திங்கள், பிப்ரவரி 08, 2016

குறள் எண்: 0190 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  019 - புறங்கூறாமைகுறள் எண்: 0190}

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் 
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

விழியப்பன் விளக்கம்: பிறரின் குற்றங்களைப் புரளி-பேசுவதைப் போல், தம் குற்றங்களையும் ஆராய்ந்தால்;  நிலைத்து வாழும் உலக உயிர்களுக்குத் தீமையேதுமுண்டோ?
(அது போல்...)
பிற-கட்சியின் ஊழல்களை விமர்சிப்பதைப் போல், தமது ஊழல்களையும் உணர்ந்தால்; துன்புற்று வாழும் பொது மக்களுக்கு இன்னலேதுமுண்டோ?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக