பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 020 - பயனில சொல்லாமை
0191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
விழியப்பன் விளக்கம்: பெரும்பான்மையினர் வெறுக்கும் வண்ணம், பயனற்ற சொற்களைப்
பேசுவோர்; எல்லோராலும் இகழப்படுவர்.
எல்லாரும் எள்ளப் படும்
விழியப்பன் விளக்கம்: பெரும்பான்மையினர் வெறுக்கும் வண்ணம், பயனற்ற சொற்களைப்
பேசுவோர்; எல்லோராலும் இகழப்படுவர்.
(அது போல்...)
குடும்பத்தினர் எதிர்க்கும் வகையில், முறையற்ற வாழ்க்கையை வாழ்வோர்; சமூகத்தால்
பழிக்கப்படுவர்.
0192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது
விழியப்பன் விளக்கம்: பலரின் முன்னிலையில், பயனற்ற சொற்களைப் பேசுதல்;
நண்பர்களுக்கு அறமற்றதைச் செய்வதை விட, அதீத தீமையானது.
நட்டார்கண் செய்தலிற் றீது
விழியப்பன் விளக்கம்: பலரின் முன்னிலையில், பயனற்ற சொற்களைப் பேசுதல்;
நண்பர்களுக்கு அறமற்றதைச் செய்வதை விட, அதீத தீமையானது.
(அது போல்...)
ஊரின் பொதுவிடத்தில், நாகரீகமற்ற வகையில் நடத்தல்; குடும்பத்தில் ஒழுக்கமற்றதைச்
செய்வதை விட, அதிக அவமானமானது.
செய்வதை விட, அதிக அவமானமானது.
0193. நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை
விழியப்பன் விளக்கம்: பயனற்ற விசயங்களைப் பற்றி, ஆழமாய் விவரிக்கும் பேச்சே; ஒருவர்
அறநெறிகளைப் பின்பற்றாதவர், என்பதை உணர்த்தும்.
பாரித் துரைக்கும் உரை
விழியப்பன் விளக்கம்: பயனற்ற விசயங்களைப் பற்றி, ஆழமாய் விவரிக்கும் பேச்சே; ஒருவர்
அறநெறிகளைப் பின்பற்றாதவர், என்பதை உணர்த்தும்.
(அது போல்...)
ஆதாரமற்ற விசயங்கள் பற்றி, ஆரவாரமாய் விவரிக்கும் பிரச்சாரமே; ஒர்கட்சி
நேர்மையைத் தொடராதது, என்பதை உரைக்கும்.
நேர்மையைத் தொடராதது, என்பதை உரைக்கும்.
0194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து
விழியப்பன் விளக்கம்: பயனில்லாத, பண்பற்ற சொற்களைப் பலர் முன்னிலையிலும்
பேசுதல்; ஒருவரை, அறம் சார்ந்த நன்மையிலிருந்து விலக்கிவிடும்.
பண்பில்சொல் பல்லா ரகத்து
விழியப்பன் விளக்கம்: பயனில்லாத, பண்பற்ற சொற்களைப் பலர் முன்னிலையிலும்
பேசுதல்; ஒருவரை, அறம் சார்ந்த நன்மையிலிருந்து விலக்கிவிடும்.
(அது போல்...)
மனிதமில்லாத, நேர்மையற்ற இளைஞர்களைப் பல தொகுதியிலும் வளர்த்தல்;
ஒருதேசத்தை, நேசம் பாதுகாத்த ஒற்றுமையிலிருந்து சிதைத்துவிடும்.
0195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்
விழியப்பன் விளக்கம்: உயரிய குணங்களை உடையவர், பயனற்றச் சொற்களைப்
பேசுவாராயின்; அவரின் மேன்மை, தனித்தன்மையுடன் சேர்ந்து நீங்கிவிடும்.
நீர்மை யுடையார் சொலின்
விழியப்பன் விளக்கம்: உயரிய குணங்களை உடையவர், பயனற்றச் சொற்களைப்
பேசுவாராயின்; அவரின் மேன்மை, தனித்தன்மையுடன் சேர்ந்து நீங்கிவிடும்.
(அது போல்...)
அதிக தொகுதிகளை வென்றவர், பொதுநலமற்ற திட்டங்களை வகுப்பாராயின்; அவரது
பதவி, ஆட்சிக்கட்டிலோடு சேர்த்து அகற்றப்படும்.
0196. பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்
விழியப்பன் விளக்கம்: நன்மை பயக்காத சொற்கள் பேசுவதை, வழக்கமாக
கொண்டிருப்பவரை; மனிதர் என்பதை விட, மக்களில் பதர் என்பதே சரியானதாகும்.
மக்கட் பதடி யெனல்
விழியப்பன் விளக்கம்: நன்மை பயக்காத சொற்கள் பேசுவதை, வழக்கமாக
கொண்டிருப்பவரை; மனிதர் என்பதை விட, மக்களில் பதர் என்பதே சரியானதாகும்.
(அது போல்...)
பொதுநலம் இல்லாத ஆட்சி நடத்துவதை, வாடிக்கையாய் கொண்டிருப்பவரை;
தலைவர் என்பதை விட, ஆட்சியரில் தீயர் என்பதே பொருத்தமானது.
0197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
விழியப்பன் விளக்கம்: சான்றோர்கள், அறமற்றவற்றைப் பேசினாலும் பேசலாம்; ஆனால்,
பயனில்லாதவற்றைப் பேசாமல் இருத்தல் நன்மையாகும்.
பயனில சொல்லாமை நன்று
விழியப்பன் விளக்கம்: சான்றோர்கள், அறமற்றவற்றைப் பேசினாலும் பேசலாம்; ஆனால்,
பயனில்லாதவற்றைப் பேசாமல் இருத்தல் நன்மையாகும்.
(அது போல்...)
ஆன்மீக-குருக்கள், சாத்தியமற்றவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; ஆனால்,
நிகழாதவற்றை சொல்லாமல் இருத்தல் நன்றாகும்.
0198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
விழியப்பன் விளக்கம்: உயரிய நன்மைகளை, ஆராயும் பகுத்தறிவு கொண்டவர்கள்; அதிக
பயன் தராத, சொற்களைப் பேசமாட்டார்கள்.
பெரும்பயன் இல்லாத சொல்
விழியப்பன் விளக்கம்: உயரிய நன்மைகளை, ஆராயும் பகுத்தறிவு கொண்டவர்கள்; அதிக
பயன் தராத, சொற்களைப் பேசமாட்டார்கள்.
(அது போல்...)
சிறந்த தலைவர்களை, தொடரும் பொதுநலம் விரும்புவோர்; ஆழ்ந்த மனிதம்
விதைக்காத, மனிதர்களை ஆதரிக்கமாட்டார்கள்.
விதைக்காத, மனிதர்களை ஆதரிக்கமாட்டார்கள்.
0199. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்
விழியப்பன் விளக்கம்: குழப்பம் எனும் அறியாமையை நீக்கிய, தேர்ந்த பகுத்தறிவாளர்கள்;
பயனில்லாத சொற்களை, மறந்தும் பேசமாட்டார்கள்.
மாசறு காட்சி யவர்
விழியப்பன் விளக்கம்: குழப்பம் எனும் அறியாமையை நீக்கிய, தேர்ந்த பகுத்தறிவாளர்கள்;
பயனில்லாத சொற்களை, மறந்தும் பேசமாட்டார்கள்.
(அது போல்...)
மூர்க்கம் எனும் மிருகத்தன்மையை நீத்த, உயர்ந்த பண்பாளர்கள்; நேர்மையில்லாத
செயல்களை, ஒருபோதும் செய்யமாட்டார்கள்.
0200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
விழியப்பன் விளக்கம்: பேசும் சொற்களில் - நன்மை பயக்கும் சொற்களைப் பேசவேண்டும்;
நன்மை பயக்காத சொற்களைப் பேசக்கூடாது!
சொல்லிற் பயனிலாச் சொல்
விழியப்பன் விளக்கம்: பேசும் சொற்களில் - நன்மை பயக்கும் சொற்களைப் பேசவேண்டும்;
நன்மை பயக்காத சொற்களைப் பேசக்கூடாது!
(அது போல்...)
கொள்ளும் உறவுகளில் - சட்டத்திற்கு உட்பட்ட உறவுகளைக் கொள்ளவேண்டும்!
சட்டத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொள்ளக்கூடாது!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக