வெள்ளி, ஜனவரி 01, 2016

குறள் எண்: 0152 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 016 - பொறையுடைமைகுறள் எண்: 0152}

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று

விழியப்பன் விளக்கம்: மிகையான தீங்கைப் பொறுத்தருளுதல் என்றும் நன்றே; அந்தத் தீங்கையே மறந்துவிடுதல், அதைக்காட்டிலும் நன்றாகும்.
(அது போல்...)
அதீதமான கோபத்தை அடக்குதல் எப்போதும் சிறந்ததே; அக்கோபத்திற்கான நிகழ்வையே மறப்பது, அதனினும் சிறந்ததாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக