புதன், மார்ச் 02, 2016

குறள் எண்: 0213 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  022 - ஒப்புரவறிதல்குறள் எண்: 0213}

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற

விழியப்பன் விளக்கம்: ஒப்புரவெனும் சமத்துவம் உணர்ந்து உதவுவதை விட, சிறந்த நன்மையை; விண்ணுலகம் மற்றும் இவ்வுலகிலும் பெறுவது அரிது.
(அது போல்...)
கருணையெனும் மனிதம் பழகி வாழ்வதை விட, சிறந்த கடமையை; இல்வாழ்வு மற்றும் புறவாழ்வில் செய்வது அரிது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக