வியாழன், பிப்ரவரி 04, 2016

குறள் எண்: 0186 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  019 - புறங்கூறாமைகுறள் எண்: 0186}

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்

விழியப்பன் விளக்கம்: பிற சகமனிதரின் குறைகளைப், புரளியாய் பேசும் மனிதர்களின் குறைகளும்; அவற்றின் வகையறிந்துப், பிற சகமனிதர்களால் புரளியாய் பேசப்படும்.
(அது போல்...)
பிற கட்சியின் தவறுகளைப், விமர்சனமாய் பேசும் கட்சியின் தவறுகளும்; அவற்றின் தாக்கமறிந்து, மற்ற கட்சிகளால் விமர்சனமாய் பேசப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக