு முறை, புதுவை-கடலூர் சாலையில் உள்ள இராஜீவ்-காந்தி மருத்துவ கல்லூரிக்கு எதிரே இருந்த சாலைத்தடுப்புக்கு அருகே மகிழ்வுந்தை நிறுத்தி; சாலையைக் கடந்த...

         ஒரு பெண்மணிக்கும்/அவர் குழந்தைக்கும் வழிவிட்டு காத்திருந்தேன். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் நிறுத்தியிருந்த என் வாகனத்தில் இடித்துவிட்டார். நான் கீழே இறங்கி, அவரிடம் நிறுத்தியிருந்த வண்டியில் இப்படி இடித்துவிட்டீரே! உரிய பராமரிப்பு செலவைக் கொடுங்கள் என்றேன். அவர், என் மீது தவறில்லை என்று வாதிடுகிறார். எனக்கு பெருத்த வியப்பு! நிறுத்தி இருக்கும் மகிழ்வுந்தில் இடித்தால் கூடவா, அது மகிழ்வுந்து ஓட்டுனரின் தவறு?! என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அருகே நின்றுகொண்டிருந்த ஒருவர் கொஞ்சமும் யோசனை இன்றி "கார்ல வந்தாலே, திமிராத்தான் வருவானுங்க!" என்று சொன்னார். எனக்கு பெருத்த ஆற்றாமை; நானும் ஒருமையில் "ஏண்டா, இங்கே என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியுமா?! என்றே ஆரபித்தேன்". என்ன நடக்கிறது என்றே தெரியாமல், மகிழ்வுந்து/கனரக ஓட்டுனர் மேல் எடுத்தவுடன் குற்றம் சுமத்தும் செயலும் சர்வசாதரணமாய் நடக்கிறது.

           பேசிக்கொண்டிருக்கும் போதே, அந்த இருசக்கர ஓட்டுனர் கடந்து சென்றேவிட்டார். இதே, நான் அவரை இடித்ததாய் வைத்து யோசிப்போம்; உடனடியாய், என்னை அடிக்கும் எண்ணத்திலேயே துவங்கி இருக்கும், அருகே இருந்த அந்த மனிதரின் செயல். இப்படித்தான் பல இடங்களில் நடக்கிறது; இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவருக்கு அடிபட்டு விட்டதால் மட்டுமே - மற்ற ஓட்டுனர் மீதே தவறென்பது! எப்படி நியாயமாகும்? ஆனால், பெரும்பான்மையில் இப்படியே நடக்கிறது. இதை எவர் எப்படி இடித்துரைத்து திருத்துவது?! இப்படி, அடிப்பதாலேயே மகிழ்வுந்து அல்லது கனரக வாகன ஓட்டுனர்கள் "பயம் காரணமாய்" நிறுத்தாமலேயே செல்ல முயல்கின்றனர். இதுவும், தவறு தான் என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை! அப்படி, தப்பித்து செல்லும் வாகன-ஓட்டிகளை துரத்தி பிடித்து, அடித்து - அவர்களிடம்  இருந்து பணத்தைப் பறிக்கும் கும்பல்களும் பெரும்பான்மையான ஊர்களில் உள்ளன. அவர்களின் வேலையே...

       இப்படி ஓட்ட்டுனர்களிடம் இருந்து பணம் பறிப்பது மட்டுமே. பயத்தின் விளிம்பில் இருக்கும் அந்த ஓட்டுனர்களும், வேறு வழியில்லாமல் - அடியும் வாங்கிக் கொண்டு பணத்தையும் இழக்கின்றனர். இதை எப்படி நியாயப்படுத்த முடியும்?! இதில், அந்த ஓட்டுனர் "அதிகார வர்க்கம்" சார்ந்தவராய் இருந்தால், பிரச்சனை திசை திரும்பிவிடும். அல்லது, அந்த ஓட்டுனரின் உறவினர்/சுற்றம் அங்கு கூடினாலும் பிரச்சனை வேறுவிதமாய் திரும்பிவிடும். விபத்தில் ஒருவர் அடிபட்டதால் - உணர்ச்சிவயப் பட்டு அடித்துவிட்டேன்! என்று மட்டும் சொல்லி இதை நியாயப்படுத்த முடியுமா? அடிவாங்கியவர் - பதிலுக்கு, தன் திமிரைக் காட்ட விரும்பினால்?!... அப்படியும் நிகழ்வுகள் தொடர்கின்றன!  "வலியவன் வெல்வான்!" என்றா, இதை அணுகமுடியும்?! அல்லவே!... இப்படிப்பட்ட ஒழுங்கீனங்கள் நடக்கக்கூடாது என்பதற்கு தானே மேற்குறிப்பிட்ட வண்ணம் - பல துறைகளும்/ஆவணங்களும் நெறிப்படுத்தப் பட்டுள்ளன! பெரும்பான்மையான இருசக்கர...

       வாகன உரிமையாளர்களிடம் முறையான ஆவணங்கள் இருப்பதில்லை. அப்படி இருப்பின், காப்பீடு மூலம் அவர்கள் "முறையான" இழப்பைப் பெறமுடியும். அப்படி முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலேயே, அவர்கள் சட்ட-ரீதியாய் இவற்றை "அணுகமுடியாது" என்பதால்  இப்படி மற்றவரை அடிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். மேலை நாடுகளில், இப்படி நடப்பதேயில்லை; அது, விதிமீறல் விசயம்! என்பது ஒவ்வொருவருக்கும் நன்றாக தெரியும். ஏன்? நம் இந்தியர்களே கூட இங்கே "அடங்கித்தான்" நடக்கின்றனர்! நடக்கவேண்டும். விபத்து நடந்துவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் "அவர்களிடையே" பேசுவது கூட அபூர்வமே! அப்படி இருப்பினும், பேச்சில் எந்த உணர்ச்சி-மீறலும் இருக்காது! இருக்கக்கூடாது. என்ன நிகழ்ந்தாலும், துறை சம்பந்தப்பட்ட காவலர்களை அழைக்க வேண்டும்! அதுவரை, சம்பந்தப்பட்ட வாகனங்கள் அங்கேயே இருக்கும். அவர்கள் வந்ததும், விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து...

          தவறிழைத்தவரின் காப்பீட்டில் இருந்து, சரியாய் ஓட்டியவருக்கு இழப்பீடு வழங்க உதவுவர். நம் நாட்டிலும், இதே விதிமுறைகள் தான்! சாலைப் போக்குவரத்து விதிகளை - மற்ற நாடுகளுடன், ஒன்றுபட்ட-உடன்படிக்கை மூலமே, பல்வேறு நாடுகளும் உருவாக்கியுள்ளன. சாலைவிதிகளைப் பற்றிய அறிவீனத்துடனும்; எந்த "குற்ற உணர்வுமின்றி" உரிய ஆவணங்கள் இன்றியும் - பல்வேறு வகையான வாகனங்களை ஓட்டுவது - நம் நாட்டில் சர்வசாதரணமாய் நடக்கின்றது. இந்த விதிமீறல்கள் தான், தன் ப(ய/ல)த்தைக் காட்ட மற்றவரை அடிக்கும் செயலுக்கு வழிவகுக்கிறது. இந்த விதிமீறல்கள் பெரிய குற்றமா?! என்றால்... நிச்சயம் பெரிய குற்றம் தான். நேரடியாய் இந்த நிகழ்வை சந்திக்கும் வரை, இந்த குற்றத்தின் தாக்கம் முழுமையாய் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இந்த "விதிமீறல்கள் குற்றமே!" என்ற அடிப்படை நம் எண்ணத்தில் அழுத்தமாய் பதிந்து, செயலாய் உருப்பெற வேண்டும். இப்படிப்பட்ட ஒழுங்கீனங்களின் உச்சகட்டம்தான்...

சாலை-விபத்துக்காய்...
கறுப்பினர் என்ற "பொய்ப் போர்வையில்" 
ஒரு பெண்ணை நிர்வானப்படுத்திய அவமானச்செயல்!!!

வியாழன், பிப்ரவரி 18, 2016

அதிகாரம் 020: பயனில சொல்லாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 020 - பயனில சொல்லாமை

0191.  பல்லார் முனியப் பயனில சொல்லுவான் 
           எல்லாரும் எள்ளப் படும்

           விழியப்பன் விளக்கம்: பெரும்பான்மையினர் வெறுக்கும் வண்ணம், பயனற்ற சொற்களைப் 
           பேசுவோர்; எல்லோராலும் இகழப்படுவர்.
(அது போல்...)
           குடும்பத்தினர் எதிர்க்கும் வகையில், முறையற்ற வாழ்க்கையை வாழ்வோர்; சமூகத்தால் 
           பழிக்கப்படுவர்.

0192.  பயனில பல்லார்முன் சொல்லல் நயனில 
           நட்டார்கண் செய்தலிற் றீது

           விழியப்பன் விளக்கம்: பலரின் முன்னிலையில், பயனற்ற சொற்களைப் பேசுதல்; 
           நண்பர்களுக்கு அறமற்றதைச் செய்வதை விட, அதீத தீமையானது.
(அது போல்...)
           ஊரின் பொதுவிடத்தில், நாகரீகமற்ற வகையில் நடத்தல்; குடும்பத்தில் ஒழுக்கமற்றதைச்
           செய்வதை விட, அதிக அவமானமானது.

0193.  நயனிலன் என்பது சொல்லும் பயனில 
           பாரித் துரைக்கும் உரை

           விழியப்பன் விளக்கம்: பயனற்ற விசயங்களைப் பற்றி, ஆழமாய் விவரிக்கும் பேச்சே; ஒருவர்  
           அறநெறிகளைப் பின்பற்றாதவர், என்பதை உணர்த்தும்.
(அது போல்...)
           ஆதாரமற்ற விசயங்கள் பற்றி, ஆரவாரமாய் விவரிக்கும் பிரச்சாரமே; ஒர்கட்சி
           நேர்மையைத் தொடராதது, என்பதை உரைக்கும்.

0194.  நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 
           பண்பில்சொல் பல்லா ரகத்து

           விழியப்பன் விளக்கம்: பயனில்லாத, பண்பற்ற சொற்களைப் பலர் முன்னிலையிலும் 
           பேசுதல்; ஒருவரை, அறம் சார்ந்த நன்மையிலிருந்து விலக்கிவிடும்.
(அது போல்...)
           மனிதமில்லாத, நேர்மையற்ற இளைஞர்களைப் பல தொகுதியிலும் வளர்த்தல்;  
           ஒருதேசத்தை, நேசம் பாதுகாத்த ஒற்றுமையிலிருந்து சிதைத்துவிடும்.
          
0195.  சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில 
           நீர்மை யுடையார் சொலின்

           விழியப்பன் விளக்கம்: உயரிய குணங்களை உடையவர், பயனற்றச் சொற்களைப் 
           பேசுவாராயின்; அவரின் மேன்மை, தனித்தன்மையுடன் சேர்ந்து நீங்கிவிடும்.
(அது போல்...)
           அதிக தொகுதிகளை வென்றவர், பொதுநலமற்ற திட்டங்களை வகுப்பாராயின்; அவரது 
           பதவி, ஆட்சிக்கட்டிலோடு சேர்த்து அகற்றப்படும்.

0196.  பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
           மக்கட் பதடி யெனல்

           விழியப்பன் விளக்கம்: நன்மை பயக்காத சொற்கள் பேசுவதை, வழக்கமாக 
           கொண்டிருப்பவரை; மனிதர் என்பதை விட, மக்களில் பதர் என்பதே சரியானதாகும்.
(அது போல்...)
           பொதுநலம் இல்லாத ஆட்சி நடத்துவதை, வாடிக்கையாய் கொண்டிருப்பவரை; 
           தலைவர் என்பதை விட, ஆட்சியரில் தீயர் என்பதே பொருத்தமானது.

0197.  நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் 
           பயனில சொல்லாமை நன்று

           விழியப்பன் விளக்கம்: சான்றோர்கள், அறமற்றவற்றைப் பேசினாலும் பேசலாம்; ஆனால், 
           பயனில்லாதவற்றைப் பேசாமல் இருத்தல் நன்மையாகும்.
(அது போல்...)
           ஆன்மீக-குருக்கள், சாத்தியமற்றவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; ஆனால், 
           நிகழாதவற்றை சொல்லாமல் இருத்தல் நன்றாகும்.

0198.  அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 
           பெரும்பயன் இல்லாத சொல்

           விழியப்பன் விளக்கம்: உயரிய நன்மைகளை, ஆராயும் பகுத்தறிவு கொண்டவர்கள்; அதிக  
           பயன் தராத, சொற்களைப் பேசமாட்டார்கள்.
(அது போல்...)
           சிறந்த தலைவர்களை, தொடரும் பொதுநலம் விரும்புவோர்; ஆழ்ந்த மனிதம்
           விதைக்காத, மனிதர்களை ஆதரிக்கமாட்டார்கள்.

0199.  பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த 
           மாசறு காட்சி யவர்

           விழியப்பன் விளக்கம்: குழப்பம் எனும் அறியாமையை நீக்கிய, தேர்ந்த பகுத்தறிவாளர்கள்; 
           பயனில்லாத சொற்களை, மறந்தும் பேசமாட்டார்கள்.
(அது போல்...)
           மூர்க்கம் எனும் மிருகத்தன்மையை நீத்த, உயர்ந்த பண்பாளர்கள்; நேர்மையில்லாத 
           செயல்களை, ஒருபோதும் செய்யமாட்டார்கள்.

0200.  சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
           சொல்லிற் பயனிலாச் சொல்

           விழியப்பன் விளக்கம்: பேசும் சொற்களில் - நன்மை பயக்கும் சொற்களைப் பேசவேண்டும்; 
           நன்மை பயக்காத சொற்களைப் பேசக்கூடாது!
(அது போல்...)
           கொள்ளும் உறவுகளில் - சட்டத்திற்கு உட்பட்ட உறவுகளைக் கொள்ளவேண்டும்! 
           சட்டத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொள்ளக்கூடாது!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குறள் எண்: 0200 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  020 - பயனில சொல்லாமைகுறள் எண்: 0200}

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

விழியப்பன் விளக்கம்: பேசும் சொற்களில் - நன்மை பயக்கும் சொற்களைப் பேசவேண்டும்; நன்மை பயக்காத சொற்களைப் பேசக்கூடாது!
(அது போல்...)
கொள்ளும் உறவுகளில் - சட்டத்திற்கு உட்பட்ட உறவுகளைக் கொள்ளவேண்டும்! சட்டத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொள்ளக்கூடாது!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், பிப்ரவரி 17, 2016

குறள் எண்: 0199 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  020 - பயனில சொல்லாமைகுறள் எண்: 0199}

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்

விழியப்பன் விளக்கம்: குழப்பம் எனும் அறியாமையை நீக்கிய, தேர்ந்த பகுத்தறிவாளர்கள்; பயனில்லாத சொற்களை, மறந்தும் பேசமாட்டார்கள்.
(அது போல்...)
மூர்க்கம் எனும் மிருகத்தன்மையை நீத்த, உயர்ந்த பண்பாளர்கள்; நேர்மையில்லாத செயல்களை, ஒருபோதும் செய்யமாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், பிப்ரவரி 16, 2016

குறள் எண்: 0198 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  020 - பயனில சொல்லாமைகுறள் எண்: 0198}

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்

விழியப்பன் விளக்கம்: உயரிய நன்மைகளை, ஆராயும் பகுத்தறிவு கொண்டவர்கள்; அதிக பயன் தராத, சொற்களைப் பேசமாட்டார்கள்.
(அது போல்...)
சிறந்த தலைவர்களை, தொடரும் பொதுநலம் விரும்புவோர்; ஆழ்ந்த மனிதம் விதைக்காத, மனிதர்களை ஆதரிக்கமாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், பிப்ரவரி 15, 2016

குறள் எண்: 0197 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  020 - பயனில சொல்லாமைகுறள் எண்: 0197}

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று

விழியப்பன் விளக்கம்: சான்றோர்கள், அறமற்றவற்றைப் பேசினாலும் பேசலாம்; ஆனால், பயனில்லாதவற்றைப் பேசாமல் இருத்தல் நன்மையாகும்.
(அது போல்...)
ஆன்மீக-குருக்கள், சாத்தியமற்றவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; ஆனால், நிகழாதவற்றை சொல்லாமல் இருத்தல் நன்றாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, பிப்ரவரி 14, 2016

குறள் எண்: 0196 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  020 - பயனில சொல்லாமைகுறள் எண்: 0196}

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்

விழியப்பன் விளக்கம்: நன்மை பயக்காத சொற்கள் பேசுவதை, வழக்கமாக கொண்டிருப்பவரை; மனிதர் என்பதை விட, மக்களில் பதர் என்பதே சரியானதாகும்.
(அது போல்...)
பொதுநலம் இல்லாத ஆட்சி நடத்துவதை, வாடிக்கையாய் கொண்டிருப்பவரை; தலைவர் என்பதை விட, ஆட்சியரில் தீயர் என்பதே பொருத்தமானது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, பிப்ரவரி 13, 2016

குறள் எண்: 0195 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  020 - பயனில சொல்லாமைகுறள் எண்: 0195}

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

விழியப்பன் விளக்கம்: உயரிய குணங்களை உடையவர், பயனற்றச் சொற்களைப் பேசுவாராயின்; அவரின் மேன்மை, தனித்தன்மையுடன் சேர்ந்து நீங்கிவிடும்.
(அது போல்...)
அதிக தொகுதிகளை வென்றவர், பொதுநலமற்ற திட்டங்களை வகுப்பாராயின்; அவரது பதவி, ஆட்சிக்கட்டிலோடு சேர்த்து அகற்றப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, பிப்ரவரி 12, 2016

குறள் எண்: 0194 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  020 - பயனில சொல்லாமைகுறள் எண்: 0194}

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

விழியப்பன் விளக்கம்: பயனில்லாத, பண்பற்ற சொற்களைப் பலர் முன்னிலையிலும்  பேசுதல்; ஒருவரை, அறம் சார்ந்த நன்மையிலிருந்து விலக்கிவிடும்.
(அது போல்...)
மனிதமில்லாத, நேர்மையற்ற இளைஞர்களைப் பல தொகுதியிலும் வளர்த்தல்; ஒருதேசத்தை, நேசம் பாதுகாத்த ஒற்றுமையிலிருந்து சிதைத்துவிடும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், பிப்ரவரி 11, 2016

ஆன்மீகமும், மனித-ஆளுமையும்...

குறள் எண்: 0193 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  020 - பயனில சொல்லாமைகுறள் எண்: 0193}

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

விழியப்பன் விளக்கம்: பயனற்ற விசயங்களைப் பற்றி, ஆழமாய் விவரிக்கும் பேச்சே; ஒருவர்  அறநெறிகளைப் பின்பற்றாதவர், என்பதை உணர்த்தும்.
(அது போல்...)
ஆதாரமற்ற விசயங்கள் பற்றி, ஆரவாரமாய் விவரிக்கும் பிரச்சாரமே; ஒர்கட்சி நேர்மையைத் தொடராதது, என்பதை உரைக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், பிப்ரவரி 10, 2016

குறள் எண்: 0192 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  020 - பயனில சொல்லாமைகுறள் எண்: 0192}

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது

விழியப்பன் விளக்கம்: பலரின் முன்னிலையில், பயனற்ற சொற்களைப் பேசுதல்; நண்பர்களுக்கு அறமற்றதைச் செய்வதை விட, அதீத தீமையானது.
(அது போல்...)
ஊரின் பொதுவிடத்தில், நாகரீகமற்ற வகையில் நடத்தல்; குடும்பத்தில் ஒழுக்கமற்றதைச் செய்வதை விட, அதிக அவமானமானது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், பிப்ரவரி 09, 2016

குறள் எண்: 0191 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  020 - பயனில சொல்லாமைகுறள் எண்: 0191}

பல்லார் முனியப் பயனில சொல்லுவான் 
எல்லாரும் எள்ளப் படும்

விழியப்பன் விளக்கம்: பெரும்பான்மையினர் வெறுக்கும் வண்ணம், பயனற்ற சொற்களைப் பேசுவோர்; எல்லோராலும் இகழப்படுவர்.
(அது போல்...)
குடும்பத்தினர் எதிர்க்கும் வகையில், முறையற்ற வாழ்க்கையை வாழ்வோர்; சமூகத்தால் பழிக்கப்படுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வட்டியும் முதலாளியும்...


திங்கள், பிப்ரவரி 08, 2016

அதிகாரம் 019: புறங்கூறாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 019 - புறங்கூறாமை

0181.  அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் 
           புறங்கூறான் என்றல் இனிது

           விழியப்பன் விளக்கம்: அறத்தை எடுத்துரைக்காமல், அறமல்லவற்றை செய்பவரே ஆயினும்; 
           மற்றவரைப் புறம் பேசமாட்டார் எனும் நேர்மை, அவருக்கு நன்மையளிக்கும்.
(அது போல்...)
           உறவுகளை மதிக்காமல், சரியில்லாதவற்றை செய்பவரே ஆயினும்; பெற்றோரை கைவிட 
           மாட்டார் எனும் சிறப்பு, அவரை உயர்ந்தவராக்கும்.

0182.  அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே 
           புறனழீஇப் பொய்த்து நகை

           விழியப்பன் விளக்கம்: ஒருவரைப் பழித்து புறம் பேசிவிட்டு, நேரில் பொய்யாக நகைத்துப் 
           பேசுவது; அறநெறிகளை அழித்து, பாவச்செயல்களை செய்தலை விட தீமையானது.
(அது போல்...)
           மக்களைப் பற்றிய அக்கறையை விலக்கிவிட்டு, பிரச்சாரத்தில் பொய்யாக வாக்குறுதி 
           கொடுப்பது; உயிர்களைக் கொன்று, பாவங்களைச் சேர்ப்பதை விட ஆபத்தானது.

0183.  புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் 
           அறங்கூற்றும் ஆக்கத் தரும்

           விழியப்பன் விளக்கம்: புறம் பேசிவிட்டு, பொய்யாய் வாழ்வதை விட; இறந்துபோதல்;
           அறநூல்கள் எடுத்துரைக்கும் உயர்வைக் கொடுக்கும்.
(அது போல்...)
           அன்பை அழித்துவிட்டு, வஞ்சனையாய் உறவாடுவதை விட; விலகிவிடுதல்; சான்றோர்கள்
           பரிந்துரைக்கும் நிறைவைக் கொடுக்கும்.

0184.  கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
           முன்னின்று பின்நோக்காச் சொல்

           விழியப்பன் விளக்கம்: பிறரின் முன் நின்று, கருணையில்லாமல் கூட பேசலாம்; ஆனால், 
           புறம் நின்று; பின் விளைவை ஆராயாமல் - புறம் பேசுவதல் கூடாது!
(அது போல்...)
           உறவில் இருந்து கொண்டு, பொறுமையில்லாமல் கூட நடத்தலாம்; ஆனால், பிரிந்து 
           சென்று; பிரிவின் தன்மையை உணராமல் - குறை கூறுதல் தவறு!
          
0185.  அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் 
           புன்மையாற் காணப் படும்

           விழியப்பன் விளக்கம்: பிறரைப் புரளிபேசும் இழிசெயலைக் கொண்டே; ஒருவர், 
           அறவழியில் பயணிக்கும் நெஞ்சுறுதி கொண்டவர் அல்லர் - என்பது உணரப்படும்.
(அது போல்...)
           பிறகட்சியைப் பொய்யாய் விமர்சிப்பதை வைத்தே; ஒருகட்சி, நேர்மையுடன் செயல்படும் 
           கொள்கை உடையது அல்ல - என்பது அறியப்படும்.

0186.  பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் 
           திறன்தெரிந்து கூறப் படும்

           விழியப்பன் விளக்கம்: பிற சகமனிதரின் குறைகளைப், புரளியாய் பேசும் மனிதர்களின் 
           குறைகளும்; அவற்றின் வகையறிந்துப், பிற சகமனிதர்களால் புரளியாய் பேசப்படும்.
(அது போல்...)
           பிற கட்சியின் தவறுகளைப், விமர்சனமாய் பேசும் கட்சியின் தவறுகளும்; அவற்றின் 
           தாக்கமறிந்து, மற்ற கட்சிகளால் விமர்சனமாய் பேசப்படும்.

0187.  பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி 
           நட்பாடல் தேற்றா தவர்

           விழியப்பன் விளக்கம்: மகிழ்வுடன் பேசி, உறவுகளை நண்பர்களாக்கத் தெரியாதோர்; புறம் 
           பேசி, இருக்கும் உறவுகளை பிரித்துவிடுவர்.
(அது போல்...)
           பொதுநலமுடன் சிந்தித்து, கட்சிகளை ஒருங்கிணைக்க இயலாதோர்; சுயம் அழித்து, 
           இருக்கும் கூட்டணியைச் சிதைத்துவிடுவர்.

0188.  துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் 
           என்னைகொல் ஏதிலார் மாட்டு

           விழியப்பன் விளக்கம்: தம் சுற்றத்தின் குற்றத்தையே, புறம் பேசும் இயல்புடையவர்கள்; 
           அந்நியர்களின் செயல்பாடுளில், என்னதான் விமர்சிக்கமாட்டார்கள்?
(அது போல்...)
           தம் கட்சியின் குறையையே, பழித்துப் பேசும் கட்சிக்காரர்கள்; புதுகட்சிகளின் 
           குறைகளை, எப்படித்தான் பழிக்கமாட்டார்கள்?

0189.  அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் 
           புன்சொல் உரைப்பான் பொறை

           விழியப்பன் விளக்கம்: "பிறரைக் கொடுஞ் சொற்களால், புறம் பேசுவோரைச் சுமப்பதும் 
           அறத்தன்மையே!" என்றெண்ணி தான், இப்புவித்தாய் சுமக்கிறதோ?
(அது போல்...)
           "பிறகட்சிகளைத் பண்பற்ற முறையில், விமர்சித்துப் பேசுவோரை மன்னிப்பதும் 
           இயலாமையே!" என்றுணர்ந்து தான், பொதுமக்கள் கடக்கிறார்களோ?

0190.  ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் 
           தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

           விழியப்பன் விளக்கம்: பிறரின் குற்றங்களைப் புரளி-பேசுவதைப் போல், தம் 
           குற்றங்களையும் ஆராய்ந்தால்;  நிலைத்து வாழும் உலக உயிர்களுக்குத்     
           தீமையேதுமுண்டோ?
(அது போல்...)
           பிற-கட்சியின் ஊழல்களை விமர்சிப்பதைப் போல், தமது ஊழல்களையும் உணர்ந்தால்; 
           துன்புற்று வாழும் பொது மக்களுக்கு இன்னலேதுமுண்டோ?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை