கண்டிப்பாக நாம் எல்லோரும் "பல்லாண்டுகள் வாழ்க!" என்று பிறருக்கு சொல்லியிருப்போம்; அல்லது பிறர் நமக்கு சொல்ல கேட்டிருப்போம். இன்று (ஆகஸ்ட் 3) என்னவளுக்கு பிறந்த நாள் என்பதால் "பல்லாண்டுகள் வாழ்க" என்று வாழ்த்தினேன். பின்னர்... "பல்லாண்டுகள்" என்றால், சரியாய் எத்தனை ஆண்டுகள் என்றொரு கேள்வி என்னுள் எழுந்தது. "சாகாமல்" எப்போதும் இருக்கவேண்டும் என்று எடுத்துக்கொள்ளலாமா? இல்லை... சாகாவரம் போல் ஒரு சோகம் இருக்கமுடியாது. சரி, 5/10 ஆண்டுகள் என்று கொள்ளலாமா? மீண்டும் இல்லை... எந்த வயதினர் ஆயினும் அது மிகக்குறைந்த எண்ணிக்கையை படும். இருப்பின், எத்தனை ஆண்டுகள் சரியாகும்? என்று யோசிச்சபோது என்னவளைப் பொருத்தவரை ஒன்று புரிந்தது.
ஆம், மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால், என்னவளைப் பொருத்தவரை, அவளின் ஒழுக்கம் மற்றும் வைராக்கியத்தின் அடிப்படையில் பின்வருமாறு வாழ்த்தினேன். எம்மகள் "அம்மா! போதுமம்மா. இதுநாள் வரை வாழ்ந்தது போதும். இத்தனை துன்பப்பட்டு என்னைப் பார்த்துக்கொள்ள கடினைப்படுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது!" என்று சொல்லும் நாள் வரையிலாவது வாழவேண்டும் என்று வாழ்த்தினேன். ஆம், என்னவள் குறைந்தது "அத்தனை ஆண்டுகள்" ஆவது மீண்டும் மீண்டும் இந்த பொன்னாளை கண்டிடவேண்டும். நேரடியாக இல்லை எனினும், நம் மனதிற்குள்ளாவது, இனி மற்றவரை வாழ்த்தும்போது எத்தனை ஆண்டுகள் வேண்டும் என்பதை நினைத்துக்கொள்வோம்.
எனவே, எத்தனை ஆண்டுகள் என்பதில் கவனமாய் இருப்போம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக