புதன், மார்ச் 09, 2016

குறள் எண்: 0220 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  022 - ஒப்புரவறிதல்குறள் எண்: 0220}

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

விழியப்பன் விளக்கம்: ஒப்புரவின் அடிப்படையில் உதவி செய்வதால், தீமை விளையுமானால்; அத்தீமை, ஒருவர் தன்னை விற்றேனும் பெறும் தகுதியுடையது.
(அது போல்...)
பொதுநல நோக்கத்தில் ஆட்சி நடத்துவதால், தோல்வி வருமேயானால், அத்தோல்வி, ஓர்கட்சி செல்வாக்கை இழந்தேனும் ஏற்கும் தகுதியுடையது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக