பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 016 - பொறையுடைமை
0151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
விழியப்பன் விளக்கம்: தன்னைத் தோண்டும் மக்களை, சுமக்கும் நிலத்திற்கு ஒப்ப;
தீயசொற்களால் நம் மனதைக் காயப்படுத்துவோரை, பொறுத்தருளுதல் தனிச்சிறப்பாகும்.
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
விழியப்பன் விளக்கம்: தன்னைத் தோண்டும் மக்களை, சுமக்கும் நிலத்திற்கு ஒப்ப;
தீயசொற்களால் நம் மனதைக் காயப்படுத்துவோரை, பொறுத்தருளுதல் தனிச்சிறப்பாகும்.
(அது போல்...)
தம்மைக் கைவிட்ட பிள்ளைகளை, ஆசிர்வதிக்கும் பெற்றோர் போல்; புரளியால் நம்
மதிப்பை சிதைப்போரை, அரவணைத்தல் தனித்துவமாகும்.
0152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று
விழியப்பன் விளக்கம்: மிகையான தீங்கைப் பொறுத்தருளுதல் என்றும் நன்றே; அந்தத்
தீங்கையே மறந்துவிடுதல், அதைக்காட்டிலும் நன்றாகும்.
நிகழ்வையே மறப்பது, அதனினும் சிறந்ததாகும்.
மறத்தல் அதனினும் நன்று
விழியப்பன் விளக்கம்: மிகையான தீங்கைப் பொறுத்தருளுதல் என்றும் நன்றே; அந்தத்
தீங்கையே மறந்துவிடுதல், அதைக்காட்டிலும் நன்றாகும்.
(அது போல்...)
அதீதமான கோபத்தை அடக்குதல் எப்போதும் சிறந்ததே; அக்கோபத்திற்கானநிகழ்வையே மறப்பது, அதனினும் சிறந்ததாகும்.
0153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
விழியப்பன் விளக்கம்: விருந்தினரை உபசரிக்கமுடியாதது, வறுமையில் வறுமையாம்;
அதுபோல், அறிவிலிகளைப் பொறுத்தருள்வது - வலிமையில் வலிமையாம்.
வன்மை மடவார்ப் பொறை
விழியப்பன் விளக்கம்: விருந்தினரை உபசரிக்கமுடியாதது, வறுமையில் வறுமையாம்;
அதுபோல், அறிவிலிகளைப் பொறுத்தருள்வது - வலிமையில் வலிமையாம்.
(அது போல்...)
மனிதத்தைப் பின்பற்றாதோர், விலங்குகளில் கொடுவிலங்காம்; அதுபோல்,
மனிதமற்றவரையும் நேசிப்போர் - மனிதரில் மாமனிதராம்.
0154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்
விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றிலும், நீங்காத நிறைவைக் கொண்டிருக்க விரும்பினால்;
பொறுத்தருள்வதை, உயர்வாய் பேணி ஒழுகவேண்டும்.
போற்றி யொழுகப் படும்
விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றிலும், நீங்காத நிறைவைக் கொண்டிருக்க விரும்பினால்;
பொறுத்தருள்வதை, உயர்வாய் பேணி ஒழுகவேண்டும்.
(அது போல்...)
எக்காலமும், இறவாதப் பிறப்பை அடைந்திட விரும்பினால்; மனிதத்தை, சுவாசமாகப்
பழகி வாழவேண்டும்.
0155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
விழியப்பன் விளக்கம்: மற்றவர்களைப் பொறுமையின்றி தண்டிப்போரை; சான்றோர்,
பொருட்படுத்த மாட்டார்கள்! அங்ஙனம் பொறுத்தருளும் இயல்பினரைப், பொன்போன்று
பாதுகாப்பர்.
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
விழியப்பன் விளக்கம்: மற்றவர்களைப் பொறுமையின்றி தண்டிப்போரை; சான்றோர்,
பொருட்படுத்த மாட்டார்கள்! அங்ஙனம் பொறுத்தருளும் இயல்பினரைப், பொன்போன்று
பாதுகாப்பர்.
(அது போல்...)
பிறரை மனிதமில்லாமல் அனுகியவரை; உயர்ந்தோர், அவமதிக்க மாட்டார்கள்! ஆங்கே
மனிதத்தோடு அணுகுவோரை, உயர்-சக்தியாய் போற்றுவர்.
0156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்
விழியப்பன் விளக்கம்: பிறர் தவறைத் தண்டிப்பார்க்கு, ஒருநாளே மகிழ்ச்சி; அத்தவறைப்
பொறுத்தருள்வோர்க்கு, உலகம் அழியும் வரை சிறப்பிருக்கும்.
பொன்றுந் துணையும் புகழ்
விழியப்பன் விளக்கம்: பிறர் தவறைத் தண்டிப்பார்க்கு, ஒருநாளே மகிழ்ச்சி; அத்தவறைப்
பொறுத்தருள்வோர்க்கு, உலகம் அழியும் வரை சிறப்பிருக்கும்.
(அது போல்...)
பிறர் அறியாமையைப் பழிப்போர்க்கு, ஒருகணமே மனநிறைவு; அவ்வறியாமையை
நீக்குவோர்க்கு, வாழ்நாள் இறுதி வரை முழுமையிருக்கும்.
0157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று
விழியப்பன் விளக்கம்: பிறர், நமக்கு செய்யத் தகாதவற்றைச் செய்தாலும்; அதனால் மனம்
வருந்தி, அறனல்லாதவற்றை செய்யாமல் பொறுத்தருளுதல் நலம்.
அறனல்ல செய்யாமை நன்று
விழியப்பன் விளக்கம்: பிறர், நமக்கு செய்யத் தகாதவற்றைச் செய்தாலும்; அதனால் மனம்
வருந்தி, அறனல்லாதவற்றை செய்யாமல் பொறுத்தருளுதல் நலம்.
(அது போல்...)
மற்றவர், நம் உரிமைகளை மறுத்துச் செயல்பட்டாலும்; அதனால் தன்னிலை-இழந்து,
பகையை வளர்க்காமல் இருப்பது சிறப்பு.
0158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்
விழியப்பன் விளக்கம்: அதீதத்தால், தீயவை செய்தோரின் மனதை; நம் பொறுத்தருளும்
தகுதியால், வெல்லவேண்டும்.
தகுதியான் வென்று விடல்
விழியப்பன் விளக்கம்: அதீதத்தால், தீயவை செய்தோரின் மனதை; நம் பொறுத்தருளும்
தகுதியால், வெல்லவேண்டும்.
(அது போல்...)
சர்வாதிகாரத்தால், அவமரியாதை செய்தோரின் சுயத்தை; நம் மனிதநேய குணத்தால்,
மாற்றவேண்டும்.
0159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்
விழியப்பன் விளக்கம்: பிறரின், எல்லையற்ற தீச்சொற்களையும் பொறுத்தருள்பவர்;
எல்லாப் பற்றுகளையும் துறந்தவரைப் போன்று, புனிதமானவர் ஆவர்.
இன்னாச்சொல் நோற்கிற் பவர்
விழியப்பன் விளக்கம்: பிறரின், எல்லையற்ற தீச்சொற்களையும் பொறுத்தருள்பவர்;
எல்லாப் பற்றுகளையும் துறந்தவரைப் போன்று, புனிதமானவர் ஆவர்.
(அது போல்...)
உறவுகளின், எண்ணற்ற வரம்பு-மீறல்களையும் மன்னிப்போர், ஐந்து புலன்களையும்
அடக்கியோரைப் போன்ற, மனத்திடம் கொண்டவராவார்.
0160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்
விழியப்பன் விளக்கம்: உணவைத் தவிர்த்து நோன்பிருப்போர்; பிறர் பேசும் தீய
சொற்களைப் பொறுத்தருள்வோர்க்கு, அடுத்த நிலையே அடைவர்.
இன்னாச்சொல் நோற்பாரின் பின்
விழியப்பன் விளக்கம்: உணவைத் தவிர்த்து நோன்பிருப்போர்; பிறர் பேசும் தீய
சொற்களைப் பொறுத்தருள்வோர்க்கு, அடுத்த நிலையே அடைவர்.
(அது போல்...)
அறமற்றதை மறுத்து வாழ்வோர்; பிறர் செய்யும் மனிதமற்ற செயல்களை மன்னிப்போர்க்கு,
Arputham!
பதிலளிநீக்குநன்றி, பா.
நீக்குநம் பெருந்தகையின் அருளுடன் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.