வெள்ளி, செப்டம்பர் 30, 2016

"ஆண்/பெண் உறவு" - ஓர் அலசல்! (பாகம் 1)


            "ஆண்/பெண்" என்ற இரு-துருவர்களைக் கொண்ட எவ்வகை உறவானாலும்; சிக்கலாகவே  இருக்கிறது. ஒரு பெண்ணிடம் இருந்து - "நான் எதிர்பார்க்கற மாதிரி, நீ என்னைக்கும்/எதையும் செய்தததில்லை!" என்ற குற்றச்சாட்டு எழாத; காதல்/திருமணம்/கள்ளத்தொடர்பு - இல்லாத உறவுகளே இல்லை எனலாம். தவறான தொடர்பே எனினும்; இங்கே, கள்ளத்தொடர்பையும் இணைத்தது - அதுவும், ஒருவகை உறவு என்பதால் தான்! உதாரணத்திற்கு, திருட்டைத் தொழிலாகக் கொண்ட திருடர்கள் எனினும்; அவர்களுக்குள் "கூட்டுத்திருட்டு" என்ற ஒப்பந்தம் ஏற்பட்டபின் - அவர்களும் "தொழில் தர்மத்துடன்" இருத்தல் அவசியமாகிறது. ஒருவரையொருவர் ஏமாற்றாமல் இருப்பதும் (அல்லது) அவர்கள் வீட்டுக்குள்ளேயே திருடாமல் இருப்பதும் அவசியமாகிறது. அதுபோல், கள்ளத்தொடர்பும் ஓர் உறவு என்பதால்தான், அதையும் இணைத்தேன். பல குற்றசாட்டுகள் உண்டெனினும்; "காதலை வெளிப்படுத்துதல்" சார்ந்த...

         எதிர்பார்ப்புகளால், விளையும் ஏமாற்றங்களால்; மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டு, பொதுவில் முன்வைக்கும் ஒன்றாக இருக்கிறது. பொதுப்புத்தியில் - "ஆண்களுக்கு காதலை வெளிப்படுத்த தெரியாது!" என்ற குற்றச்சாட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே; அதில், உண்மையும் இருக்கிறது. அதை மேலும் ஆழமாய் ஆராயும் முயற்சியே இத்தலையங்கம். உறவுக்குள் செல்லும் முன் - ஆண், தன் காதலை பலவகையில் எளிதாய் சொல்கிறான்.  ஆனால், அவ்வுறவு மலர்ந்த பின் - நாளடைவில், ஆண் தன் காதலை வெளிப்படுத்த தவறுகிறான் (அல்லது) வெளிப்படுத்த (தெரி/முடி)யாமல் இருக்கிறான். "காதலும் காமமும்" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் - உறவுக்குள் நுழைந்தபின் - காதலை; ஆண், காமத்தை முன்வைத்தே அணுகுகிறான். உண்மையில், தன் காமத்திற்குப் பின் - காதல் இருப்பது கூட பல ஆண்களுக்குத் தெரியாது. வெகுநிச்சயமாய், இது இயற்கையான விடயமே! இப்பதிவின் நோக்கம், ஆண்களின் தவறை...

             நியாயப்படுத்துவதில்லை! மாறாய், உண்மையை உண்மையாய் ஆராய்வது. ஒரு பெண்ணின் மேல் (காதல்/திருமணம்/கள்ளத்தொடர்பு - எவ்வுறவானாலும்) இருந்த காதல் மறைந்திட, என்ன காரணம் இருக்கமுடியும்? "வேறொரு பெண்ணுடன் தொடர்பு" போன்ற பல காரணங்களால், காதல் குறையும் வாய்ப்புண்டு. அவ்வகையினர், வேறு பிரிவில் வருவோர்; அதுபோன்ற எந்த வகையினரையும் கருத்தில் கொள்ளவில்லை! இங்கே நான் எடுத்துக் கொண்டிருப்பது, இயல்பாய் - காதலை விட்டு, விலகி நிற்கும் ஆண்களைப் பற்றியே! அப்படி விலகியோர், தங்கள் காதலை வெளிப்படுத்தும் விதங்களில் ஒன்றுதான் - காமம்! இப்படி, ஆண்; தன் காதலை வெளிப்படுத்துவதில் இருந்து விலகி நிற்க முழுமுதற்காரணம், உறவுக்குள் நுழைந்தவுடன் - ஆண், அடுத்த கட்டம் நோக்கி நகர ஆரம்பிப்பது! ஆம், காதலன் எனில் - திருமணம்/குடும்பம் பற்றிய சிந்தனை எழும். திருமணம் எனில், அந்த எண்ணங்களுடன்; செயல் வடிவங்களும் துவங்கிவிடும்.

    மேலும், குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய எண்ணமும்/செயல்திட்டமும் மேலோங்கும். கள்ளத்தொடர்பு எனில், "அந்த தொடர்பு சார்ந்த விளைவுகளை" யோசிக்க ஆரம்பிப்பான்; அவன் மறப்பினும், சூழல் - அவனை அப்படி யோசிக்க வைக்கும். ஏனெனில், கள்ளத்தொடர்பு என்பது - இரகசியமாய் செய்யவேண்டிய விடயம். ஆண்களுக்கு, இரகசியம் காக்கும் அனுபவம் இல்லை; அதை முயற்சிப்போர் கூட மிக குறைவே! அதனால் தான், ஒரு பெண்ணால் - வெகு எளிதில், ஆணின் தவறுகளை, அவன் வாயாலேயே சொல்ல வைக்க முடிகிறது. எனவே, அது சார்ந்த பயமும் அவனைத் தொற்றிக்கொள்ளும். எனவே, கள்ளத்தொடர்பில் - ஒரு ஆனால், நிச்சயம் காதலை வெளிப்படுத்த முடியாது. மன்னிக்கவும்! "கீழ்வருவது போல்" சொல்வது தவறாய் தோன்றலாம்; ஆனால், அதுதான் உண்மை: பெரும்பான்மையில், ஒரு ஆணுக்கு - அவனின் உடல் உணர்ச்சிகளின் வடிகாலாய் தான் "கள்ளத்தொடர்பு" தேவைப்படுகிறது. ஆனால், அந்த உறவிலும்....

       ஒரு பெண்ணின் நிலைப்பாடு; மற்ற உறவுகளில் இருப்பது போலவே இருக்கிறது. எனவே, எவ்வகையில் பார்த்தாலும்; ஆண், தன் காதலை வெளிப்படுத்துவதில் இருந்து விலகி இருக்கும் சூழலே அமைகிறது. "இது சரியா? தவறா?" என்றால்;  நிச்சயமாய், ஏதும் சொல்ல இயலவில்லை!. சரி - "அடுத்தக் கட்டம் பற்றி, பெண்கள் பற்றி யோசிப்பதே இல்லையா?!" என்றால்; வெகுநிச்சயம் யோசிப்பார்கள்/யோசிக்கிறார்கள்! சென்ற தலைமுறைப் பெண்களும் இதற்கு விதிவிலக்கில்லை! ஆனால், அதிலிருந்து விலகி; வாழ்க்கையை, காதலை மையப்படுத்திப் பார்க்கும் சூழலை - அவர்களைச் சுற்றியிருக்கும் ஆண்கள் அமைக்கிறார்கள். அது, காதலனாகவோ/கணவனாகவோ (மட்டும்) இருக்க வேண்டியதில்லை! அவர்களின், தந்தை/தமையன் போன்ற மற்ற உறவுகளாகவும் இருக்கலாம். எனவே - "அமைதியாய்/இயல்பாய்" - வாழ்க்கையை, காதலை மையப்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு; ஆணுக்கு வாய்க்கவில்லை! என்பதே என் பார்வை.

"இது எப்போதுமே முடியாதா?" என்றால்;
நிச்சயம் மாறும்! அப்படித்தான் ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையும் முடியும்!!
"அப்படியா? எப்போது? எப்படி?" என்றால்...

தொடரும்!!!

ஆங்கில வடிவம்: 

குறள் எண்: 0425 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0425}

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு

விழியப்பன் விளக்கம்: உலக உயிர்களை, அரவணைப்பதே சிறந்த அறிவாகும்; பார்த்ததும் மலர்ந்து, பின்னர் சுருங்கும் இயல்பற்றதே அறிவாகும்.
(அது போல்...)
சக ஊழியர்களை, உயர்த்துவதே உன்னத நேர்மையாகும்; நம்பிக்கை அளித்து, பின் வஞ்சிக்கும் குணமற்றதே நேர்மையாகும்.
*****

எவ்வகை உறவிலும் இருக்கும் பிரச்சனை...


வியாழன், செப்டம்பர் 29, 2016

குறள் எண்: 0424 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0424}

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு

விழியப்பன் விளக்கம்: நாம் அறிந்தவற்றைப், பிறருக்கு எளிதாய் விளக்குவதும்; பிறர் சொல்வதை,  ஆழமாய் விளங்கிக் கொள்வதுவமே பகுத்தறிவாகும்.
(அது போல்...)
நாம் பெற்றதை, வேண்டுவோர்க்கு மனமுவந்துப் பகிர்வதும்; பிறர் கொடுப்பதில், தேவையானதை மட்டும் ஏற்பதுமே மனிதமாகும்.
*****

உறவின் விரிசலைச் சரிசெய்தல்...


புதன், செப்டம்பர் 28, 2016

குறள் எண்: 0423 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0423}

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

விழியப்பன் விளக்கம்: எவர் எப்படி விவரித்தாலும், எவ்வொரு விளக்கத்தையும்; அவ்விளக்கத்தின் உண்மையானப் பொருளை, உணர்வதே பகுத்தறிவாகும்.
(அது போல்...)
எவர் எப்படி வற்புறுத்தினாலும், எவ்வித மோகத்தையும்; அம்மோகத்தின் ஆழமான விளைவை, ஆராய்வதே சுயமாகும்.
*****

செவ்வாய், செப்டம்பர் 27, 2016

குறள் எண்: 0422 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0422}

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு

விழியப்பன் விளக்கம்: விரும்பும் எல்லாவற்றிலும் மனதைச் செலுத்தாமல், தீயவற்றை அழித்து; நல்லறப் பாதையில், மனதைச் செலுத்துவதே அறிவாகும்.
(அது போல்...)
மயக்கும் விடயங்களில் நேரத்தைச் செலவிடாமல், சிற்றின்பத்தைக் குறைத்து; பேரின்பத் தேடலில், சிந்தனையை வளர்ப்பதே பிறவியாகும்.
*****

திங்கள், செப்டம்பர் 26, 2016

குறள் எண்: 0421 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 043 - அறிவுடைமை; குறள் எண்: 0421}

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

விழியப்பன் விளக்கம்: அறிவு, ஒருவரை அழிவிலிருந்து காக்கும் கருவியாகும்; அது பகைவர்கள் அழிக்க முடியாத, உள்ளரணாகவும் அமையும்.
(அது போல்...)
பயம், ஒருவரை தீமையிலிருந்து காக்கும் திசைக்காட்டியாகும்; அது பேராசையால் திசைதிருப்ப முடியாத, நங்கூரமாகவும் இருக்கும்.
*****

ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

24 மணி-நேரமும் மனித-இயந்திரமும்...


மண்பெண்பொன்ஜா திமதம்எனப்பல
பண்பழித்தஏற்றத் தாழ்வுகள்இருந்தும்
ஒருதினத்தின்இரு பத்துநான்குமணியில்
ஒருபோதுமில்லைஎக் குறையும்நிறையும்!

மணியளக்கும்இயந் திரம்போல்மண்ணில்
மனிதரையும்அவர் தம்மனிதத்தையும் 
பகிர்ந்திடவோர்இயந் திரமொன்றையும்
பகற்கனவுபோல்எவர் ஒருவரேனும்எக்

குறையுமின்றியேக் கண்டெடுத்துதந்திடின்
இறைவனோஇயற் கையோஇரண்டுமோ
செயமுடியாவொன் றைசெய்தபேருபெற்று
சாகாவரம்அதைப் பெற்றுவாழ்ந்திடுவார்!

அதிகாரம் 042: கேள்வி (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி

0411.  செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
           செல்வத்துள் எல்லாம் தலை

           விழியப்பன் விளக்கம்: 
கேட்பதால் விளையும் அறிவுச் செல்வமானது, பல்வகைச் 

           செல்வங்களில் ஒன்றாகும்; அச்செல்வம், செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
(அது போல்...)
           பிறப்பால் கிடைக்கும் பெற்றோர் உறவானது, பல்வகை உறவுகளில் ஒன்றாகும்; அவ்வுறவு, 
           உறவுகள் அனைத்திலும் சிறந்ததாகும்.
        
0412.  செவிக்குண வில்லாத போழ்து சிறிது
           வயிற்றுக்கும் ஈயப் படும்

           விழியப்பன் விளக்கம்: 
செவிக்கு உணவான "கேட்டல்" கிடைக்காத நேரத்தில்; 

           கேள்வியைத் தொடர்ந்திட, வயிற்றுக்கும் சிறிய அளவில் உணவளிக்க வேண்டும்.
(அது போல்...)
           மனதை மகிழ்விக்கும் "சிந்தனை" இல்லாத சமயத்தில்; சிந்தனையைப் பெருக்கிட, 
           உடலுக்கும் போதிய அளவில் மகிழ்வளிக்க வேண்டும்.
           
0413.  செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
           ஆன்றாரோ டொப்பர் நிலத்து

           விழியப்பன் விளக்கம்: இப்புவியுலகில், செவிக்கு உணவான கேள்வியறிவைக் 
           கொண்டிருப்போர்; வேள்வியில் வார்க்கும் நெய் போன்றவற்றை உணவாக கொள்ளும், 
           தேவர்களுக்கு இணையானவர் ஆவர்.
(அது போல்...)
           இச்சமூகத்தில், பேரின்பம் அளிக்கும் பொதுநலனைப் பேணுவோர்; உடம்பில் இருக்கும் 
           உயிரணு போன்றவற்றை அங்கமாக அளிக்கும், இயற்கைக்கு ஒப்பானவர் ஆவர்.

0414.  கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
           ஒற்கத்தின் ஊற்றாந் துணை

           விழியப்பன் விளக்கம்: 
கற்காதவர் ஆயினும், கேள்வியறிவை வளர்த்தல் வேண்டும்; ஒருவர் 
           தளர்வடையும் நேரத்தில, அது “ஊன்றுகோல்" போல் துணையாய் இருக்கும்.
(அது போல்...)
           பொதுப்பணி செய்யாவிடினும், பணியாற்றுவோரை ஆதரித்தல் வேன்டும்; ஒருவரின் மரணப் 
           படுக்கையில், அது  “உயிர்சக்தி" போல் மனத்திடம் அளிக்கும்.

0415.  இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
           ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

           விழியப்பன் விளக்கம்: 
ஒழுக்கமுடைய சான்றோரின், பேச்சு மூலம் பெறப்படும் 
           கேள்விஞானம்; வழுக்கும் தன்மையுடைய இடத்தில், உறுதியாய் நிற்க உதவும் 
           ஊன்றுகோல் போன்றதாகும்.
(அது போல்...)
           அருளுடைய குருவின், வழிகாட்டல் மூலம் கற்கும் மெய்ஞானம்; அதீதமான ஆழமுள்ள 
           கடலில், மூழ்காமல் கரையேற உதவும் மிதவை போன்றதாகும்.

0416.  எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
           ஆன்ற பெருமை தரும்

           விழியப்பன் விளக்கம்: 
இயன்ற அளவில் நல்லவற்றைக் கேட்டு, பகுத்தறிவை வளர்க்க 
           வேண்டும்; அப்படி நாம் வளர்க்கும் அளவிற்கு, நிலைத்த பெருமை கிடைக்கும்.
(அது போல்...)
           முடிந்த வரை அறமுள்ளோரைத் தேர்ந்தெடுத்து, உறவுகளைத் தொடர வேண்டும்; அப்படி 
           நாம் தொடரும் அளவிற்கு, சிறந்த பிறவிப்பயன் விளையும்.

0417.  பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
           ஈண்டிய கேள்வி யவர்

           விழியப்பன் விளக்கம்: 
கேள்வியெனும் தேடலால், ஆழ்ந்தறிந்த அறிவைப் பெற்றவர்; 
           தவறான புரிதல் இருப்பினும், அறிவிலியான முறையில் பேசமாட்டார்கள்.
(அது போல்...)
           பொதுநலம் பேணுதலில், முழுமையாய் தம்மை ஆட்படுத்தியோர்; குறையுடைய 
           எதிர்கட்சிகளைக் கூட, சுயநலமான எண்ணத்தில் விமர்சிக்கமாட்டார்கள்.

0418.  கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
           தோட்கப் படாத செவி

           விழியப்பன் விளக்கம்: 
கேள்வியெனும் முதலீட்டால், கேள்விஞானத்தை வளர்க்கும் 
           திறனற்றோரின் செவிகள்; கேட்கும் திறனிருப்பினும், கேட்கவியலாச் செவிகளாகவே 
           உணரப்படும்.
(அது போல்...)
           சிந்தனையெனும் விவசாயத்தால், பகுத்தறிவை அருவடைக்கும் இயல்பற்றோரின் மூளை; 
           இயங்கும் நிலையிலிருப்பினும், மரணமடைந்த மூளைக்கு இணையாகும்.


0419.  நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
           வாயின ராதல் அரிது

           விழியப்பன் விளக்கம்: 
ஆழ்ந்தறியும் கேள்வி ஞானம் இல்லாதவர்; பிறர் வணங்கும் வண்ணம், 
           பண்பான சொற்களைப் பேசுபவராதால் அரிதானது.
(அது போல்...)
           வியத்தகு உறவுப் புரிதல் இல்லாதோர்; சமுதாயம் போற்றும் வகையில், உயர்வான 
           சந்ததிகளை உருவாக்குதல் கடினமானது.

0420.  செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
           அவியினும் வாழினும் என்

           விழியப்பன் விளக்கம்: 
செவிக்கு உணவான, கேள்வியறிவின் சுவை உணராமல்; வாயின் 
           சுவை மட்டும் உணர்ந்தோர், இறந்தாலும்/வாழ்ந்தாலும் என்ன பயன்?
(அது போல்...)
           உலகின் உயிரான, விவசாயத்தின் உன்னதம் புரியாமல்; பணத்தின் உன்னதம் மட்டும் 
           உணர்ந்தோர், உயர்ந்தாலும்/தாழ்ந்தாலும் என்ன வித்தியாசம்?
*****

குறள் எண்: 0420 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0420}

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்

விழியப்பன் விளக்கம்: செவிக்கு உணவான, கேள்வியறிவின் சுவை உணராமல்; வாயின் சுவை மட்டும் உணர்ந்தோர், இறந்தாலும்/வாழ்ந்தாலும் என்ன பயன்?
(அது போல்...)
உலகின் உயிரான, விவசாயத்தின் உன்னதம் புரியாமல்; பணத்தின் உன்னதம் மட்டும் உணர்ந்தோர், உயர்ந்தாலும்/தாழ்ந்தாலும் என்ன வித்தியாசம்?
*****

சனி, செப்டம்பர் 24, 2016

குறள் எண்: 0419 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கேள்வி; குறள் எண்: 0419}

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது

விழியப்பன் விளக்கம்: ஆழ்ந்தறியும் கேள்வி ஞானம் இல்லாதவர்; பிறர் வணங்கும் வண்ணம், பண்பான சொற்களைப் பேசுபவராதால் அரிதானது.
(அது போல்...)
வியத்தகு உறவுப் புரிதல் இல்லாதோர்; சமுதாயம் போற்றும் வகையில், உயர்வான சந்ததிகளை உருவாக்குதல் கடினமானது.
*****

வெள்ளி, செப்டம்பர் 23, 2016

குறள் எண்: 0418 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0418}

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி

விழியப்பன் விளக்கம்: கேள்வியெனும் முதலீட்டால், கேள்விஞானத்தை வளர்க்கும் திறனற்றோரின் செவிகள்; கேட்கும் திறனிருப்பினும், கேட்கவியலாச் செவிகளாகவே உணரப்படும்.
(அது போல்...)
சிந்தனையெனும் விவசாயத்தால், பகுத்தறிவை அருவடைக்கும் இயல்பற்றோரின் மூளை; இயங்கும் நிலையிலிருப்பினும், மரணமடைந்த மூளைக்கு இணையாகும்.
*****

விலகியும் இணைந்திருத்தல்...



வியாழன், செப்டம்பர் 22, 2016

குறள் எண்: 0417 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0417}

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்

விழியப்பன் விளக்கம்: கேள்வியெனும் தேடலால், ஆழ்ந்தறிந்த அறிவைப் பெற்றவர்; தவறான புரிதல் இருப்பினும், அறிவிலியான முறையில் பேசமாட்டார்கள்.
(அது போல்...)
பொதுநலம் பேணுதலில், முழுமையாய் தம்மை ஆட்படுத்தியோர்; குறையுடைய எதிர்கட்சிகளைக் கூட, சுயநலமான எண்ணத்தில் விமர்சிக்கமாட்டார்கள்.
*****

புதன், செப்டம்பர் 21, 2016

குறள் எண்: 0416 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0416}

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்

விழியப்பன் விளக்கம்: இயன்ற அளவில் நல்லவற்றைக் கேட்டு, பகுத்தறிவை வளர்க்க வேண்டும்; அப்படி நாம் வளர்க்கும் அளவிற்கு, நிலைத்த பெருமை கிடைக்கும்.
(அது போல்...)
முடிந்த வரை அறமுள்ளோரைத் தேர்ந்தெடுத்து, உறவுகளைத் தொடர வேண்டும்; அப்படி நாம் தொடரும் அளவிற்கு, சிறந்த பிறவிப்பயன் விளையும்.
*****

செவ்வாய், செப்டம்பர் 20, 2016

குறள் எண்: 0415 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0415}

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

விழியப்பன் விளக்கம்: ஒழுக்கமுடைய சான்றோரின், பேச்சு மூலம் பெறப்படும் கேள்விஞானம்; வழுக்கும் தன்மையுடைய இடத்தில், உறுதியாய் நிற்க உதவும் ஊன்றுகோல் போன்றதாகும்.
(அது போல்...)
அருளுடைய குருவின், வழிகாட்டல் மூலம் கற்கும் மெய்ஞானம்; அதீதமான ஆழமுள்ள கடலில், மூழ்காமல் கரையேற உதவும் மிதவை போன்றதாகும்.
*****

திங்கள், செப்டம்பர் 19, 2016

குறள் எண்: 0414 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0414}

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை

விழியப்பன் விளக்கம்: கற்காதவர் ஆயினும், கேள்வியறிவை வளர்த்தல் வேண்டும்; ஒருவர் தளர்வடையும் நேரத்தில, அது “ஊன்றுகோல்" போல் துணையாய் இருக்கும்.
(அது போல்...)
பொதுப்பணி செய்யாவிடினும், பணியாற்றுவோரை ஆதரித்தல் வேன்டும்; ஒருவரின் மரணப் படுக்கையில், அது  “உயிர்சக்தி" போல் மனத்திடம் அளிக்கும்.
*****

ஞாயிறு, செப்டம்பர் 18, 2016

குறள் எண்: 0413 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0413}

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து

விழியப்பன் விளக்கம்: இப்புவியுலகில், செவிக்கு உணவான கேள்வியறிவைக் கொண்டிருப்போர்; வேள்வியில் வார்க்கும் நெய் போன்றவற்றை உணவாக கொள்ளும், தேவர்களுக்கு இணையானவர் ஆவர்.
(அது போல்...)
இச்சமூகத்தில், பேரின்பம் அளிக்கும் பொதுநலனைப் பேணுவோர்; உடம்பில் இருக்கும் உயிரணு போன்றவற்றை அங்கமாக அளிக்கும், இயற்கைக்கு ஒப்பானவர் ஆவர்.
*****

சனி, செப்டம்பர் 17, 2016

ஓ... அப்பாவிகளே!


         "தமிழ்/தமிழர்" என்ற "மொழி/இன" உணர்வுகளை வைத்து கீழ்த்தரமான அரசியல் நடத்தும் சுயநலவாதிகளால் - இன்னுமோர் அப்பாவி இளைஞர், தீக்குளித்து இறந்திருக்கிறார். தமிழ்-ஈழப் பிரச்சனையில் நடந்த ஒரு தீக்குளிப்பு இறப்பு போல்; இன்னுமோர் நிகழ்வு, இரு தினங்களுக்கு முன்னர் அரங்கேறி இருக்கிறது. இதில், மிகவும் வருந்தத் தக்க விடயம் என்னவென்றால் - "தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறோம்" என்ற பெயரில் கட்சி நடத்துபவர்களால்;  தமிழகத்திலேயே ஓர் உயிர் இழந்திருப்பதே! "தமிழ்-ஈழம்" மற்றும் "காவேரி நீர் பகிர்வு" பிரச்சனைகளில் - தமிழகத்தைக் கடந்து, வேறு இடங்களில் பாதிக்கப்படும் தமிழர்களுக்காக; இவர்களின் "குரல் கொடுக்கும்" நாடகத்தில் - தமிழகத்திலேயே உயிர்கள் பலியாவதை என்னவென்று சொல்வது? மற்ற கட்சிகளாளும், தீக்குளித்து உயிரிழப்புகள் நிகழ்கின்றன. ஆனால், அவை தமிழகத்தில் நிகழும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே நடக்கின்றன.

       இப்படியான அரசியல் செய்யும் கட்சிகளில், என் பார்வையில், மிகவும் ஆபத்தானவையாய் பின்வரும் இரண்டு கட்சிகளைப் பார்க்கிறேன்: 1. கட்சி ஆரம்பித்து 23 ஆண்டுகள் ஆகின்றன; "தமிழ்/தமிழர்" சார்ந்து அரசியல் நடத்தும் கட்சி; அக்கட்சியின் தலைவர் - வேறொரு கட்சியில் இருந்து "தன்மானத்திற்காக (??!!)" பிரிந்து வந்தவர். தன் கட்சியின் பெயரைக் கூட - தாய்க் கட்சியின் பெயரில் இருந்து மாறுபட்டு வைக்கத் தெரியாதவர்; 2. கட்சி ஆரம்பித்து 2 / 3 ஆண்டுகள் தான் ஆகின்றன; இவர் பரவாயில்லை - கட்சியின் பெயரையாவது வித்தியாசமாய் வைக்கத் தெரிந்தவர். ஆனால், புரட்சி என்ற பெயரில் "சற்றும் தேவையற்ற/சம்பந்தமற்ற" உணர்ச்சியின் விளிம்பில் இருந்து பேசி - தேவையற்ற தீவிரவாத எண்ணங்களை விதைப்பவர். முன்னவரை விட - இவர் மிகவும் ஆபத்தனாவர். இவர்கள் இருவருக்கும் ஓர் ஒற்றுமை - இலங்கை தமிழினத்தின்; ஒப்பற்ற தலைவராய் இருந்த தலைவர் திரு. பிரபாகரனை விரும்புபவர்கள்.

         இவர்களுக்குப் பின்னிருக்கும் "சின்னஞ்சிறு கூட்டம்" - பெரும்பான்மயில், பிரபாகரன் எனும் அந்த மாவீரனின் அன்பர்களைக் கொண்டது. ஆனால், இக்கட்சித் தலைவர்கள், அந்த மாவீரனைப் பின்பற்றுகிறோம் - என்ற போர்வையில்; அவரை அசிங்கப்படுத்தும் செயலைச் செயகிரார்கள். உண்மையில், இவர்கள் தான் "இனத் துரோகிகள்" போல் தோன்றுகிறார்கள். "தமிழ்(தனி)-ஈழம்" கனவு, இனியும் வேண்டுமா??? - என்ற தலையங்கத்தில் சொல்லியது போல்; இவர்கள் தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு (அகதிகள்) கூட உருப்படியாய் ஏதும் செய்யவில்லை! இலங்கைத் தமிழர்களுக்கும் ஏதும் செய்யவில்லை. உண்மையில், இவர்கள் தமிழகம் கடந்த பகுதிகளில் நடக்கும் கொடுமைகளில் இருந்து; அங்குள்ள தமிழர்களுக்காகப் போராட வேண்டுமெனில் - அங்கு சென்று போராட வேண்டும். அதுதான் நியாயம்! சரி... இலங்கைப் பிரச்சனையில் கூட - இவர்களுக்கு கடவுச்சீட்டு கிடைக்காது போன்ற "நியாயமான (??!!)"...

           காரணங்கள் சொல்லப்படலாம். வெகு அருகில் இருக்கும் பெங்களூர் சென்று போராடுவதில் என்ன தடை இருக்கமுடியும்? பேருந்துகள் இயங்கவில்லை என்றாலும் கூட - இவர்களுக்கு - உலகத் தமிழர்கள் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கும் "வசதியான மகிழ்வுந்து" போதுமே?  எரிபொருளுக்குப் பணம் வேண்டுமெனில், நாம் கூட கொடுக்கலாம். பிரச்சனை நடக்கும் இடத்திற்கு செல்லாமல்; தமிழகத்தில் கூக்குரலிட்டு என்ன பயன்? சரி... அதையாவது - முறையாய் செய்கிறார்களா? உணர்ச்சிவயப்பட்டு இவர்கள் பேசும் "நாடகத்தனமான வசனங்களைக் கேட்டு" - அப்பாவிகள் தான் உயிரிழக்கிறார்கள். என்ன கொடுமை ஐயா இது? இம்மாதிரியான கொலைகள் மிகப்பெரிய "இனத் துரோகம்" இல்லையா? இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுத்த பின்னால், இவர்களின் அணுகுமுறையை மாற்றிக் கொ(ள்ள/ல்ல)ப் போகிறார்கள்? இவர்களைப் போன்றோர்களிடம், பின்வரும் கேள்விகளை எழுப்ப எண்ணுகிறேன்:
  • பிரச்சனைகள் நடக்கும் இடத்திற்கு சென்று போராடக் கூட வேண்டாம். அங்கு சென்று, சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்துப் பேசலாமே ஐயா? அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?
  • ஆளும் கட்சி செய்யவேண்டும் என்ற கருத்தில், எனக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! ஆனால், அவர்கள் இப்படி செய்திருக்கலாம்/அப்படி செய்திருக்கலாம் - என்று இலவசமாய் அறிவுரை வழங்குவதை விடுத்து - நீங்கள் அங்கு சென்று "தமிழகம் சார்பாய்" பேசலாமே?
  • ஆட்சியையும்/அதிகாரமும் கொடுத்தால் தான் - இம்மாதிரியான செயல்களை செய்யமுடியும் என்பது இல்லையே?! உண்மையான உணர்வு போதுமே?
  • எதிர்க்கட்சித் தலைவர் - தமிழக முதல்வர், வெறுமனே கடிதமே எழுதிக் கொண்டிருக்கிறார் - என்ற குற்றச்சாட்டை வைக்கிறார். அதை முழுதாய் ஏற்கிறேன்! தனது தந்தை (கழக தலைவர்) - இதை வலியுறுத்தினார்/அதை வலியுறுத்தினார் என்று சொல்கிறாரே?! - ஏன் இவர்(கள்) அந்த செயல்களைச் செய்யக்கூடாது? அந்த மாநில முதல்வரை இவர்(கள்) சென்று சந்திக்கலாமே?
  • சட்டசபையில், சபாநாயகர்கூட நடுநிலையாய் இல்லை என்று வாதாடி வெளியேறுகிறார்கள்! மறுக்கவில்லை; அப்படித்தான் நடக்கிறது. கர்நாடக மாநிலம் செல்ல - உங்களை யாரால் தடுக்கமுடியும் ஐயா? பிறகேன் செல்லமாட்டேன் என்கிறீர்?
  • நிலைமை இப்படியேத்தான் இருக்கப்போகிறது. அதைத்தான் நேற்றைய தலைமுறையில் குறிப்பிட்டிருந்தேன். இன்றைய எதிர்க்கட்சியினர் அடிக்கடி சொல்வதுபோல் "நாளை(யும்) ஆட்சி மாறும்! ஆனால், காட்சிகள் மாறாது!!" - ஒரே திரைப்படத்தை 2 மொழிகளில் எடுப்பது போல் - ஏற்று நடிக்கும் நடிகர்ளின் பாத்திரங்கள் தான் (ஆளும் கட்சி/எதிர்க்கட்சி) மாறும் - ஆனால் திரைக்கதை அப்படியேதான் இருக்கும்.
    எனக்கென்னவோ - இன்னும் அரசியல்வாதிகளைக் குறைகூறுவதில், எந்த நியாயமும் இருப்பதாய் தெரியவில்லை; குறைந்தது, இப்போதிருக்கும் அரசியல்வாதிகளை! இவர்கள் நாம் எதிர்பார்ப்பது போல், அதிநன்மையைக் கூட செய்யவேண்டியதில்லை. நேற்றைய தலையங்கத்தில் சொன்னது போல் - சாமான்ய மக்கள் பாதிக்காமல் காத்தாலே போதும். குறைந்தபட்சம்,  தன்னுடன் இருக்கும் "அப்பாவித் தொண்டர்களை" ஆவது நல்வழிப்படுத்திக் காக்கட்டும். அதற்கு, இவர்கள் "உணர்ச்சியைக் கிளப்பும்" வகையில் பேசாமல் இருத்தல் அவசியமாகிறது. இன்று கூட, 23 ஆண்டு கால கட்சி நடத்துபவர் "தேர்தல் நேரத்தில், ஒரு கட்சி மேல் குற்றம் சுமத்தியது போல்" - கர்நாடக அரசின் மேல் எந்த அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டை வைக்கிறார். "தமிழகம் எத்தியோப்பியா போல் ஆகிவிடும்!"  என்று கூக்குரல் இடுகிறார்! - ஒருவேளை, அவர் போன்றோரை இன்னமும் அரசியலில் இருந்து அகற்றவில்லை எனில், அப்படி நடக்கும் என்று... 

        "மறைமுகமாய்" சொல்கிறாரோ?! அவர்கள் இப்படியே தொடர்ந்து, கீழ்த்தரமான அரசியல் நடத்தட்டும் - அது அவர்களின் தேர்வு. அவர்கள் பின்னிருக்கும் அப்பாவிகளே! ஒரு குடும்பத்தில் கூட - உணர்ச்சியும்/ஆதிக்க மனப்பான்மையும் - எந்த நன்மையையும் பயப்பதில்லை! அதைத்தான், பெருகிவரும் "விவாகரத்து வழக்குகள்" நிரூபிக்கின்றன. அப்படியிருக்க, ஒரு நாட்டின் அரசியலில் - உணர்ச்சியும்/ஆதிக்கமும்/புரட்சியும் - எப்படி நன்மையளிக்கும்? அப்படிப் பேசும், தலைவர்களுக்கு இறுதிவரைப் புரியாமலேயே இருக்கட்டும். அதனால், அவர்களின் வாழ்வாதாரமோ (அல்லது) குடும்பமோ எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை! எனவே, நீங்களாவது இவற்றை உணர்ந்து - அதன்பின், அவர்கள் பின் செல்லுங்கள்! ஆம்... அவர்கள் பின்னே செல்லாதீர்கள் என்று சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை! ஆனால், கவனமோடு இருங்கள் என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. உங்களை நம்பி இருக்கும்...

"பெற்றோர்/மனைவி-மக்கள்/உடன்பிறந்தோர்/நட்பு/சுற்றம்"
இவர்களில் எவரேனும் ஒருவரையாவது மனதில் நிறுத்தி;
இம்மாதிரி நிகழ்வுகளைத் தவிருங்கள்!!!

குறள் எண்: 0412 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0412}

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்

விழியப்பன் விளக்கம்: செவிக்கு உணவான "கேட்டல்" கிடைக்காத நேரத்தில்; கேள்வியைத் தொடர்ந்திட, வயிற்றுக்கும் சிறிய அளவில் உணவளிக்க வேண்டும்.
(அது போல்...)
மனதை மகிழ்விக்கும் "சிந்தனை" இல்லாத சமயத்தில்; சிந்தனையைப் பெருக்கிட, உடலுக்கும் போதிய அளவில் மகிழ்வளிக்க வேண்டும்.
*****

நம் சுயத்தைக் காக்கும் வழி...


வெள்ளி, செப்டம்பர் 16, 2016

காவேரி பிரச்சனையில் என் பார்வை...


           "வழக்கம்போல்" - காவேரி பிரச்சனை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. "வழக்கம்போல்" என்ற சொல்லை அடிக்கோடிட காரணம், இது தொடர்ந்து நடந்து வருகிறது என்பதால் மட்டுமல்ல; மேலும், இது நமக்கு இயல்பான/வழக்கமான ஒன்றாய் மாறி வருகிறது என்பதை"யும்" உணர்த்தவே. நமக்கு என்றால் - பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் இருவருக்குமே! உண்மையிலேயே இது தீர்வு காண முடியாத பிரச்சனையா?! என்ற ஐயம் எழுகிறது. ஒருவேளை, பலரும் சொல்வது போல்; இம்மாதிரியான பிரச்சனைகளை - இருமாநில & மத்திய அரசுகளைச் சார்ந்த அரசியல்வாதிகளும் "தீர்க்க விரும்பவில்லையா?!" என்ற சந்தேகம் வலுக்கிறது. ஒருவேளை, இவ்விரு மாநிலங்களும்; மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியால் "நேரடியாக" ஆளப்படும்போதுதான் - இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வு வருமா? வெறும் பேச்சில் மட்டும்; இந்தியர்கள் அனைவரும் "சகோதர/சகோதரிகள்" என்று மார் தட்டிக் கொண்டால் போதுமா? உண்மையில் அப்படியோர்...

       ஒற்றுமை இருப்பின் - இம்மாதிரியான சூழலில் தானே தலையெடுக்க வேண்டும்? மாறாய், ஒருவரை ஒருவர்; "இப்படி அநாகரீகமாய்" தாக்கிக் கொள்வது எப்படி சகோதரத்துவம் ஆகும்? இப்படி ஒருவரை, மற்றொருவர் தாக்கும் அதிகாரத்தை எவர் கொடுக்கிறார்கள்? இதில், எந்த மாநிலத்தைச் சார்ந்தவரையும் - தனித்து குற்றம்சாட்ட ஏதுமில்லை! இரு மாநிலங்களைச் சார்ந்தவர்களும் செயகிறார்கள் என்பதில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதில் - எவர் எந்த விழுக்காட்டில் செய்திருக்கிறார்கள் என்ற அளவீடு அபத்தமானது. தவறில் ஏது - சிறியது? பெரியது?; தவறென்றால் தவறு! அவ்வளவுதான். இதில், இரு மாநில அரசியல் கட்சிகள் செய்யும் போராட்டங்கள்/ஆர்ப்பாட்டங்கள் குறித்து எனக்கு எந்த விவாதமும் இல்லை. அது அவர்களின் இயலாமையைத் தெளிவாய் உணர்த்தினாலும்; அதுதான் அவர்களின் இயல்பாகவும் ஆகிவிட்டது. அதைத் தவிர்த்து; அவர்களால் உருப்படியாய் ஏதும் செய்யமுடியாது. அவர்களின் தொழில்...

       அரசியல்! அதை அவர்கள் சரியாய் செய்கிறார்கள். எனவே, அவர்களைப் பற்றி விவாதிக்க பெரிதாய் ஏதுமில்லை. ஆனால் - சாமான்ய மக்கள் பாதிக்கப்படுவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. "உணர்ச்சி கலந்த" செயல் என்பது போன்ற எந்த காரணியாலும், இந்த இழிசெயல்களை நியாயப்படுத்தக் கூடாது. இரு தரப்பிலும், சில குழுக்கள் தான் இந்த செயல்களைச் செயகிறார்கள் என்பது தெரிந்தாலும் - இதைக் கூடவா, இரு மாநிலங்களைச் சார்ந்த அரசுகளால் தடுக்கமுடியாது? ஏதோ, இது இப்போதுதான் - முதன்முதலில் - திடீரென நடக்கிறது என்பதல்ல! இது தொடர்ந்து நடந்து வரும் ஒன்றுதான்; இனிமேலாவது, இம்மாதிரியான செயல்கள் நடக்கக்கூடாது எனில்...
  • இம்மாதிரி சாமானியர்களை தாக்கும் - எவரையும் எளிதில் விடக்கூடாது! தண்டனைகள் மிகக் கடுமையாய் ஆக்கப்பட வேண்டும் - இருமாநில அரசுகளும்; இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கும் எல்லா மாநில அரசுகளும்; அதற்குரிய சட்டங்களை உடனடியாய் வரையறுக்க வேண்டும்.
  • இவை தடுக்கப்படவில்லை எனில் - சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு; இதில் "மறைமுக" உடன்பாடு இருக்கிறது என்று பொருள்படும். அப்படியெனில், இரு மாநிலங்களிலும் உள்ள மற்ற மாநிலத்தவரை உடனடியாய் வெளியேற்றி விடலாம். இனிமேல், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர் தங்கள் மாநிலத்திற்குள்  நுழையக்கூடாது என்று சட்டம் தீட்டட்டும்.
  • அவரவர், அவரவர் மாநிலத்தில் இருந்துவிட்டால் - இம்மாதிரியான சூழலில், சாமான்யர்கள் தாக்கப்பட்ட மாட்டார்கள். இன்றையக் காலக்கட்டத்தில் - வல்லரசு ஆகவேண்டும் என்ற கனவில் இருக்கும் ஒரு நாட்டில் - இம்மாதிரியான காட்டுமிராண்டித் தனமான செயல்கள் நடைபெறுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது!
        என்னுடைய நோக்கம், இரு மாநிலங்களும் பிளவுபட்டு நிற்கவேண்டும் என்பதல்ல! மாறாய், எப்போதும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்பதே. அப்படி இருக்கமுடியாதெனில், எப்போதும் சேர்ந்து"ம்" இருக்கவேண்டாம். இங்கே இருக்கும் பிரச்சனை என்ன? ஒரு மாநிலம், இன்னோர் மாநிலத்திற்கு தண்ணீர் கொடுக்கவேண்டும். குடும்ப உறுப்பினர் ஒருவர், உடன்பிற(ந்த/வா) இன்னொருவரிடம் கோரும் உதவி போன்றது தான் இது. நாம் எல்லோரும் "சகோதர/சகோதரி" எனில் - கேட்பதும்/கொடுப்பதும் தார்மீகம் ஆகிறது. வேண்டும் என்போர் கேட்கிறார்; இருப்போர் கொடுக்கலாம் (அல்லது) மறுக்கலாம்! மறுக்கும்போது, உரிமையோடு - வற்புறுத்தி கேட்பதும் நிகழலாம். அதையும், முறையான விதத்தில் மறுக்க வேண்டும். இது சுமூகமாய் நடக்காத போது, குடும்பத் தலைவர் என்ற நிலையில் இருக்கும் "உச்ச நீதிமன்றம்" இந்த நிகழ்வுக்குள் வருகிறது. இவ்வளவு கொடுங்கள் என்று பரிந்துரை செயகிறது. மொத்தத்தில்...

        இது, ஒரு குடும்பத்தில் நடைபெறும் நிகழ்வு போன்றது. கேட்பதும்/கொடுப்பதும்/மறுப்பதும் - சம்பந்தப்பட்டவர் உரிமையாகிறது. இவை எல்லாமும் பேச்சாய்/விவாதமாய் தான் இருக்கவேண்டும். அதை விடுத்து - சிறு குழுக்களால் - ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வது எப்படி நியாயமாகும்? அதிலும், சாமான்யர்கள் தாக்கப்படுவது எப்படி நியாயமாகும்? சம்பந்தப்பட்ட அரசுகள், இந்த முறையாவது - இதற்கு நிரந்தரமான தீர்வை வகுக்கவேண்டும்! ஒவ்வொரு முறையும் நடப்பது போல் - சரி, இப்போது நிலைமை சுமூகமாக ஆகிவிட்டது; மீண்டும் அடுத்த முறை நிகழும் வரை - நம் அரசியலை நடத்திக் கொண்டிருக்கலாம் என்று தொடர்ந்து செயல்பட்டால் அதில் எந்த நியாயமும் இல்லை. படித்தவர்கள்/இளைஞர்கள் அரசியலுக்குள் நுழையவேண்டும்; காலம் காலமாய் அரசியல் செய்வோரை அரசியலில் இருந்து ஒதுக்கவேண்டும். இவர்களால், இனியும் - ஏதேனும் நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பது; நம் இயலாமையை காட்டுகிறது.

நம் எதிர்ப்பை - இதுபோன்ற வகையிலாவது காண்பிக்க "ஆரம்பிப்போம்"!!!

குறள் எண்: 0411 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0411}

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

விழியப்பன் விளக்கம்: கேட்பதால் விளையும் அறிவுச் செல்வமானது, பல்வகைச் செல்வங்களில் ஒன்றாகும்; அச்செல்வம், செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
(அது போல்...)
பிறப்பால் கிடைக்கும் பெற்றோர் உறவானது, பல்வகை உறவுகளில் ஒன்றாகும்; அவ்வுறவு, உறவுகள் அனைத்திலும் சிறந்ததாகும்.
*****

வியாழன், செப்டம்பர் 15, 2016

அதிகாரம் 041: கல்லாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 041 - கல்லாமை

0401.  அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
           நூலின்றிக் கோட்டி கொளல்

           விழியப்பன் விளக்கம்: 
அறிவை நிரப்பும் நூல்களைக் கற்காமல், கற்றோர் அவையில் 
           பேசுதல்; முறையான சூதாடும் அரங்கம் இல்லாமல், சூதாடுதல் போன்றதாகும்.
(அது போல்...)
           குடும்பம் நடத்தும் தகுதியைக் கொண்டிராமல், இல்லற வாழ்வில் நுழைதல்; உண்மையான 
           ஓட்டுநர் உரிமம் இல்லாமல், வாகனம்-ஓட்டுதல் போன்றதாகும்.
        
0402.  கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
           இல்லாதாள் பெண்காமுற் றற்று

           விழியப்பன் விளக்கம்: கல்வியறிவை வளர்க்காதவர், சொற்பொழிவாற்ற விரும்புவது; 
           இரண்டு முலையும் வளர்ச்சியடையாத பெண், காமத்திற்கு ஆசைப்படுவது போன்றதாகும்.
(அது போல்...)
           திறமையைக் கொண்டிராதவர், உலகப்போட்டியில் பங்கேற்பது; இராணுவப் பயிற்சிப் 
           பெற்றிடாத ஒருவர், எல்லைப்போருக்கு தயாராவது போன்றதாகும்.
           
0403.  கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
           சொல்லா திருக்கப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: கற்றோர் அவையில், பேசாதிருக்கும் திண்மையைப் பெற்றிடின்; 
           கற்காத மனிதர்களும், அதிக நன்மை அளிப்பர்.
(அது போல்...)
           போர்க் களத்தில், புறமுதுகிடாத மனவலிமைப் பெற்றிருப்பின்; வலிமையற்ற வீரர்களும், 
           பெரு வெற்றிக்கு பங்களிப்பர்.

0404.  கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
           கொள்ளார் அறிவுடை யார்

           விழியப்பன் விளக்கம்: "படிக்காத மேதை" எனப்படும், கற்காதவரின் அறிவு மிக நன்றாக  
           இருப்பினும்; அதைக் கல்விபயின்ற சான்றோர்கள் ஒப்புக்கொள்ள தயங்குவர்.
(அது போல்...)
           "இணைந்து வாழ்தல்" முறையில், திருமணமாகாதோரின் இல்வாழ்வு மிக நன்றாக 
           இருப்பினும்; அதைத் திருமணமான பெரியோர்கள் ஏற்க மறுப்பர்.

0405.  கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
           சொல்லாடச் சோர்வு படும்

           விழியப்பன் விளக்கம்: 
கற்காதவரின் தற்பெருமை எண்ணம், கற்றவர்களுடன் ஒன்றுகூடி 
           உரையாடும் போது; அவர்களின் பேச்சாலேயே, உறுதியாய் கெடும்.
(அது போல்...)
           அறமற்றவரின் போலியான தோற்றம், அறமுள்ளோருடன் சேர்ந்து பழகும் போது; 
           அவர்களின் செயலாலேயே, நிச்சயம் அழியும்.

0406.  உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
           களரனையர் கல்லா தவர்

           விழியப்பன் விளக்கம்: 
கற்காதவர் உயிரோடிருப்பது, அவர்கள் “உயிரோடு” இருக்கிறார்கள் 
           என்ற அளவீட்டைத் தவிர்த்து; பயன்படாத மண்ணைக் கொண்ட, வறண்ட நிலத்திற்கே 
           ஒப்பாவர்.
(அது போல்...)
           நேர்மையற்றோர் ஆட்சியிலிருப்பது, அவர்கள் “ஆட்சியில்” இருக்கிறார்கள் என்ற 
           ஆதாரத்தைத் தவிர; பயனற்று பூத்துக் காய்க்கும், எட்டி மரத்திற்கே இணையாவர்.

0407.  நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
           மண்மாண் புனைபாவை யற்று

           விழியப்பன் விளக்கம்: ஆழமாயும்/சிறப்பாயும் பகுத்தறியும் ஆற்றலற்ற, கற்காதவரின் 
           எழில்மிகு தோற்றம்;  களிமண்ணால் சிறப்பாய் செய்த, அழகிய பெண்சிலைக்கு 
           இணையாகும்.
(அது போல்...)
           வாய்மையுடனும்/அறமுடனும் வாழும் இயல்பற்ற, இல்லறத்தின் அழகிய மாடமாளிகை; 
           கற்பனையால் தத்ரூபமாக புனைந்த, இனிய கனவுக்கு ஒப்பாகும்.

0408.  நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
           கல்லார்கண் பட்ட திரு

           விழியப்பன் விளக்கம்: கற்றறிந்த நல்லவர்களுக்கு நேரும், வறுமையை விட; 
           கற்காதவர்களிடம் சேரும் செல்வம், அதீத துன்பமானதாகும்.
(அது போல்...)
           நேர்மையான அறமுணர்ந்தோர் அடையும், தோல்வியை விட; நேர்மையற்றோர் அடையும் 
           வெற்றி, அதிக கொடியதாகும்.

0409.  மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
           கற்றார் அனைத்திலர் பாடு
    
           விழியப்பன் விளக்கம்: வசதியானக் குடும்பத்தில் பிறந்தும், கற்காதவர் எனின்; வறியக் 
           குடும்பத்தில் பிறந்தும், கற்றவரின் பெருமைக்கு இணையற்றவர் ஆவர்.
(அது போல்...)
           ஆகச்சிறந்த நிறுவனத்தில் பணிபுரிந்தும், திறமையில்லாதவர் எனின்; சிறுதொழில் 
           நிறுவனத்தில் பணிபுரியும், திறமையானவரின் சிறப்புக்கு ஒப்பற்றவர் ஆவர்.

0410.  விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
           கற்றாரோடு ஏனை யவர்

           விழியப்பன் விளக்கம்:
பகுத்தறிவை விரிவாக்கும் நூல்களைக் கற்றவருடன், மற்றவர்களை 
           ஒப்பிடுதல்; விலங்குகளோடு, மனிதர்களை ஒப்பிடுவதற்கு இணையாகும்.
(அது போல்...)
           நலிந்தோரை வாழ்விக்கும் அரசாட்சியை அளிப்பவருடன், பிறரை ஒப்பிடுதல்; பொன்னுடன், 
           பித்தளையை ஒப்பிடுவதற்குச் சமமாகும்.
*****