வெள்ளைத் தாளின் கரும்புள்ளியைத்
தள்ளிவைத்து, எஞ்சியிருக்கும் பரந்த
வெள்ளையைக், கவனித்தல் ஓர்கலை!
பள்ளியேதுமில்லை இக்கலை கற்பிக்க!
வெள்ளைத்தாளோ மனிதவுறவோ! கூர்
முள்ளைஒதுக்கி, நல்ரோசாவை நாமும்
கொள்வதுபோல்; நல்லல்லதை ஒதுக்கி
வெள்ளைத் தாளதையும், மனிதவுறவையும்
வெள்ளுள்ளத்தால் அணுகும் உறுதியேற்று;
பள்ளியில்கற்க இயலா இத்திறத்தையும்;
பிள்ளைகளுக்கும் இனிதே கற்பிப்போம்!
வெள்ளை(யும்) உள்ளமும் ஒளிவீசட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக