வெள்ளி, நவம்பர் 10, 2017

குறள் எண்: 0831 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை; குறள் எண்: 0831}

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்

விழியப்பன் விளக்கம்: நட்பைச் சேர்ப்பதில், அறியாமை என்பது என்னவெனில்; தீமை அளிப்போரை ஏற்றுக்கொண்டு, நன்மை அளிப்போரை விலகிச்செல்ல விடுவதாகும்.
(அது போல்...)
ஆட்சியைத் தேர்ந்தெடுப்பதில், குற்றம் என்பது யாதெனில்; இலவசம் அளிப்போருக்கு வாக்களித்து, ஊழலொழிக்க முனைவோரை தோற்கடிக்கச் செய்வதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக