{அரசியல் சார்ந்த "மத பேதங்கள்" பலவிருக்க; ஒரு பெண்ணின் கொலையில் கூட...
மதத்தைப் புகுத்தும் தீவிரவாத-எண்ணம் கொண்ட "புல்லுருவிகள்" பலரிருக்க...
ஒவ்வொரு ஆண்டும், பண்டிகையின் போது மட்டும்;
மதத்தைப் புகுத்தும் தீவிரவாத-எண்ணம் கொண்ட "புல்லுருவிகள்" பலரிருக்க...
ஒவ்வொரு ஆண்டும், பண்டிகையின் போது மட்டும்;
எல்லா "மதமும் சார்ந்த" பண்டிகைகளையும் இணைத்து...
"உணவை மட்டும்" மையப்படுத்தி;
உலாவரும் "மாயையான மத-நல்லிணக்கம்" என்னுள்
தொடர்ந்து விதைத்த ஆற்றாமையின் வெளிப்பாடே இக்விதை!
இது எவரையும் "தனிப்பட்ட வகையில்" புண்படுத்தும் முயற்சி அல்ல!
எனவே, அருள்கூர்ந்து கவிதையில் இருக்கும்...
"உண்மைப் பொருளை" சரியான விதத்தில் உணர வேண்டுகிறேன்!}
சோற்றுப் பிண்டங்களே!
உணவுப் பண்டங்களா?!...
மத நல்லிணக்கம்?
உணர்-நரம்பை தாண்டிய உணவு;
உணர்வற்று உடலில் இருந்து;
வாந்தியாய் பேதியாய் வெளியே
வந்தால் - தீண்டாமையில் சேர்ந்திடும்!
கேளீர் - உணவில் உணர்வில்லை!
வெளிக்கு வருவதற்கே - உள்செல்லும்;
அபத்தம் அது! தொண்டை
கடக்கும் உணவைத் தாண்டி...
உணவைத் தொடும் முன்னே;
உணர்வைத் தொடுவோம் - வாரீர்!
மதம் என்னும் "மதம்"
மறுத்து; மனிதம் தொடுவோம்!
பிரியாணி கேக் பலகாரம்
பிரித்துப் பகிர்வது இருக்கட்டும்!
மனிதம் அறம் அன்பினை
மதமற்று பகிர்வதே இணக்கம்!!
"உருவிலா வழிபாடு" துவங்கி
"கருவழியா மெழுகு" தொடர்ந்து
"இருப்பிலா துரும்பில்லை" கடந்து
பொருளுடன் பகிர்ந்திட - பலவுண்டு!
மதத்தின் அடிப்படை அறம்
அறத்தின் அடிப்படை பயம்
பயத்தின் அடிப்படை மனிதம்
மனிதத்தின் அடிப்படை தேடல்
தேடலில் வகுத்தது கடவுள்
கடவுளில் திரிந்தது மதம்
மதத்தில் பிரிந்தது மனிதம்
மனிதத்துடன் புதைந்தது இணக்கம்!
இணக்கத்தை மீட்டிட நாமும்...
பிணக்கத்தைக் கடந்து; உணவின்
மோகத்தைக் கொன்று - உணர்வின்
ஆக்கத்தை வளர்ப்பதே - பொருத்தம்!
உணவைப் புறத்தே வைத்து;
உணர்வை அகத்தே சேர்ப்போம்!
உயிரற்ற பிணத்துக்கு இணையே;
"உணர்வற்று உணவைப்" பகிர்தலும்!
இதுவெல்லாம் வேடிக்கை என்பீர்!
ஈகை-நாளெல்லாம் பிரியாணி கதைத்து;
ஆண்டாண்டு கதைத்தையே மீள்-பதிவாய்,
மீண்டு-அரைப்பது; வெறும் வேடிக்கையா?!
வாடிக்கை ஆகியதை - உணரீரோ?
"வேடிக்கை மனிதர்கள்" ஆகியதை;
தேடிச்சோறு நிதந்தின்று; மனிதத்தை
வாடச்செய்யும் செயல்களை - உணரீரோ??
தொடர்வண்டி நிலையத்தில் - ஒருபெண்ணைத்
தொடர்ந்த; ஒருஆண் - கொன்றான்!
கொல்வது - ஆணோ? பெண்ணோ?
செல்வது - ஆணுமில்லை! பெண்ணுமில்லை!
மறைந்ததும், மறைத்ததும் - வரும்போது
மறைகள் எதுவும் படிக்காத;
மதங்கள் எதுவும் தெரியாத;
பேதங்கள் ஏதுமில்லாத "அதே-ஆன்மா"!
இருக்கும்போது மதத்தால்; வதைத்தது
இருக்கட்டும்! இறந்த பின்னுமாடா...
ஆன்மாக்களை - மதத்தால் வதைப்பீர்...
ஆண்-மாக்களே?! பிறகெப்படி வெட்கம்...
அறவேயின்றி; எண்ணத்தில் சிறிதும்
அறமேயின்றி - மதம் இணைக்கும்
உணர்வேயின்றி - உணர்வில் ஏதும்
உறமேயின்றி - "உணவில் காட்டுகிறோம்
இணக்கம்?!" - என்று மனம்கூசாமல்...
இலக்கணம் சொல்கிறீர்?! மொழி-அறிவில்;
இலக்கணப்பிழை தவறில்லை! மத-அறத்தில்;
இலக்கணப்பிழை - சமுதாயக் குற்றம்!
இன்னமும் இதைமறுத்து; "உணவுசார்
எண்ணமும்" - வேடிக்கை என்போர்;
வாடிக்கையாய் சொல்லட்டும்! நான்
"வேடிக்கை மனிதனல்ல!" - அதுவென்...
வாடிக்கையும் அல்ல! இதுவென்...
கோரிக்கையும் அல்ல! மாறாய்;
அறமுணர்த்தும் - மத நல்லிணக்கம்!
அறமுணர்ந்து மீண்டும் கேட்கின்றேன்...
சோற்றுப் பிண்டங்களே!
உணவுப் பண்டங்களா?!...
மத நல்லிணக்கம்?
{"இணை"க்குறிப்பு: ஆங்காங்கே காணும் "இணை"ப்புகளை சொடுக்குங்கள்;
மேலும், சில புரிதல்கள் கிடைக்கக்கூடும்! நன்றி.}
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக