வெள்ளி, பிப்ரவரி 05, 2016

குறள் எண்: 0187 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  019 - புறங்கூறாமைகுறள் எண்: 0187}

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி 
நட்பாடல் தேற்றா தவர்

விழியப்பன் விளக்கம்: மகிழ்வுடன் பேசி, உறவுகளை நண்பர்களாக்கத் தெரியாதோர்; புறம் பேசி, இருக்கும் உறவுகளை பிரித்துவிடுவர்.
(அது போல்...)
பொதுநலமுடன் சிந்தித்து, கட்சிகளை ஒருங்கிணைக்க இயலாதோர்; சுயம் அழித்து, இருக்கும் கூட்டணியைச் சிதைத்துவிடுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக