சனி, அக்டோபர் 03, 2015

குறள் எண்: 0062 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்குறள் எண்: 0062}

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
பண்புடை மக்கட் பெறின்

விழியப்பன் விளக்கம்: பழியில்லாப் பண்புடைய பிள்ளைகளைப் பெற்றிடின்; ஏழு பிறப்பிலும், தீயவையேதும் நம்மை சேர்ந்திடாது.
(அது போல்...)
பிழையில்லாத் திறனுடையக் கலைஞர்களை உடையின்; ஏழு சுவரங்களிலும், குறையேதும் இசையில் கலந்திடாது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக