18.04.2016 அன்று "புலால் மறுத்தல்" எனும் அதிகாரம் 026-இற்கான விளக்கவுரை எழுதும் முன், புலால் உண்பதை நிறுத்தியி. ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னர் நிறுத்தி இருப்பினும் ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னர் "மீண்டும் புலால் உண்ணும்" எண்ணம் எழுந்தது. புலாலை மறுக்கும் முடிவெடுத்தவுடன், அது சார்ந்து நண்பர்களுடன் நிறைய விவாதித்தேன். மிக அதிகமாய் விவாதித்தது, காதர் எனும் நண்பனிடம்! எனவே, மீண்டும் உண்ணும் முடிவெடுத்தவுடன் அவனிடம் தெரிவித்தேன்; வரவேற்று, மகிழ்ச்சியென பதிலளித்தான். இன்னமும், புலாலை மறுப்பதே சிறந்தது என்றே நம்பினாலும்; சூழல் காரணமாய் இன்று (11.11.2017) மீண்டும் புலால் உண்ண ஆரம்பித்தேன். எதைச் சொல்லியும், இதை நியாயப்படுத்த விரும்பவில்லை! இடைவெளிக்குப் பின், முதன் முதலாய் சாப்பிட்ட உணவுதான் மேலுள்ள புகைப்படத்தில் இருப்பது. இம்முயற்சியில், தோற்றிருக்கிறேன் என்பதை இங்கே பதிவு செயகிறேன்!
சில முடிவுகள் இப்படித்தான்! முடிவெடுக்கும் போது இருக்கும் உறுதி...
அதன் பின்னர் இல்லாமல் போகும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக