பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்
0061. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற
விழியப்பன் விளக்கம்: பெறக்கூடியவற்றில், பகுத்தறிவுடையப் பிள்ளைகளைப் பெறும்
பேறைவிட; உயர்ந்த வேறொன்றை நாமறியோம்.
பேறைவிட; உயர்ந்த வேறொன்றை நாமறியோம்.
(அது போல்...)
வாழ்வியலில், தேடலுடைய சிந்தனைகளை விதைக்கும் ஒழுக்கத்தைவிட;
மேன்மையளிக்கும் வேறொன்று ஏதுமில்லை.
0062. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
விழியப்பன் விளக்கம்: பழியில்லாப் பண்புடைய பிள்ளைகளைப் பெற்றிடின்; ஏழு
பிறப்பிலும், தீயவையேதும் நம்மை சேர்ந்திடாது.
பிறப்பிலும், தீயவையேதும் நம்மை சேர்ந்திடாது.
(அது போல்...)
பிழையில்லாத் திறனுடையக் கலைஞர்களை உடையின்; ஏழு சுவரங்களிலும்,
குறையேதும் இசையில் கலந்திடாது.
தம்தம் வினையான் வரும்
விழியப்பன் விளக்கம்: ஒருவரின் செல்வம் என்பது அவரது குழந்தைகளே; அத்தகைய
செல்வம், அவரவரின் வினைப்பயனால் நிர்ணயிக்கப்படும்.
செல்வம், அவரவரின் வினைப்பயனால் நிர்ணயிக்கப்படும்.
(அது போல்...)
ஒருவரின் ஒழுக்கம் என்பது அவரது செயல்பாடுகளே; அத்தகைய ஒழுக்கம்,
அவரவரின் சிந்தனையால் பண்படும்.
0064. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
விழியப்பன் விளக்கம்: நம் பிள்ளைகளின், சின்னஞ்சிறு கை துழாவுமேயானால்; கூழ் கூட,
அமிழ்தைவிட இனிமையானதாகும்.
அமிழ்தைவிட இனிமையானதாகும்.
(அது போல்...)
நம் உறவுகளின், கடுகளவு ஆறுதல் கிடைக்குமேயானால்; மலையளவு இன்னலும்,
கால்மிதிக்கும் சிறுகல்லாகும்.
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
விழியப்பன் விளக்கம்: பிள்ளைகளைத் தழுவுதல், உடலுக்கு இன்பம்; மற்றும், அவர்கள்
பேசுவதைக் கேட்பது செவிக்கு இன்பமாகும்.
பேசுவதைக் கேட்பது செவிக்கு இன்பமாகும்.
(அது போல்...)
உடலைப் பேணுதல், குடும்பத்திற்கு வளம்; மற்றும், உள்ளிருக்கும் ஆன்மாவைப்
பேணுதல் சமுதாயத்திற்கு வளமாகும்.
மழலைச்சொல் கேளா தவர்
விழியப்பன் விளக்கம்: பிள்ளைகளின் மழலைப் பேச்சைக் கேளாதவர்களே; குழல்
மற்றும் யாழ் இவைகளிலிருந்து வரும் ஒலியை - இனிதென்பர்.
மற்றும் யாழ் இவைகளிலிருந்து வரும் ஒலியை - இனிதென்பர்.
(அது போல்...)
அறவழியில் பயணிக்கும் வைராக்கியம் இல்லாதவர்களே; குற்றம் மற்றும் முறையற்றச்
செயல்களின் மூலம் பயணிப்பதை - சரியென்பர்.
முந்தி யிருப்பச் செயல்
விழியப்பன் விளக்கம்: அவையின் நாயகர்களாக இருக்கச்செய்தலே; ஓர் தந்தை தன்
பிள்ளைகளுக்கு செய்யக்கூடிய நன்மையாகும்.
பிள்ளைகளுக்கு செய்யக்கூடிய நன்மையாகும்.
(அது போல்...)
தலைசிறந்தக் குடிமக்களாக இருக்கவைப்பதே; ஓர் தலைவன் தன் நாட்டுமக்களுக்குச்
செய்யும் கடமையாகும்.
0068. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
விழியப்பன் விளக்கம்: நம் பிள்ளைகள் அறிவுடையவர்களாய் இருப்பது, நம்மைவிட;
அகண்ட மண்ணுலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும், அதிக மகிழ்வளிக்கும்.
அகண்ட மண்ணுலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும், அதிக மகிழ்வளிக்கும்.
(அது போல்...)
தன் தொண்டர்கள் நற்தலைவர்களாய் வளர்வது, தன்னைவிட; பரந்த நாட்டிலுள்ள
எல்லா மக்களுக்கும், அதிக நன்மையளிக்கும்.
0069. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
விழியப்பன் விளக்கம்: தன்பிள்ளைகளைச் சான்றோர் எனப், போற்றப்படுவதைக் கேட்கும்
தாய்; அவர்களை ஈன்றெடுத்தப் பொழுதைவிட, பேர்மகிழ்ச்சி அடைவாள்.
தாய்; அவர்களை ஈன்றெடுத்தப் பொழுதைவிட, பேர்மகிழ்ச்சி அடைவாள்.
(அது போல்...)
தன்பிள்ளைகள், முதன்முதலாய் அப்பா என்றழைக்கக் கேட்கும் தந்தை; அவர்கள்
கருவடைந்த நேரத்தைவிட, பன்மடங்கு ஆனந்தமடைவான்.
என்னோற்றான் கொல்எனும் சொல்
விழியப்பன் விளக்கம்: "இவர்களின் தந்தை எத்தகைய நோன்பு நோற்றிருப்பான்?" என்று
பிறரை வியக்கவைப்பதே; பிள்ளைகள், தந்தைக்கு செலுத்தும் நன்றிக்கடனாம்.
பிறரை வியக்கவைப்பதே; பிள்ளைகள், தந்தைக்கு செலுத்தும் நன்றிக்கடனாம்.
(அது போல்...)
"இவர்களின் ஆட்சியாளர் என்ன வரம் பெற்றிருப்பார்??" என்று பிறரைப் புகழவைப்பதே;
குடிமக்கள், ஆள்பவருக்குக் கொடுக்கும் ஊக்கமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக