புதன், நவம்பர் 01, 2017

குறள் எண்: 0822 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 083 - கூடா நட்பு; குறள் எண்: 0822}

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்

விழியப்பன் விளக்கம்: ஒருமித்தவர் போன்று தோற்றமளித்து, செயல்களில் ஒன்றாமல் இருப்போரின் நட்பு; அன்பானவர் போல் நடித்த, அன்பிலா விலைமகளரின் மனம் போல் மாறுபடும்.
(அது போல்...)
கர்மவீரர் போல் முழக்கமிட்டு, கர்மத்தில் திறமின்றி இருப்போரின் ஆட்சி; உழைப்பாளி போல் பழகிய, உழைப்புணரா முதலாளிகளின் அதிகாரம் போல் உருமாறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக