ஞாயிறு, ஜூலை 10, 2016

குறள் எண்: 0343 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 035 - துறவுகுறள் எண்: 0343}

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு

விழியப்பன் விளக்கம்: ஆசைக்கு காரணமான ஐம்புலன்களை அடக்க விரும்பினால்; அவற்றிற்கு ஆதியான பொருட்களின் மீதான, பற்றுகளைத் துறக்கவேண்டும்.
(அது போல்...)
அழிவுக்கு ஆதாரமான ஐம்பூதங்களை அடக்க எண்ணினால்; அவைகளைக் காக்கும் இயற்கையைச் சிதைக்கும், காரணிகளைத் தவிர்க்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக