புதன், ஜூலை 13, 2016

குறள் எண்: 0346 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 035 - துறவுகுறள் எண்: 0346}

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

விழியப்பன் விளக்கம்: என்னுடைய உயிர், என்னுடைய பொருள் என்னும் பிடிப்புகளை அறுப்போர்; தேவர்களின் உலகத்தைவிட, சிறப்பான உலகத்தை அடைவர்.
(அது போல்...)
என்னுடைய அரசு, என்னுடைய கஜானா என்னும் கர்வமற்ற ஆட்சியாளர்; ஞானிகளின் நிலையைவிட, உன்னத நிலையைப் பெறுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக