திங்கள், செப்டம்பர் 05, 2016

அதிகாரம் 040: கல்வி (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி

0391.  கற்க கசடறக் கற்பவை கற்றபின்
           நிற்க அதற்குத் தக

           விழியப்பன் விளக்கம்: கற்பவை எதுவாயினும்குறையேதுமின்றி கற்கவேண்டும்அப்படிக் 

           கற்றபின்கற்றவண்ணம் வாழ்தல் வேண்டும்.
(அது போல்...)
           சிந்திப்பது எதுவாயினும்அறத்தவறின்றி சிந்திக்கவேண்டும்அப்படிச் சிந்தித்தபின்
           சிந்தித்தவாறு செயல்படுதல் வேண்டும்.
        
0392.  எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
           கண்ணென்ப வாழும் உயிர்க்கு

           விழியப்பன் விளக்கம்: எண்களை அடிப்படையாகக் கொண்ட, கணிதம் போன்ற கல்வி; 

           எழுத்துகளை அடிப்படையாகக் கொண்ட, மற்ற கல்வி - இவ்விரண்டும், உலக உயிர்கட்கு 
           இரு கண்களாகும். 
(அது போல்...)
           சிந்தனைகளை ஒட்டியத் தழுவிய, தேடல் போன்ற முனைப்பு; செயல்களை ஒட்டியத் 
           தழுவிய, மற்ற முனைப்பு - இவையிரண்டும், பகுத்தறிய முயற்சிப்போர்க்கு இரு கைகளாகும்.
           
0393.  கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
           புண்ணுடையர் கல்லா தவர்

           விழியப்பன் விளக்கம்: 
கற்றோரே, பார்வையுடைய விழிகளை உடையவராவர்! கல்வி 

           கற்காதவர்கள், முகத்தில் - பார்வையற்ற இரண்டு வெற்றிடங்களை உடையவர் ஆவர். 
(அது போல்...)
           புரிதலுடையோரே, கேட்கின்ற செவிகளை உடையவராவர்! புரிதல் அற்றவர்கள், தலையில் 
           - கேட்காத இரண்டு ஓட்டைகளை உடையவர் ஆவர்.

0394.  உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
           அனைத்தே புலவர் தொழில்

           விழியப்பன் விளக்கம்: ஒன்றுகூடி, பகுத்தறிவு விரிவடைய மகிழ்ந்து; பின் மனது வருந்தப் 
           பிரிவதே, மொழியில் புலமடைந்த புலவர்களின் இயல்பாகும்.  
(அது போல்...)
           உறவாடி, உடல் அயர்ச்சிக்க ஆர்ப்பரித்து; பின் உள்ளம் உருக விலகுவதே, 
           சுபநிகழ்ச்சிகளில் இணையும் உறவுகளின் தன்மையாகும்.

0395.  உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
           கடையரே கல்லா தவர்

           விழியப்பன் விளக்கம்: 
செல்வந்தர் முன்பு, வறியவர் நிற்பது போல், கற்றவரை மதித்துக் 

           கற்போரே, முதன்மையடைவர்! அப்படிக் கற்காதோர், பின்னடைவார்!
(அது போல்...)
           இறைவன் முன்பு, பக்தர்கள் நிற்பது போல், பெற்றோரை வணங்கி வளர்வோரே, | 
           உயர்ந்தவராவார்! அப்படி வலராதோர், சாதாரணராவர்!

0396.  தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
           கற்றனைத் தூறும் அறிவு


           விழியப்பன் விளக்கம்: தோண்டும் அளவிற்கு நீரூற்றுப் பெறும், கிணறு போல்; ஒருவர் கற்கும் 
           அளவுக்கேற்ப, பகுத்தறிவு விரிவடையும். 
(அது போல்...)
           தேர்வானோர் திறனுக்கேற்ப வலிமையாகும், சட்டமன்றம் போல்; தனிநபரின் 
           சுயவொழுக்கம் சார்ந்து, சமூகம் வளர்ச்சியடையும்.

0397.  யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
           சாந்துணையுங் கல்லாத வாறு

           விழியப்பன் விளக்கம்: 
“எந்த நாடும்/ஊரும், கற்றவர்களுக்கு, தன் சொந்த நாடும்/ஊரும் 

           ஆகும்!” எனும்போது; தம் பிறப்பு அழியும்வரை, ஒருவர் கற்காமல் இருப்பதேன்?  
(அது போல்...)
           “எந்த வீடும்/மக்களும், ஆட்சியாளருக்கு, தம் சொந்த வீடும்/மக்களும் ஆகும்!” 
           எனும்போது; தம் பதவி முடியும்வரை, அரசியலார் பொதுநலன் காக்காததேன்?

0398.  ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
           எழுமையும் ஏமாப் புடைத்து

           விழியப்பன் விளக்கம்: 
ஒரு பிறப்பில், ஒருவர் கற்ற கல்வி; அவருக்கு அப்பிறவி மட்டுமன்றி, 

           ஏழு பிறவிகளிலும் நன்மையளிக்கும் தன்மையுடையது.  
(அது போல்...)
           ஒரு சமயத்தில், ஒருவர் செய்த பொதுப்பணி; அவரின் தலைமுறை மட்டுமன்றி, மற்ற 
           தலைமுறைக்கும்  புகழளிக்கும் வலிமையுடையது.

0399.  தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
           காமுறுவர் கற்றறிந் தார்

           விழியப்பன் விளக்கம்: 
தான் இன்பமடைந்த கல்வியால், இவ்வுலகம் இன்புறுவது கண்டு; 

           கற்றறிந்த சான்றோர்கள், கல்வியின் மேல் மோகம் கொள்வர்.  
(அது போல்...)
           தமக்கு மகிழ்வளித்த மகளால், மருபெற்றோரும் மகிழ்வதைக் கண்டு; உன்னதமானப் 
           பெற்றோர்கள், மகளின் மீது தீராப்பாசம் கொள்வர்.

0400.  கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
           மாடல்ல மற்றை யவை

           விழியப்பன் விளக்கம்: 
கல்வியே, ஒருவருக்கு அழிவில்லாத செல்வமாகும்; மற்ற எவ்வகை 

           செல்வமும், செல்வமே அல்ல!  
(அது போல்...)
           மனசாட்சியே, ஒருவரை பிழையின்றி மதிப்பிடும்; மற்ற எந்தவொரு மதிப்பீடும், மதிப்பீடே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக