வியாழன், மார்ச் 31, 2016

குறள் எண்: 0242 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  025 - அருளுடைமைகுறள் எண்: 0242}

நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை

விழியப்பன் விளக்கம்: நல்ல நெறிகளைப் பழகி, அருளைக் கொண்டிடல் வேண்டும்; பல்வேறு சமயநெறிகளை ஆராய்ந்தாலும், அருளே உன்னதமென புரியும்.
(அது போல்...)
சரியான வாழ்வியலை உணர்ந்து, உறவைப் பேணுதல் வேண்டும்; பல்வகை வாழ்வியலை ஆய்ந்தாலும், உறவே பலமென தெரியும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதன், மார்ச் 30, 2016

குறள் எண்: 0241 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்:  025 - அருளுடைமைகுறள் எண்: 0241}

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள

விழியப்பன் விளக்கம்: தற்காலிக மகிழ்ச்சியான, பொருளெனும் செல்வம் - இழிவான மக்களிடமும் உள்ளதால்; நிலைத்த மகிழ்ச்சியான அருளே, செல்வத்துள் முதன்மையான செல்வமாகும்.
(அது போல்...)
போலியான வலிமையான, கோபமெனும் குணம் - பலவீனமான மக்களிடம் இருப்பதால்; அசலான வலிமையான பொறுமையே, குணத்தில் சிறந்த குணமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், மார்ச் 29, 2016

அதிகாரம் 024: புகழ் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 024 - புகழ்

0231.  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
           ஊதியம் இல்லை உயிர்க்கு

           விழியப்பன் விளக்கம்: பிறருக்கு கொடுப்பது மற்றும் புகழுடன் வாழ்வது, இவற்றைத் 
           தவிர்த்து; மனிதர்களுக்கு, அதிக வெகுமதியானது வேறேதுமில்லை.
(அது போல்...)
           அறத்திற்கு பயப்படுதல் மற்றும் பகுத்தறிவுடன் கற்றல், இவற்றைத் தவிர்த்து;
           தேடுவோர்க்கு, சிறந்த குருவானவர் வேறெவருமில்லை.

0232.  உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
           ஈவார்மேல் நிற்கும் புகழ்

           விழியப்பன் விளக்கம்: யாசிப்போர்க்குத் தேவையானதைக் கொடுப்பதை, பாராட்டுவோர்  
           பாராட்டுவன எல்லாம்; கொடுப்பவர்க்கு நிலையான புகழாய் மாறும்.
(அதுபோல்)
           தேடுவோர்க்கு மனிதத்தை கற்பிப்பதை, ஆன்மீகவாதிகள் ஆன்மீகம் என்பதெல்லாம்; 
           கற்பிப்பவரின் பிறவிப் பயனாக மாறும்.

0233.  ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
           பொன்றாது நிற்பதொன் றில்

           விழியப்பன் விளக்கம்: ஒப்பற்ற இப்புவியுலகில்; உன்னதமான புகழுக்கு இணையாய், 
           அழியாமல் நிலைத்திருப்பது வேறெதுவுமில்லை.
(அது போல்...)
           விலைமதிப்பற்ற உடம்பில்; புனிதமான ஆன்மாவுக்கு நிகராய், ஓய்வில்லாமல் 
           செயல்படுவது வேறொன்றுமில்லை.

0234.  நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
           போற்றாது புத்தேள் உலகு

           விழியப்பன் விளக்கம்: புவியுலக எல்லையில், என்றுமழியா புகழ்தரும் செயல்களைச் 
           செய்தால்; "தேவர் உலகம்" தேவர்களைப் போற்றுவதற்கு மாறாய், அவர்களைப் போற்றும்.
(அது போல்...)
           சமதர்ம அடிப்படையில், நிலையான செல்வமான கல்வியைக் கற்பித்தால்; "கற்பவர் 
           உலகம்" செல்வத்தை வணங்குவதைத் தவிர்த்து, குருவை வணங்கும்.

0235.  நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
           வித்தகர்க் கல்லால் அரிது

           விழியப்பன் விளக்கம்: புகழ் பெற்ற செயல்களைச் செய்யும் திறமையானோர் தவிர, 
           மற்றவர்களுக்கு; "சங்கு"போல் - உடலிழந்த பின்னும், நிலைத்து வாழ்வது சாத்தியமில்லை.
(அது போல்...)
           மனிதம் நிறைந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் அன்பர்கள் தவிர்த்து, பிறர்க்கு; 
           "தந்தம்"போல் - உறவைப் பிரிந்தும், உயர்ந்து மதிக்கப்படுவது  எளிதல்ல.

0236.  தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
           தோன்றலின் தோன்றாமை நன்று

           விழியப்பன் விளக்கம்: உலகமென்னும் மேடையில் தோன்றிவிட்டால், பிறப்பை 
           புகழுடையதாய் ஆக்கும் முனைப்பு இருக்கவேண்டும்! அப்படி ஆக்க இயலாதோர் 
           தோன்றுவது, தோன்றாததற்கு ஒப்பாகும்!
(அது போல்...)
           நட்பென்னும் உறவில் இணைந்துவிட்டால், நட்பை புரிதலுடையதாய் மாற்றும் 
           வைராக்கியம் இருக்கவேண்டும்! அப்படி மாற்ற இயலாதோர் இணைவது,
           இணையாததற்கு இணையாகும்!

0237.  புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
           இகழ்வாரை நோவது எவன்

           விழியப்பன் விளக்கம்: புகழுடன் வாழமுடியாத மனிதர்கள், தம்மையே கடிந்து கொள்ள 
           வேண்டும்! மாறாய்; தம்மை விமர்சிக்கும் மனிதர்களை, கடிந்துகொள்வதில் என்ன 
           காரணம் இருக்கிறது?
(அது போல்...)
           மக்களாட்சியை நிறுவமுடியாத தலைவர்கள், தம்மையே தண்டித்துக் கொள்ள வேண்டும்! 
           அதை விடுத்து; தம்மை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை, தண்டிப்பதில் என்ன நியாயம் 
           இருக்கிறது?

0238.  வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
           எச்சம் பெறாஅ விடின்

           விழியப்பன் விளக்கம்: தம் ஆயுள் காலத்திற்குப் பின், நிலைத்திருக்கும் புகழைப் 
           பெறவில்லை எனில்; அதுவே - புவியுலகில் வாழ்வோர் எல்லோர்க்கும், உண்மையான 
           பழியாகும்.
(அது போல்...)
           தம் ஆட்சிக் காலத்திற்குப் பின், தொடர்ந்திடும் நேர்மையை நிலைநாட்டவில்லை எனில்; 
           அதுவே - பொதுவாழ்வில் உள்ளோர் எல்லோர்க்கும், உண்மையான தோல்வியாகும்.

0239.  வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
           யாக்கை பொறுத்த நிலம்

           விழியப்பன் விளக்கம்: புகழில்லாமல் வாழ்பவரின் உடலைச் சுமப்பதால், ஒப்பற்ற
           புவியானது; பழியில்லாமல் பெரும்பயன் அளிக்கும், தன் தன்மையிலிருந்து குறையும்.
(அது போல்...)
           நீதியில்லாமல் ஆள்பவரின் ஆட்சியை ஆதரிப்பதால், இணையற்ற மக்களாட்சியானது;
           தீதில்லாமல் பொதுநலம் காக்கும், தன் நிலையிலிருந்து மாறும்.

0240.  வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
           வாழ்வாரே வாழா தவர்

           விழியப்பன் விளக்கம்: புகழ் இல்லாததால் விளையும், பழியை ஒழித்து வாழ்வோரே - 
           வாழ்க்கைப் பயனடைந்தோர் ஆவர்; புகழை ஒழித்து வாழ்வோர், வாழ்க்கைப் 
           பயனடையாதவர் ஆவர்.
(அது போல்...)
           அறம் இல்லாததால் நிகழும், தீமையை விலக்கி பயணிப்போரே - சமுதாயத்தை 
           உயர்த்துவோர் ஆவர்; அறத்தை விலக்கி பயணிப்போர், சமுதாயத்தை உயர்த்தாதவர்
           ஆவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

குறள் எண்: 0240 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  024 - புகழ்குறள் எண்: 0240}

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

விழியப்பன் விளக்கம்: புகழ் இல்லாததால் விளையும், பழியை ஒழித்து வாழ்வோரே - வாழ்க்கைப் பயனடைந்தோர் ஆவர்; புகழை ஒழித்து வாழ்வோர், வாழ்க்கைப் பயனடையாதவர் ஆவர்.
(அது போல்...)
அறம் இல்லாததால் நிகழும், தீமையை விலக்கி பயணிப்போரே - சமுதாயத்தை உயர்த்துவோர் ஆவர்; அறத்தை விலக்கி பயணிப்போர், சமுதாயத்தை உயர்த்தாதவர் ஆவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், மார்ச் 28, 2016

குறள் எண்: 0239 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  024 - புகழ்குறள் எண்: 0239}

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா 
யாக்கை பொறுத்த நிலம்

விழியப்பன் விளக்கம்: புகழில்லாமல் வாழ்பவரின் உடலைச் சுமப்பதால், ஒப்பற்ற புவியானது; பழியில்லாமல் பெரும்பயன் அளிக்கும், தன் தன்மையிலிருந்து குறையும்.
(அது போல்...)
நீதியில்லாமல் ஆள்பவரின் ஆட்சியை ஆதரிப்பதால், இணையற்ற மக்களாட்சியானது; தீதில்லாமல் பொதுநலம் காக்கும், தன் நிலையிலிருந்து மாறும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, மார்ச் 27, 2016

குறள் எண்: 0238 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  024 - புகழ்குறள் எண்: 0238}

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்

விழியப்பன் விளக்கம்: தம் ஆயுள் காலத்திற்குப் பின், நிலைத்திருக்கும் புகழைப் பெறவில்லை எனில்; அதுவே - புவியுலகில் வாழ்வோர் எல்லோர்க்கும், உண்மையான பழியாகும்.
(அது போல்...)
தம் ஆட்சிக் காலத்திற்குப் பின், தொடர்ந்திடும் நேர்மையை நிலைநாட்டவில்லை எனில்; அதுவே - பொதுவாழ்வில் உள்ளோர் எல்லோர்க்கும், உண்மையான தோல்வியாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, மார்ச் 26, 2016

குறள் எண்: 0237 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  024 - புகழ்குறள் எண்: 0237}

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்

விழியப்பன் விளக்கம்: புகழுடன் வாழமுடியாத மனிதர்கள், தம்மையே கடிந்து கொள்ள வேண்டும்! மாறாய்; தம்மை விமர்சிக்கும் மனிதர்களை, கடிந்துகொள்வதில் என்ன காரணம் இருக்கிறது?
(அது போல்...)
மக்களாட்சியை நிறுவமுடியாத தலைவர்கள், தம்மையே தண்டித்துக் கொள்ள வேண்டும்! அதை விடுத்து; தம்மை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை, தண்டிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சூப்பர் சிங்கரும் - என் புரிதலும்...


{முன்குறிப்பு: இது எவரையும்/எதையும் நியாயப்படுத்தும்
(அல்லது)
காயப்படுத்தும் முயற்சி அல்ல!!!}


      கடந்த வாரம் நிறைவுற்ற "சூப்பர் சிங்கர்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து, பல கடுமையான விமர்சனகளைப் பார்க்க நேர்ந்தது. நான், அந்த நிகழ்ச்சியை "கிட்டத்திட்ட" முழுமையாய் தொடர்ந்து  பார்த்தேன்.  அதிலும், முக்கியமாய் "சர்ச்சைக்கு உள்ளாகி" இருக்கும் வெற்றி பெற்ற "ஆனந்த் அரவிந்தாக்க்ஷன்" தான், என் விருப்பமும்/தேர்வும் என்பதைக் கூட; என் பதிவுகளில் வெளிப்படுத்தி இருக்கிறேன். முக்கியமான குற்றச்சாட்டு "ஆனந்த், முன்பே திரைப்படங்களில் பாடி இருக்கிறார்; அதை மறைத்து, நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றனர்!" என்பதே. மறுக்கவில்லை! ஆனந்த், முன்பே திரைப்படங்களில் "குழுவினரில் ஒருவராய்" பாடி இருப்பதை, நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சி நிறுவனம் வெளிப்படையாய் சொல்லி இருக்கலாம். ஏன் மறைக்கப்பட்டது?! என்று எனக்கு தெரியவில்ல; என்னளவில், அந்த காரணம் அவசியமும் இல்லை. இந்த பாகத்தை தொடர்ந்து பார்த்தவன் என்ற வகையில்...

         ஆனந்த் திறமையானவர்! என்பதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. இருப்பினும், ஆனந்தாவது சொல்லி இருக்கலாம், என்று தோன்றியது. நான் என் பதிவுகளில் சொல்லி இருப்பது போல் ஆனந்திடம் ஒரு பணிவு இருக்கும்; ஒரு உண்மை இருக்கும்; ஒரு நேர்மை இருக்கும் - இது நான் உணர்ந்தது. எனவே, ஆனந்த்(ஆவது) சொல்லி இருக்கலாமே?! என்று தோன்றியது. இருப்பினும், அவர் தன்னுடைய முக-நூல் முகப்பில் (அல்லது) பதிவில் சொல்லி இருப்பார் என்ற நம்பிக்கை நிறைந்திருந்தது. இப்படியோர் பதிவு எழுதும் முன், அதை உறுதி செய்யவேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால், நேற்று இந்தப் பதிவை முதல்-வடிவம் எழதும் முன், நாளிதழில் ஆனந்த் தன் முகப்பில், சுயவிபரத்தின் கீழ் குறிப்பிட்டிருப்பதை உறுதி செய்திருக்கிறார் (இணைப்பு: இங்கே சொடுக்க). மேலும், தன்னுடன் போட்டியிட்டவர்களுக்கு(ம்) தான் பாடகன் என்பது தெரியும் என்றிருக்கிறார். மேலும், நான் கீழ்க்காணும் காரணிகளை உற்றுநோக்குகிறேன்:
  • ஒவ்வொரு பாகம் முடிந்ததும் - குறிப்பாய், வெற்றி பெற்றவரை அறிவித்த பின்னர் - ஏதேனும் ஓர் சர்ச்சை எழுவது, அனைவரும் அறிந்ததே. இவை, வியாபார போட்டியால் எழுபவை என்பது எனது நம்பிக்கை. அவர்களின் போட்டியில், நமக்கென்ன வேலை?
  • தொலைக்காட்சி நிறுவனமும், போட்டியாளர்களும் இதை அறிவர் என்ற பின் - இதில் நாம் கொதித்தெழ என்ன இருக்கிறது?
  • இன்னொரு போட்டியாளர் "நிறைய மேடைகளில்" பாடி இருப்பதை அவரே சொல்லி இருக்கிறார். நடுவராய் வந்த ஒருவர் கூட, அவர் மேடையில் பாடும் விதத்தைப் பற்றி புகழ்ந்து சொல்லி இருக்கிறார். அவர் தான் 2-ஆவது இடம். திரைப்பாடலை "ஸ்டுடியோ"வில் பாடுவதை விட; மேடையில் பாடும் சிரமம் குறித்து நான் சொல்லத் தேவையில்லை. ஏன், அவர் பற்றி எந்த விமர்சனமும் இல்லை? ஒருவேளை "அவர் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே" இப்படியோர் சர்ச்சை எழுமா? எனில், இவர்களின் நோக்கம் என்ன?
  • பலரையும் உணர்வால் கட்டிப்போட்ட போட்டியாளர் கூட உண்டு! அவர் பெற்றிருந்தால் "அனுதாபத்தால்" வெற்றி பெற்றார் என்ற சர்ச்சை கிளம்பி இருக்குமோ?
  • இன்னுமோர் போட்டியாளரின் சாதியைப் பற்றி காழ்ப்புணர்ச்சி கொண்டோர் - இன்றும் பலர் உண்டு. இறுதிப்போட்டி முடிந்த உடனே கூட, நடுவர்களின் தீர்ப்பைக் குறிப்பிட்டு, அவரின் "சாதியைப்" பற்றி விமர்சித்தனர். ஒருவேளை, அவர் பெற்றிருந்தால் "சாதியை மையப்படுத்தி" சர்ச்சை கிளம்பி இருக்குமோ?
  • ஏதாவது, ஒரு சர்சை எழுந்தே தீரும் என்றால் (இதுவரை நடந்த அணைந்து போட்டிகளுக்கு பிறகும், அப்படியே நிகழ்ந்துள்ளது) - பின், நாம் ஏன் இப்படி தீவிரமாய் விமர்சிக்க வேண்டும்?
  • அதெப்படி "மகச்சரியாய்" போட்டியின் முடிவு தெரிந்த அடுத்த நாள், இதுபற்றிய சர்ச்சை எழுகிறது? ஏன், அதுநாள் வரை காத்திரு(ந்த/க்கின்ற)னர்? பின், அவர்களின் எதிர்பார்ப்பு வேறென்பதை நாம் உணரவேண்டாமா?
  • இவை எல்லாவற்றையும் விட, வேறோர் கோணத்தில் கூட எனக்கோர் ஐயம் எழுந்தது: ஒருவேளை, புகழுக்காக/விளம்பரத்துக்காக - சம்பந்தப்பட நிறுவனமே; இம்மாதிரியான சர்ச்சைகளை எழுப்பி விடுகிறதா? உண்மை அப்படி இருப்பின், நம் விமர்சனங்கள் அனைத்தும் "மிகுந்த அபத்தம்"ஆய் ஆகிவிடுமே?!
    இப்படி பல காரணிகள் இருக்கிறது. ஒன்று நிச்சயம்! இது, ஏதோவொரு ஆதாயத்தின் அடிப்படையில்; எவரோ ஒருவர் எழுப்பும் சர்ச்சை. இதில், சாமான்யர்கள் நாம் ஏன் இப்படி கொதித்தெழுந்து விமர்சிக்க வேண்டும்? "வெறும் லைக்"குக்காகவா?! அப்படியெனில், அது மிகவும் தவறு. இதில், ஏதும் சமுதாயப் பார்வை இருப்பதாய் எனக்கு தெரியவில்லை! அப்படி எனில், 90 விழுக்காடு நிறுவனங்கள்; நேர்முகத் தேர்வு எனும் பெயரில் நடத்தும் "கண்துடைப்பை" பற்றி நாம் ஏன் கொதித்தெழுவதில்லை?! தமிழகத்தில், பெரும்பான்மையான அரசு பல்கலைக் கழகங்களில் "இலஞ்சப் பணம்" பெற்றுக்கொண்டு பணி-நியமனம் செய்யபப்டுவதை அறியாதோர் எவரும் இல்லை! - நான் இதை பதிவு செய்திருக்கிறேன். இதுதான், ஒரு சமுதாயக் கடமை; "சூப்பர் சிங்கர் அல்ல!" என்பதே என் புரிதல். இதுபோல், எல்லா துறைகளிலும் நடப்பது, நாமனைவரும் அறிந்ததே! "பணம்/பரிந்துரை" என்று பலவிதமான காரணிகள் இதற்கு அடிப்படை.

         ஏன், இதுபற்றி(யெல்லாம்) எவரும் விமர்சிப்பதில்லை? ஒருவேளை, நாமும் அதில் ஏதேனும் ஓர் விதத்தில் உடன்படுகிறோம்! என்பதாலா?! இதுபோன்றவற்றை விடுத்து, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்? இதுவா "சமூக வலைத்தளங்கள்" உருவானதன் அடிப்படை? நான் பார்த்த வகையில், இது குறித்த விமர்சனகளை பின்வருமாறு பிரிக்கிறேன்:

உண்மை மறைக்கப்பட்டது: ஒரு குழுவினர், உண்மையை மறைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது தவறு என்கின்றனர். உண்மை எங்கு மறைக்கப்பட்டாலும், அது தவறென்பதில் எனக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இக்குழுவினரின் "ஏன் இதை சொல்லி இருக்கக்கூடாது?" என்ற கேள்வியில் இருக்கும் நியாயத்தை நான் மறுக்கவில்லை. மேற்குறிப்பிட்டது போல், ஒரு போட்டியாளர் "நிறைய மேடையில்" பாடி இருப்பதை உறுதி செய்தது போல், இதையும் செய்திருக்கலாம் என்று எனக்கும் தோன்றியது/தோன்றுகிறது - ஆனால், இப்படி கடுமையாய் விமர்சிக்கும் அளவுக்கு பெரிதாய் படவில்லை. ஏனெனில், அப்படி சொல்லி இருந்தால் மட்டும் இதுபோன்ற சர்ச்சை எழாமல் இருந்திருக்குமா?! என்றோர் சந்தேகமும் உள்ளது. மேலும், போட்டிக்கான பாடகர்களை தேர்வு செய்வதில் "முன்பே பாடகராய் இருந்திருக்கக்கூடாது" என்ற நியதியும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரும், ஏன் இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டு/விமர்சனம்?

தமிழகத்தின் பிரம்மாண்டக் குரல் தேடல்: இந்த அடிப்படையில் விமர்சிக்கும் குழுவில் இரண்டு உட்பிரிவுகள் உண்டு:
  1. பிரம்மாண்டக் குரல் தேடல் என்பதை "புதிய குரல் தேடல்" என்பதாய் நினைத்து இவர்கள் விமர்சிக்கிறார்கள். அது "பிரம்மாண்டமான" குரல் தேடல்தான்! பாடிய அனுபவம் இல்லாத குரல் என்ற அர்த்தம் இல்லை. மேலும், ஆனந்த் ஒரு "குழு" பாடகர் தான். இந்த நிகழ்ச்சி "பாடக் கற்றுக் கொடுக்கும்" தளமும் அல்ல; மாறாய், இருக்கும் திறமையை வளர்த்து விடும் தளம். பாடத் தெரிந்த/திறமையானவரில் "பிரம்மாண்டக் குரல்" உள்ளவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி. திரைப்படத்தில் பாடுவதை விட, மேடைகளில் பாடுவது சிரமம் என்பது தெரியாதோர் எவரும் இருக்க முடியாது. அதற்கு, மேலும் பன்மடங்கு திறமை தேவை. திரைப்படப் பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும், மீண்டும் மீண்டும் பாடி பதிவு செய்யலாம். ஆனால், மேடையில் பாடுவது அப்படியல்ல. அப்படி மேடையில் பாடிய திறமிருக்கும் ஒரு போட்டியாளரையும் நாம் பார்த்தோம். அது, ஏன் விமர்சிக்கப் படவில்லை? ஏனெனில், திரைப்பட பாடல் பாடுவது தான் சிறந்தது! என்ற நம் மாயை தான், அதற்கு காரணம். அதனால் தான், திரைப்படங்கள் நம்முள் பல "தேவையற்ற" தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த விமர்சனத்தில் எந்த நியதியும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.
  2. தமிழகத்தின் குரல் தேடல் என்றால், தமிழர்கள் தானே தேர்வு செய்யப்படவேண்டும்? என்றோர் அபத்தமான கேள்வியுடன் ஓர் குழு விமர்சிக்கிறது. இது, அபத்தம் மட்டுமல்ல! ஆபத்தானதும் கூட!! - இதை எல்லோரும் ஒருசேர எதிர்க்கவேண்டும். இந்த விசத்தன்மை கொண்ட எண்ணத்தை சில அரசியல் கட்சிகளும் "அரசியல்" ஆதாயத்துக்காக விதைக்கிறது. நாம், மிக கவனமாய் இருக்கவேண்டும். அந்த "தமிழகத்தின்" என்ற சொல், தமிழகத்தில் வாழ்வோர் (அல்லது) தமிழில் பாடுவோர் என்ற பொருள்படுவது. ஆனந்தைப் பொறுத்த வரை அவர் சென்னையில் வசிக்கிறார்; தமிழில் பேசுகிறார்/பாடுகிறார். பின் என்ன வேண்டும்? அப்படியே, அவர் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தான் பிரச்சனை எனில், இத்தனை மாதங்கள் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
ஸ்டையில்-ஸ்டேட்மெண்ட்டுடன் கூடிய விமர்சனம்: இன்னுமோர் குழு இருக்கிறது! நான் இதையெல்லாம் பார்த்து "என் நேரத்தை வீணடிப்பதில்லை!" என்ற "ஸ்டையில்-ஸ்டேட்மெண்ட்டுடன்" விமர்சிப்பவர்களை உள்ளடக்கிய குழு. நகைச்சுவையாய் எனக்கொரு பின்னூட்டம் இடத் தோன்றும்; பின், வேண்டாமென்று தவிர்த்துவிடுவேன். எனக்கென்ன விந்தை என்றால்; இவர்கள் தான் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதே இல்லையே?! பின், எவர் வெற்றி பெற்றால் இவர்களுக்கு என்ன? (அல்லது) எவர் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தால், இவர்களுக்கு என்ன?? என்பதே. இப்படியே, தேவையில்லாத/தெரியாத விசயத்தில் தலையிடுவோர் பலருண்டு. அதிலும், சமூக வலைதளங்களில் இவர்களைப் போன்றவர்களுக்கு பஞ்சமே இல்லை. இவர்களுக்கு "என்ன விசயம்" என்பது முக்கியமில்லை! ஏதாவது புரளி பேசி பதிவிடுவதில், அலாதிப் பிரியம் உள்ளவர்கள். எனவே, இவர்களைப் பற்றி சொல்ல ஏதுமில்லை. சமீபத்தில் கூட...

          "கலாபவன்"மணி இறந்தபோது சிலர் "தவறாய்" விமர்சிதத்தைப் பற்றி ஓர் தலையங்கம் எழுதி இருந்தேன். பல விமர்சனங்களும், கலாபவன்-மணி "மதுவால்" இறந்தார் என்ற ஆதாரமற்ற அடிப்படையிலேயே இருந்தது. ஆனால், இப்போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான தடயங்கள் கிடைத்ததை அடுத்து; அந்த கோணத்தில்" விசாரணை நடைபெறுகிறது. அவரை விமர்சித்தவர்கள், இதுபற்றி இன்னமும் ஏதும் கருத்திடவில்லை. இதுபோல், உணர்ச்சி வயப்பட்ட எல்லா விசயங்களிலும்; இம்மாதிரியான விமர்சனங்களைத் தொடர்ந்து பார்க்க முடிகிறது. இவர்களில் "பலரும் தான்" பல பத்திரிக்கைகளும் "பத்திரிக்கை தர்மமின்றி" செயல்படுவதாய் குற்றச்சாட்டும் வைக்கின்றனர். என்னவிதமான மனநிலை இது? என்ன விதமான முரண்பாடு இது? பத்திர்க்கைகளை விட மிக வலிமையானதாய், முகநூல்/வாட்ஸ்-ஆப் போன்ற "இணைய வலைத்தளங்கள்" உருமாறிக்கொண்டு இருக்கின்றன. எனவே...

           பத்திரிகைகள் போன்று, நமக்கும் தார்மீகக் கடமை இருப்பதை நாம் உணர்ந்திட வேண்டும். எதைப் பற்றி வேண்டுமானாலும், விமர்சனம் செய்யலாம். ஆனால், அது தார்மீக அடிப்படையில் இருக்கவேண்டும். மேலும், அதைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டும். இல்லையேல், பல பத்திரிக்கைகள் போல, இந்த வலிமை மிகுந்த சமூக-வலைதளங்களும் தடம்புரளும். அந்த ஆதங்கத்தில் தான், இதுபோன்ற விமர்சனங்களைப் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன். ஒரு விஷயத்தை விமர்சிக்கும்போது, அதற்கான காரணங்கள் என்னவென்று தெளிவாய் விளக்கவேண்டும். "உண்மையை மறைக்காமல் சொல்லி இருக்கலாம்" என்ற அந்த ஒரு எதிர்பார்ப்பைத் தவிர, மற்றவற்றை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. என்ன விமர்சனங்கள் எழுந்தாலும் "ஆனந்த் அரவிந்தாக்க்ஷன்" திறமையான/தகுதியுள்ள வெற்றியாளர்! என்பதில், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. 50-க்கும் மேற்பட்ட...

     வாக்குகளை அளித்தவன் என்ற அடிப்படையில் மட்டுமல்ல! அவரை தொடர்ந்து/ஆழ்ந்து கவனித்தவன் என்ற அடிப்படையிலேயே இதை சொல்கிறேன். அதன் பின்னர், எந்த சர்ச்சையும்/விமர்சனமும் எனக்கு அடிப்படை அற்றதாய் தோன்றுகிறது. இந்த சர்ச்சையை "முதன் முதலில்" வெளிப்படுத்தியவருக்கு வேண்டுமானால், ஏதேனும் ஆதாயம் கிடைத்திருக்கலாம். அதைச் சார்ந்து, மற்றவர்கள் தேவையில்லாமல் விமர்சிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை. மேலும், விளையாட்டாய் நாம் செய்யும் இந்த விமர்சனங்கள் "இறுதியில்" திறமையான/தகுதியான ஒரு பாடகனின் "இசை வாழ்க்கையயை" பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். முன்பே, பிரபலமான பாடகர் என்றால், அவர் இங்கே போட்டியிட்டு இருக்கத் தேவையே இல்லை. எனவே, அவர் தனக்கான அங்கீகாரத்தைப் பெறவே, இந்த போட்டியில் பங்கேற்றார் என்பது அனைவரும் அறிந்ததே.  அவர் வளர்ந்து வரும் பாடகர் என்ற உண்மையைக் கவனத்தில் கொண்டு...

"ஆனந்த் அரவிந்தாக்க்ஷன்" வளரட்டும் என்று; நாமும், வாழ்த்துவோம்!!!     

வெள்ளி, மார்ச் 25, 2016

தோன்றின் புகழொடு தோன்றுக (குறள் எண் 0236)



      "தோன்றின் புகழொடு தோன்றுக" என்ற குறள் எண் 0236-இன் பொருளைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். பலருக்கும் "பிறந்தால், புகழோடு பிறக்கவேண்டும்! இல்லையேல், பிறக்காமல் இருப்பது சிறந்தது!" என்ற அடிப்படையிலேயே பொருள் புரிந்திருக்கும் (அல்லது) சொல்லப்பட்டு இருக்கும். எனக்கும், அதுபோன்ற ஒரு புரிதல் தான் இதுநாள் வரை இருந்தது. இந்த குறளுக்கான என் விளக்கவுரையை எழுத முனையும்போது தான் "அந்த பொருள்படும் படி, நம் பெருந்தகை கூறியிருக்க வாய்ப்பில்லை!" என்று உணர்ந்தேன். ஏனெனில், பிறப்பு ஒரு "வெற்றிடம் போல்/வெள்ளைத்தாள் போல்" தான் இருக்க முடியும். அதில், நல்லவை (புகழ் சேர்ப்பவை) நிரப்பப்படுவதும் (அல்லது) எழுதப்படுவதும் பின்னர் தான் நடக்கும். ஆனால், பிறக்கும் போதே நிரப்பப்படு/எழுதப்பட்டு இருப்பது சாத்தியமில்லை! எனவே, அதனால் "பிறக்காமல் இருப்பது நலம்!" என்று பெருந்தகை சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்று உறுதி கொண்டேன்.

        அப்படியெனில், இதை எப்படி பொருள்படுத்தலாம் என்று யோசிக்கலானேன். மற்றவர் எப்படி பொருள்படுத்தி இருக்கிறார்கள் என்பதைப் படிக்கலானேன். பின்வரும் சான்றுகள் கிடைத்தன.
  • மணக்குடவர்: பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று. இது புகழ்பட வாழவேண்டு மென்றது.
  • மு. வரதராசன்: ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.
  • மு. கருணாநிதி: எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.
  • சாலமன் பாப்பையா: பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.
      இதில், மணக்குடவர் "பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று." என்று மேற்குறிப்பிட்ட பொதுப்படையில் விளக்கி இருப்பினும்;  தொடர்ந்த சொற்றொடரில் - "இது புகழ்பட வாழவேண்டு மென்றது" என்று அருமையாய் முடித்திருப்பார். மணக்குடவர் தவிர்த்து, மற்ற எல்லோரும் "வேறு வகையில்" எழுதி இருப்பினும், பிறப்போடு தொடர்பு படுத்தாதது குறையாய் தெரிந்தது. நான் வழக்கமாய் எழுதுவது போல் "நிகர் விளக்கம்" என்ற பெயரில், எப்படி வேண்டுமானாலும், பொருட்படுத்தலாம்! ஆனால், வள்ளுவப் பெருந்தகை சொல்லி இருப்பதற்கு மாறாய், அவரின் குறளை பொருட்படுத்துதல் முறையல்ல! என்று தோன்றியது. மேற்குறிப்பிட்ட விளக்கவுரையாளர்கள் எல்லாம் "மிக்க அனுபவமும்/ஞானமும்" உள்ளவர்கள். அவர்களுடன் ஒப்பிடும் போது, நான் மிகச்சிறியன். எனவே, இது அவர்களைக் குறை காணும் நோக்கம் துளியும் இல்லை! பெருந்தகையின் எண்ணம் சரியாய் பரிமாற்றப்பட வேண்டும் என்ற அக்கறையே.


மனிதராய் உலவிட, மனிதமென்னும் புகழோடு உலவவேண்டும்; இயலாதோர் - மனிதராய் உலவுவிடுவதை விட - உலவாமல் இருத்தல் நலம். 

          என்று முதலில் என் விளக்கவுரையை எழுதினேன். ஒரு வாரம் கடந்து, மீண்டும் படித்தபோது, மேற்குறிப்பிட்டது போல், நானும் பெருந்தகை சொன்னதற்கு மாறாய் எழுதியிருப்பது விளங்கியது. கடந்த சில தினங்களாய் ஆழ யோசித்து, மேலும் பொருத்தமான ஒன்றை எழுதினேன். அது, திருப்தி எனினும், ஓர் குழப்பம் இருந்தது. இந்த பதிவுக்கான "கருத்துப்படம்" தேடிக்கொண்டிருக்கும் போது, நம் வாழ்நாளில், நாம் நேரடியாய் பார்த்த மாமனிதர் ஒருவர் சொன்னவொன்று கிடைத்தது. சொன்னது போல், வாழ்ந்தும் காட்டிய மாமனிதர் அவர். அது தான் இந்த பதிவின் கருத்துபடமாய் மேலே கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆம், பிறக்கும் போதே புகழுடன் பிறப்பது, புகழ் பெற்றவர்களின் பிள்ளைகளாய் பிறப்பதால் வேண்டுமானால் சாத்தியமாகும். எனவே, அந்தப் பொருளில் தான் பெருந்தகை சொல்லியிருக்கவேண்டும் என்பது மிக உறுதியாயிற்று. நான் திருத்தி எழுதிய விளக்கவுரை மிகச்சரியானது என்பதும் புரிந்தது. அந்த விளக்கவுரை பின்வருவது:

மனிதராய் பிறந்துவிட்டால், பிறப்பை புகழுடையதாய் ஆக்கவேண்டும். 
ஆக்க இயலாதோரின் பிறப்பு, பிறவாமைக்கு ஒப்பாகும். 

குறள் எண்: 0236 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  024 - புகழ்குறள் எண்: 0236}

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று

விழியப்பன் விளக்கம்: உலகமென்னும் மேடையில் தோன்றிவிட்டால், பிறப்பை புகழுடையதாய் ஆக்கும் முனைப்பு இருக்கவேண்டும்! அப்படி ஆக்க இயலாதோர் தோன்றுவது, தோன்றாததற்கு ஒப்பாகும்!
(அது போல்...)
நட்பென்னும் உறவில் இணைந்துவிட்டால், நட்பை புரிதலுடையதாய் மாற்றும் வைராக்கியம் இருக்கவேண்டும்! அப்படி மாற்ற இயலாதோர் இணைவது, இணையாததற்கு இணையாகும்!
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புலவரைப் போற்றாது புத்தேள் உலகு (குறள் எண் 0234)



    "நிலவரை நீள்புகழ் ஆற்றின்" என்ற குறள் எண் 0234-இற்கான என் விளக்கவுரையைப் படித்திருப்பீர்கள். அதில் வரும் "புலவரைப்  போற்றாது புத்தேள் உலகு" என்ற சொற்றொடரை அடிப்படையாகக் கொண்டதே இப்பதிவு. அதில் என்னுடைய "நிகர் விளக்கம்" பின்வருமாறு கொடுக்கப்பட்டது:

சுயதர்ம அடிப்படையில், நிலையான செல்வமான கல்வியைக் கற்பித்தால்; 
கற்பவர்-உலகம் பணத்தை வணங்காமல், குருவை வணங்கும்.

        இதைப் படித்து விட்டு என் நண்பன் கதிர் (நான் அடிக்கடி குறிப்பிடும் அவனே தான்!) நானே உணராத வகையில் என் "நிகர் விளக்கத்தை" வேறொரு பரிமாணத்தில் விவரித்தான். அது மிகப்பெரிய ஆச்சர்யம்! ஏனெனில், இங்கு, நான் எழுதிய அடிப்படை வேறு. ஆனால் "நான் இப்படித்தான் யோசிப்பேன் என்றுணர்ந்து அவன் கருத்திட்டது" - எனக்கு பெருத்த சந்தோசத்தைக் கொடுத்தது. இந்த செய்தி, இந்தப் பதிவைப் படிக்கும் வரை, அவனுக்கு(ம்) தெரியாது. அவனை, இப்படியொரு பதிவால் கௌரவிக்க விரும்பினேன். நான் சொல்லியதன் பொருள் "தனக்கு தெரிந்ததை, சரியான விதத்தில் சொல்லி புரிய வைத்தால்; நிலையான செல்வமான, கல்வியின் உண்மையான பயனை கற்பவர் (சிஷ்யர்) உணர்வர். அப்படி உணர்ந்தால், அவர் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் என்றெண்ணி, பணத்தை வணங்கி அதன் பின் ஓடாமல் - கல்வியை அளித்த ஆசிரியரை (குருவை) நினைத்து வணங்குவர்" என்பதே.

    ஆனால், கதிர் புரிந்து கொண்டது வேறொரு அருமையான பொருள். பின்னர் யோசித்த போதுதான், அவன் ஏன் அப்படி புரிந்து கொண்டான் என்பது(ம்), எனக்குப் புரிந்தது. "கல்வி வியாபாரம்" குறித்த என் ஆதங்கத்தை முன்பே விவாதித்து இருக்கிறோம். எனவே, அவன் கொண்ட பொருள் "நிரந்தரமான கல்வி எனும் செல்வத்தை, சுயமான தர்மத்தோடு - வியாபாரம் எனும் அடிப்படையில் செய்யாமல், சேவையாகச் செய்தால் - கற்பவர்-உலகம் பணத்தை குறிக்கோளாக கொள்ளாமல்; குருவை வணங்குவர்!" என்ற அடிப்படையில். ஆனால், நான் எடுத்துக் கொண்ட அடிப்படை "ஆசிரியர்/குரு" என்பதே. ஆசிரியரோ/குருவோ பணம் கொடுப்பதில்/பெறுவதில் "நேரடியாய்" ஈடுபடுவதில்லை என்பதால், கல்வியால் விளையும் "பொருள்"ஆக்கத்தைப் பற்றியே என் சிந்தனை இருந்தது. ஆனால், அதை அவன் வேறொரு அற்புதமான கோணத்தில் புரிந்து கருத்திட்டது, பெருத்த மனநிறைவைக் கொடுத்தது. அவனின் பின்னூட்டம் இதுதான்:

கல்விக் கொள்ளை கேடு களையும் நன்னிகர் விளக்கம் அருமை - கனவு நனவாகட்டும்.

பின்குறிப்பு: நம் எழுத்தை, நம்மைப் புரிந்தவர் வேறொரு கோணத்தில் புரிந்துகொண்டு, நமக்கே மாறுபட்ட வகையில் பொருள்படுத்துவது ஒரு பெரிய வரம். எனக்கு கிடைத்திருக்கும் வரங்கள் "ஒன்றிரண்டே" எனினும் - வரம், வரம் தான்!

நன்றியடா கதிர்!!!

"தராதரமற்ற" விபச்சார நுகர்வர்கள்...


வியாழன், மார்ச் 24, 2016

குறள் எண்: 0235 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  024 - புகழ்குறள் எண்: 0235}

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது

விழியப்பன் விளக்கம்: புகழ் பெற்ற செயல்களைச் செய்யும் திறமையானோர் தவிர, மற்றவர்களுக்கு; "சங்கு"போல் - உடலிழந்த பின்னும், நிலைத்து வாழ்வது சாத்தியமில்லை.
(அது போல்...)
மனிதம் நிறைந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் அன்பர்கள் தவிர்த்து, பிறர்க்கு; "தந்தம்"போல் - உறவைப் பிரிந்தும், உயர்ந்து மதிக்கப்படுவது  எளிதல்ல.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

"கலாபவன்"மணியைப் பற்றிய தவறான விமர்சனம்...



      கலாபவன்-மணி இறந்தவுடன் பலரும் "திடீர்" மருத்துவர்கள் ஆகி, அவர் மதுவால் தான் இறந்தார்!" என்று அவரை இகழ்ந்து பேசி, "மது அருந்துவோர்க்கு" அறிவுரை என்ற பெயரில் - பதிவுகள் எழுதியதைக் காண நேர்ந்தது. இந்த நிகழ்வு மட்டுமல்ல, எந்த நிலையிலும், மது அருந்துவோரை "குடிகாரர்கள்" என்று இழிவாய் விமர்சித்து பேசுவதை நான் எதிர்த்திருக்கிறேன்; தொடர்ந்து எதிர்ப்பேன். இது ஏனோ "நானும் மது அருந்தியவன்!" என்ற "குற்ற உணர்வில் அல்ல!" திருமணத்திற்கு பெண் தேடும்போது, இணையத்தில் செய்த விளம்பரத்தில் என் சுய-விபரத்தின் கீழ், நான் மது அருந்துவேன் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். பலரும் அதை எதிர்த்தனர்; ஆனால், நான் என் செயலில் தீர்மானமாய் இருந்தேன்; அதை மாற்றவே இல்லை! மது அருந்துவதால் விளையும் "பலரும் அறியாத/உணராத" ஒரு தீமையை நானறிவேன். ஆனால், பலரும் விமர்சிப்பது போல் "உயிர் கொல்லும் பழக்கம் அது!" என்ற அர்த்தத்தில் இல்லை. அப்படி எனில்...

      மதுவைத் தவிர "உயிரைக்" கொல்லும் பழக்கம் வேறு இல்லையா?! நாம் சாப்பிடும் துரித உணவில் (Fast Food) துவங்கி, நாம் குடிக்கும் குளிர்பானங்கள் வரை - உயிரைக் கொல்லும் காரணிகள் பல உள்ளன. அவ்வளவு ஏன்?! "மதுவை விட, குளிர்பானங்கள் மிக ஆபாத்தானவை!" என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அப்படி இருக்க, ஏன் எதற்கெடுத்தாலும் "மது அருந்துவோர்" மேல் இத்தனை காழ்ப்புணர்ச்சி கலந்த விமர்சனங்கள்?! அவையும் கூட, ஏன் ஒரு அடிப்படை உண்மை கூட இல்லாமல் "உணர்ச்சி வெடிப்பாய் (Emotional Burst)" இருக்கிறது? ஏன், மதுப்பழக்கம் பற்றி விமர்சிப்போர்க்கு இப்படியோர் காழ்ப்புணர்ச்சி?! மேலும், இவர்களின் பெரும்பான்மையான குற்றச்சாட்டுகள் "வறுமைக் கோட்டிற்கு" கீழ் இருப்போர் குறித்தே இருக்கிறது. அதாவது "சமுதாயக் கேடு" என்பதாய் பார்க்கிறார்களாம். "அவர்களின் உடல்நிலை அழிகிறது! குடும்பம் வாழ்வின்றி சிதைகிறது!" என்பதே அடிப்படையாம். உண்மையை...

        "உங்களுக்குள் மட்டுமாவது" கூறிக் கொள்ளுங்கள். மதுப்பழக்கம் ஒன்றுதான், அவர்களின் வாழ்வியல் சீர்கேட்டிற்கு காரணமா? ஏன், மதுப்பழக்கம் சார்ந்து எழும் இந்த கோபம், அவர்களை வஞ்சிக்கும் "மற்ற பல" காரணிகள் குறித்து எழவில்லை? மற்ற எல்லா காரணிகளை விட - "காய்கறி முதல் உடை" வரையிலான அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வே முக்கிய காரணி. அதில் பெரும்பங்கு - மிக-அதிகமான சம்பளத்தால், விலைவாசியைப் பற்றிய கவலையே இல்லாத - நடுத்தர/மேல்தட்டு வர்க்கதத்திற்கு இருக்கிறது. ஏன், அதைப் பற்றி எவரும் விமர்சிப்பதே இல்லை?! நான் மிகவும் ஆதங்கப்படுவது - இவர்களுக்கு அனுபவம் இல்லாத ஒன்றைப் பற்றி, எவரோ சொன்னதன் அடிப்படையில், எந்தவொரு புரிதலும் இல்லாமல் - எப்படி, இவர்களால் விமர்சிக்க முடிகிறது?! என்பதே. மதுவால் விளையும் தீமை மீதான என் பார்வை - முற்றிலும் வேறு விதமானது! அந்த தீமை நிச்சயம் ஒரு சமுதாயத்தை சீர்குலைக்கும். 

     ஆயினும் "அம்மாதிரி தீமை இல்லாத மனிதன் மிக மிக மிக... அரிது!" என்று என்னால், உறுதியாய் கூற முடியும்!! அந்த தீமைக்கு, பல விசயங்களை/பழக்கங்களைப் போல் "மதுவும் ஒரு காரணி!". ஆனால், மதுவை விட "மிகப் பரவலான அளவில்" மற்ற காரணிகள், அந்த தீங்கை விளைவிக்கின்றன. "மது அருந்தாதோர்" மட்டுமல்ல; மது-அருந்தும் பலரும் கூட "அதை உணர்ந்திருக்க" மிகக்குறைவான வாய்ப்பே உள்ளது. அதற்கு "தன்னை அறிதலும்; தன்னை ஆய்தலும்" மிகவும் முக்கியமானது. அதைப் பற்றி ஒரு பதிவெழுத குறிப்புகள் எடுத்து சில ஆண்டுகள் ஆகின்றன! ஆனால், நான் மதுவை நிறுத்தி 9 மாதங்கள் தான் ஆகின்றன! குறைந்தது, 1 ஆண்டாவது நிறுத்தி இருக்கவேண்டும் என்பதற்காகவே காத்திருக்கிறேன். அந்த ஒராண்டு காலம், அந்த விளைவை எழுத "நான் அருகதையானவன்" என்ற மனத்திருப்தியை எனக்களிக்கும். இந்த புரிதல், பலரையும் போல் "கற்பனையில்" விளைந்ததல்ல! இது, முழுவதும் என் அனுபவம்.

      மதுவருந்"திய" குற்றவுணர்வோ; நிறுத்தியிருப்பதில், "பெருமை"உணர்வோ எனக்கில்லை. அப்பழக்கம், அன்று இருந்தது! இன்று இல்லை!! நாளை? நாளை நான் இருப்பேன் என்பதற்கும் எதனால் இறப்பேன் என்பதற்கும் - எந்த உத்தரவாதமும் இல்லை! நாளை இ(ரு/ற)ப்பின் தெரியும். "மதுபழக்கம் நல்லது!" என்பதல்ல என் வாதம். ஆனால், மனதில் "மூட்டை மூட்டையாய்" அழுக்கை வைத்துக்கொண்டு "மது அருந்துவோரைப் பற்றிய விமர்சிப்பது, மிக ஆபத்தானது!!" என்பதே என் பார்வை. அதே போல் "மது அருந்துவதில்லை!" என்ற "பெருமை கூறல் (Style Statement)" மட்டும் ஒருவரின் ஒழுக்கத்திற்கு சான்றாகாது; அந்தவொரு பழக்கம் அவருக்கில்லை, அவ்வளவே. சரி, கலாபவன்-மணியின் இறப்பு, தற்போது மரணம் என்ற விதத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. இதற்கு, அவரை விமர்சித்தவர்களின் பதில் எப்படி இருக்கும்? இதைக்கூட, மதுவால் விளைந்த "பின்/எதிர்"விளைவு என்று வாதிடலாம்! அப்படியெனில் "மது அருந்தாத, ஒரே காரணத்தால்" 

100 வயது வரை வாழ்ந்த, அவர்களுக்கு பரிச்சயமான "10 நபர்களை" 
ஒரு பட்டியலிடட்டும் - பார்ப்போம்!!!

"சாதி-மதமும்" பெண்ணும்...


புதன், மார்ச் 23, 2016

குறள் எண்: 0234 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  024 - புகழ்குறள் எண்: 0234}

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

விழியப்பன் விளக்கம்: புவியுலக எல்லையில், என்றுமழியா புகழ்தரும் செயல்களைச் செய்தால்; "தேவர் உலகம்" தேவர்களைப் போற்றுவதற்கு மாறாய், அவர்களைப் போற்றும்.
(அது போல்...)
சமதர்ம அடிப்படையில், நிலையான செல்வமான கல்வியைக் கற்பித்தால்; "கற்பவர் உலகம்" செல்வத்தை வணங்குவதைத் தவிர்த்து, குருவை வணங்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

செவ்வாய், மார்ச் 22, 2016

குறள் எண்: 0233 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  024 - புகழ்குறள் எண்: 0233}

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் 
பொன்றாது நிற்பதொன் றில்

விழியப்பன் விளக்கம்: ஒப்பற்ற இப்புவியுலகில்; உன்னதமான புகழுக்கு இணையாய், அழியாமல் நிலைத்திருப்பது வேறெதுவுமில்லை.
(அது போல்...)
விலைமதிப்பற்ற உடம்பில்; புனிதமான ஆன்மாவுக்கு நிகராய், ஓய்வில்லாமல் செயல்படுவது வேறொன்றுமில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், மார்ச் 21, 2016

குறள் எண்: 0232 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  024 - புகழ்குறள் எண்: 0232}

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்

விழியப்பன் விளக்கம்: யாசிப்போர்க்குத் தேவையானதைக் கொடுப்பதை, பாராட்டுவோர் பாராட்டுவன எல்லாம்; கொடுப்பவர்க்கு நிலையான புகழாய் மாறும்.
(அதுபோல்)
தேடுவோர்க்கு மனிதத்தை கற்பிப்பதை, ஆன்மீகவாதிகள் ஆன்மீகம் என்பதெல்லாம்; கற்பிப்பவரின் பிறவிப் பயனாக மாறும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

ஞாயிறு, மார்ச் 20, 2016

குறள் எண்: 0231 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  024 - புகழ்குறள் எண்: 0231}

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

விழியப்பன் விளக்கம்: பிறருக்கு கொடுப்பது மற்றும் புகழுடன் வாழ்வது, இவற்றைத் தவிர்த்து; மனிதர்களுக்கு, அதிக வெகுமதியானது வேறேதுமில்லை.
(அது போல்...)
அறத்திற்கு பயப்படுதல் மற்றும் பகுத்தறிவுடன் கற்றல், இவற்றைத் தவிர்த்து; தேடுவோர்க்கு, சிறந்த குருவானவர் வேறெவருமில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, மார்ச் 19, 2016

அதிகாரம் 023: ஈகை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 023 - ஈகை

0221.  வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
           குறியெதிர்ப்பை நீர துடைத்து

           விழியப்பன் விளக்கம்: திரும்ப கொடுக்க முடியாதோர்க்கு, கொடுப்பதே உண்மையான 
           ஈகையாகும்; மற்றவையெல்லாம் எதிர்பார்ப்பு தன்மை உடையனவாகும்.
(அது போல்...)
           எதிர்த்து தாக்க முடியாதவர்க்கு, அளிப்பதே உண்மையான மன்னிப்பாகும்; பிறவெல்லாம் 
           பயம் நிறைந்த தன்மையானவை.

0222.  நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் 
           இல்லெனினும் ஈதலே நன்று

           விழியப்பன் விளக்கம்: நல்நெறியே என்றாலும், பிறரிடமிருந்து பெறுவது தீமையானது; 
           விண்ணுலகத்திற்கு இட்டுச் செல்லாது எனினும், ஈதலே நன்றானது.
(அது போல்...)
           உலகையே வென்றாலும், பிறர்மேலான சர்வாதிகாரம் கோழைத்தனமானது; சிற்றூரை 
           வென்றிட இல்லை எனினும், அஹிம்சையே வீரமானது.

0223.  இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் 
           குலனுடையான் கண்ணே யுள

           விழியப்பன் விளக்கம்: இல்லையெனும் நிலையை வெளிப்படுத்தாமல், தேவையானோர்க்கு 
           கொடுக்கும் பண்பு; நல்லொழுக்கம் நிறைந்த குடும்பத்தாரிடம் இருக்கும்.
(அது போல்...)
           பாவமெனும் புறங்கூறுதலைச் செய்யாமல், உறவுகளை நேசிக்கும் திண்ணம்; சுயத்தைக் 
           காதலிக்கும் மனிதர்களிடம் இருக்கும்.

0224.  இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் 
           இன்முகங் காணும் அளவு

           விழியப்பன் விளக்கம்: கேட்கப்பட்டதைக் கொடுத்து, கேட்டவர் முகம் மலர்வதைக் 
           காணும்வரை; கொடுக்காமல் காத்திருக்கும் நேரத்தில், கேட்டவருக்காக இரக்கப்படுவது 
           நீடிக்கும்.
(அது போல்...)
           நடந்ததை விவாதித்து, நடந்ததற்காக மனசாட்சியின் தீர்ப்பைப் பெறும்வர;
           விவாதிக்காமல் இருக்கும் இடைவெளியில், நடந்ததற்காக வருந்துவது நீடிக்கும்.
          
0225.  ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை 
           மாற்றுவார் ஆற்றலின் பின்

           விழியப்பன் விளக்கம்: தவமிருப்போரின், பசியைப் பொறுக்கும் வலிமை; வறியவர்களின்   
           பசியை, உணவுதந்து மாற்றுவோரின் வலிமைக்கு பிற்பட்டதே.
(அது போல்...)
           நீதிபதிகளின், சட்டங்களை நிலைநாட்டும் தீர்ப்பு; சாமானியர்களின் பிரச்சனையை,
           வாய்மொழியால் தீர்ப்போரின் செயலுக்கு பிற்பட்டதே.

0226.  அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
           பெற்றான் பொருள்வைப் புழி

           விழியப்பன் விளக்கம்: வறியவர்களின், கொடியப் பசியைத் தீர்ப்பதே; ஒருவர், தான் 
           சம்பாதித்த செல்வங்களை சேமிக்கும் தேர்ந்த வழிமுறையாகும்.
(அது போல்...)
           நம்பியர்வர்களின், வருத்தும் சந்தேகத்தை ஒழிப்பதே; ஒருவர், தான் கற்ற அறநெறிகளைப் 
           பராமரிக்கும் சிறந்த ஒழுக்கமாகும்.

0227.  பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் 
           தீப்பிணி தீண்டல் அரிது

           விழியப்பன் விளக்கம்: உணவைப் பகிர்ந்து உண்ணும், அறநெறியைப் பழகியவரை; 
           பசியெனும் கொடுநோய், வருத்துவது சாத்தியமில்லை.
(அது போல்...)
           கற்றதைப் புரிந்து கற்பிக்கும், திறமையை உடையவரை; கர்வமெனும் மனநோய்,
           சிதைப்பது அரிதானது.

0228.  ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை 
           வைத்திழக்கும் வன்க ணவர்

           விழியப்பன் விளக்கம்: தம்முடையதென சேமித்து, செல்வத்தை இழக்கும் இரக்கமற்றோர்; 
           கொடுப்பதால் விளையும், பேரின்பத்தை அறியாரோ?
(அது போல்...)
           தன்மானமென வாழ்ந்து, வாழ்க்கையை இழக்கும் இனவெறியர்கள்; மனிதத்தால் 
           கிடைக்கும், உயர்வை உணராரோ?

0229.  இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய 
           தாமே தமியர் உணல்

           விழியப்பன் விளக்கம்: சேமிப்புக் கிடங்கில் நிரப்பியவற்றை, தாமே தனியாக உண்ணுதல்; 
           பிறரிடம் யாசிப்பதை விட, மிகவும் கொடுமையானது.
(அது போல்...)
           மனதின் ஆழத்தில் தேங்குபவற்றை, தனக்குள்ளே மறைத்து வைப்பது; பிறரின் பகையை 
           விட, மிகவும் ஆபத்தானது.

0230.  சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் 
           ஈதல் இயையாக் கடை

           விழியப்பன் விளக்கம்: இறப்பதை விட துன்பம் ஏதுமில்லை! ஆனால், இரப்பவர்க்கு 
           கொடுக்க முடியாத இயலாமையில் - இறத்தலும் மகிழ்ச்சியாகும்.
(அது போல்...)
           தற்கொலையை விட கோழைத்தனம் ஏதுமில்லை! ஆனால், சரணடைந்தோரை மன்னிக்க 
           முடியாத சூழலில் - தற்கொலையும்  வீரமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை