திங்கள், அக்டோபர் 05, 2015

குறள் எண்: 0064 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்குறள் எண்: 0064}

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 
சிறுகை அளாவிய கூழ்

விழியப்பன் விளக்கம்: நம் பிள்ளைகளின், சின்னஞ்சிறு கை துழாவுமேயானால்; கூழ் கூட, அமிழ்தைவிட இனிமையானதாகும்.
(அது போல்...)
நம் உறவுகளின், கடுகளவு ஆறுதல் கிடைக்குமேயானால்; மலையளவு இன்னலும், கால்மிதிக்கும் சிறுகல்லாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக