0051. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
விழியப்பன் விளக்கம்: இல்லறத்தின் மாண்பை உணர்ந்து, மணந்தவரின் வருவாய்க்குள்
குடும்பம் நடத்தும் தகுதியே - வாழ்க்கைத் துணையின் சிறப்பம்சமாகும்.
குடும்பம் நடத்தும் தகுதியே - வாழ்க்கைத் துணையின் சிறப்பம்சமாகும்.
(அதுபோல்...)
தொழில் தர்மத்தை மதித்து, நுகர்வோரின் நன்மைக்காகவும் பெருந்தொழில் செய்யும்
அறமே - தொழில் அதிபர்களின் இயல்பாகும்.
0052. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினு மில்
விழியப்பன் விளக்கம்: பெருமைசேர் இல்ல-அறம் இல்லாதவரை, வாழ்க்கைத்துணையாய்
கொண்ட இல்வாழ்க்கை; பல்வித பெருமைகள் உடையினும் சிறப்படையாது.
கொண்ட இல்வாழ்க்கை; பல்வித பெருமைகள் உடையினும் சிறப்படையாது.
(அது போல்...)
மகிழ்ச்சிசேர் மனித-நேயம் இல்லாதவரை, முன்னுதாரணமாய் கொண்ட இளைஞர்கள்;
பல்வேறு திறமைகள் இருந்தும் பயனில்லை.
இல்லவள் மாணாக் கடை
விழியப்பன் விளக்கம்: நல்லறமும்/நற்பண்பும் கொண்ட இல்லத்துணை அமைந்தால், ஓர்
இல்லத்தில் இல்லாததென்ன? அப்படி அமையாமல், இருப்பதுதான் என்ன?
இல்லத்தில் இல்லாததென்ன? அப்படி அமையாமல், இருப்பதுதான் என்ன?
(அது போல்...)
நல்மண்ணும்/நீர்வளமும் இணையும் வாய்ப்புக் கிடைத்தால், ஓர் நிலத்தில்
விளையாததென்ன? அப்படி இணையாமல், விளைவதுதான் என்ன?
0054. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்
விழியப்பன் விளக்கம்: உள்ளத்தால் கற்புடனிருக்கும், நிலையைக் கடைப்பிக்கும்
உறுதியிருப்பின்; பெண்ணை விட உயர்ந்தவை வேறெவை உள்ளன?
உறுதியிருப்பின்; பெண்ணை விட உயர்ந்தவை வேறெவை உள்ளன?
(அது போல்...)
ஒழுக்கநெறியில் பயணிக்கும், அடிப்படையை நிலைநாட்டும் வைராக்கியமிருப்பின்;
மனிதனை விட உயர்சக்தி வேறெது இருக்கும்?
பெய்யெனப் பெய்யும் மழை
விழியப்பன் விளக்கம்: தெய்வத்தைத் தொழாமல், கணவனைத் தொழுது; காலையில் எழும்
குணமுடையவள், பெய்யென்று சொன்னால் மழை பொழியும்.
சுற்றம் மந்திரம்போல் கடைபிடிக்கும்.
குணமுடையவள், பெய்யென்று சொன்னால் மழை பொழியும்.
(அது போல்...)
பணத்தை மதிக்காமல், குணத்தை மதித்து; உறவுகளைப் பேணுவோர் சொல்வதை; அவர்சுற்றம் மந்திரம்போல் கடைபிடிக்கும்.
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
விழியப்பன் விளக்கம்: தன்னையும், தன்னை கொண்டவனையும் பேணிக்காத்து;
குடும்பத்தின் புகழையும் காத்து, சோர்வற்று இருப்பவளே மனைவியாவாள்.
குடும்பத்தின் புகழையும் காத்து, சோர்வற்று இருப்பவளே மனைவியாவாள்.
(அது போல்...)
தன்னையும், தனைச்சார்ந்த மக்களையும் பாதுகாத்து; ஜனநாயக நீதியை நிலைநாட்டி,
தடுமாறாது ஆள்பவரே ஆட்சியாளர்.
நிறைகாக்கும் காப்பே தலை
விழியப்பன் விளக்கம்: சிறைவாசம் போன்ற காவல் என்ன விளைவிக்கும்? எண்ண-
விடுதலையே, பெண்களை முழுமைப்படுத்துவதன் முதன்மையாகும்.
விடுதலையே, பெண்களை முழுமைப்படுத்துவதன் முதன்மையாகும்.
(அது போல்...)
கடுமையான சட்டங்கள் மட்டும் எவற்றை மாற்றும்? சுய-ஒழுக்கமே, மனிதத்தை
விதைப்பதன் முதற்படியாகும்.
விதைப்பதன் முதற்படியாகும்.
0058. பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
விழியப்பன் விளக்கம்: தன்னை மனைவியாகப் பெற்றவரின், அரவணைப்பைப் பெறும்
பெண்கள்; வானவர் வாழும் விண்ணுலகின் பெருஞ்சிறப்பைப் பெறுவர்.
பெண்கள்; வானவர் வாழும் விண்ணுலகின் பெருஞ்சிறப்பைப் பெறுவர்.
(அது போல்...)
தன்னை தலைவனாக ஏற்றோரின், பேரன்பைப் பெறும் தலைவர்கள்; சரித்திர
நாயகர்களின் பட்டியலில் முன்னிலை வகிப்பர்.
நாயகர்களின் பட்டியலில் முன்னிலை வகிப்பர்.
ஏறுபோல் பீடு நடை
விழியப்பன் விளக்கம்: புகழ் சேர்க்கும் இல்லத்தவள் இல்லாதவர்க்கு, தம்மை இகழ்வோர்
முன்பு; சிங்கம்போல், இன்பத்திமிருடன் நடத்தல் சாத்தியமில்லை.
முன்பு; சிங்கம்போல், இன்பத்திமிருடன் நடத்தல் சாத்தியமில்லை.
(அது போல்...)
மனத்தூய்மை அளிக்கும் அறநெறி அற்றோர், தம்மீதான விமர்சங்களை எதிர்த்து;
சான்றோர்போல், தலைநிமிர்த்தி வாதிடுதல் இயலாது.
நன்கலம் நன்மக்கட் பேறு
விழியப்பன் விளக்கம்: இல்லத்தரசியின் நற்பண்பே இல்லறத்தின் அழகாகும்! அவள்
பெற்றெடுக்கும் நற்பிள்ளைகள்; அவ்வழகை மெருகூட்டும், நல்ல அணிகலன்கள் ஆவர்.
பெற்றெடுக்கும் நற்பிள்ளைகள்; அவ்வழகை மெருகூட்டும், நல்ல அணிகலன்கள் ஆவர்.
(அது போல்...)
தனிமனித ஒழுக்கமே சமுதாயத்தின் ஆன்மாவாகும்! அவ்வொழுக்கம் விதைக்கும்
அறநெறிகள்; அவ்வான்மாவை உயிர்ப்பிக்கும், உடல் உடலுறுப்புகள் ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக